சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

க்ரீன் சிக்னல்.. அறிவாலயத்தில் இருந்து சுதீஷுக்கு பறந்த முக்கிய தகவல்.. அதிமுகவும் ரெடியாகிறது..!

உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக போட்டியிடுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலினை சந்திப்பதற்கான முயற்சியில் குதித்துள்ளாராம் தேமுதிக சுதீஷ்.. இதையடுத்து உள்ளாட்சி தேர்தலுக்கான மும்முரம் தமிழகத்தில் ஆரம்பமாகி உள்ளது.

நடக்க போகும் உள்ளாட்சி தேர்தலுக்கு திமுக, பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன.. ஆனால், அதிமுக அமைதியாக இருந்து வந்தது.

இந்தியாவில் நவம்பரில் கொரோனா 3-வது அலை உச்சம் பெறும்.. ஆய்வில் பரபரப்பு தகவல்.. ஷாக் ரிப்போர்ட்! இந்தியாவில் நவம்பரில் கொரோனா 3-வது அலை உச்சம் பெறும்.. ஆய்வில் பரபரப்பு தகவல்.. ஷாக் ரிப்போர்ட்!

கடந்த ஒரு மாதமாகவே, மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி போனை போட்டு தெம்பூட்டி வருவதாகவும், சட்டமன்ற தேர்தலில் விட்டதை இதில் மொத்தமாக பிடித்துவிடலாம் என்று நம்பிக்கை தந்து வருவதாகவும் செய்திகள் பரபரத்தன.

 உட்கட்சி பூசல்

உட்கட்சி பூசல்

ஆனால், இன்றைய சூழலில் அதிமுகவுக்குள் இப்போதைக்கு இணக்கமான சூழல் காணப்படவில்லை.. உட்கட்சி பூசலில் சிக்கி தவித்து வருகிறது.. குறைந்தபட்சம் வலுவான எதிர்க்கட்சியாக செயல்பட முடியாத அளவுக்கு இக்கட்டான நிலைமையில் அக்கட்சி திண்டாடி வருகிறது.

 அறிவுறுத்தல்

அறிவுறுத்தல்

கடந்த 2 வாரத்துக்கு முன்பு ஆலோசனைக் கூட்டம் போட்டு, நிர்வாகிகளை உள்ளாட்சி தேர்தலுக்குத் தயாராகுமாறு அறிவுறுத்தியிருந்தது அதிமுக... ஆனாலும், தற்சமயம், உள்ளாசி தேர்தல் குறித்து அக்கட்சி எந்த முடிவில் உள்ளது என்பது தெளிவாக தெரியாமல் இருந்த சூழலில், இன்றைய தினம் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்துகிறது அதிமுக.

 தேர்தல்

தேர்தல்

இதில், பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.. சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த கட்சிகளோடு இணைந்துதான் உள்ளாட்சி தேர்தலையும் சந்திக்கிறோமா? அல்லது தனித்து போட்டியிடுகிறோமா? என்பது குறித்தும் இன்றைய கூட்டத்தில் விவாதித்து வருவதாக கூறப்படுகிறது.

 தேமுதிக

தேமுதிக

மற்றொரு புறம், தேமுதிக உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகி வருகிறது.. நடக்க போகும் உள்ளாட்சி தேர்தலில் 7 வட மாவட்டங்கள் அடங்கி உள்ளதால், இது தேமுதிகவுக்கு சாதகமாகவே உள்ளது.. பாமக அளவுக்கு இல்லையென்றாலும் ஓரளவு தேமுதிகவுக்கு இங்கு செல்வாக்கு உள்ளதால், இந்த தேர்தலை சந்திக்க தேமுதிக ஆர்வம் காட்டி வருகிறது.. அதனால், திமுகவுடன் கூட்டணி வைக்கவும் முயற்சி எடுத்து வருகிறது.

 ஸ்டாலின்

ஸ்டாலின்

எனவே, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசுமாறு, சுதீஷிடம் தேமுதிக பொருளாளர் பிரேமலதா சொல்லி உள்ளாராம்.. அதனால், ஸ்டாலினை சந்திப்பதற்கான முயற்சியில் குதித்துள்ளார் சுதீஷ்... ஆனால், ஸ்டாலினிடமிருந்து சந்திப்புக்கான க்ரீன் சிக்னல் இன்னமும் கிடைக்கவில்லையாம்.. அதேசமயம், தேர்தல் தேதி அறிவிக்கட்டும், நல்ல செய்தி உங்களுக்கு கிடைக்கும் என்று உளவுத்துறையின் முக்கிய அதிகாரி ஒருவரிடமிருந்து சுதீஷூக்கு தகவல் பறந்துள்ளதாம்..!

English summary
DMDK is getting ready to face Local body Election, say sources
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X