பிரேமலதா கனவு நிறைவேறுகிறது.. டெல்லி போகும் தம்பி.. ராஜ்ய சபா எம்பியாகும் எல்.கே சுதீஷ்? திமுக பரிசு
சென்னை: தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக மிகப்பெரிய திருப்பமாக, மதேமுதிக, திமுக தலைமையிலான கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. இந்த அதிரடி மாற்றத்திற்குப் பின்னால், தேமுதிகவின் பொருளாளர் எல்.கே. சுதீஷுக்கு நீண்டகாலமாக மறுக்கப்பட்டு வந்த ராஜ்யசபா (மாநிலங்களவை) சீட், இந்த முறை திமுக மூலம் உறுதியாகக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் வரவிருக்கும் ராஜ்யசபா தேர்தல்
தமிழகத்தில் வரும் ஜூன் மாதத்துடன் 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. தற்போதுள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், திமுக தலைமையிலான கூட்டணி 4 அல்லது 5 இடங்களை எளிதாகக் கைப்பற்றும் நிலையில் உள்ளது.
பதவிக்காலம் முடியும் தற்போதைய எம்.பி-க்கள்:
திருச்சி சிவா (திமுக)
என்.ஆர். இளங்கோ (திமுக)
அந்தியூர் பி. செல்வராசு (திமுக)
டாக்டர் கனிமொழி என்.வி.என் சோமு (திமுக)
முனைவர் மு. தம்பிதுரை (அதிமுக)
ஜி.கே. வாசன் (தமாகா)
தமிழ்நாடு, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட 10 மாநிலங்களைச் சேர்ந்த 37 ராஜ்ய சபா இடங்களுக்கு தேர்தல் நடக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் பிப்ரவரி 26ஆம் தேதி தொடங்க உள்ளது. ராஜ்ய சபா தேர்தல் மார்ச் 16ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிகவுக்கு ஒரு சீட் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
எல்.கே. சுதீஷின் 10 ஆண்டு காலக் காத்திருப்பு
தேமுதிகவின் முகமாகவும், விஜயகாந்தின் நம்பிக்கைக்குரிய தளபதியாகவும் விளங்கும் எல்.கே. சுதீஷுக்கு ஒரு முறையாவது நாடாளுமன்ற மேலவைக்குச் செல்ல வேண்டும் என்பது நீண்டகால விருப்பம். 2011-ல் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த காலம் முதலே இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், ஒவ்வொரு முறையும் கூட்டணிப் பேச்சுவார்த்தையின் போது உறுதி அளிக்கப்பட்டு, இறுதியில் கைவிடப்படுவதே வாடிக்கையாக இருந்து வந்தது.
அதிமுகவின் 'துரோகம்': மீண்டும் மீண்டும் ஏமாற்றப்பட்ட வரலாறு
கடந்த 2019 மற்றும் 2024 மக்களவைத் தேர்தல்களின் போது அதிமுக - தேமுதிக கூட்டணி அமைந்தபோது, எல்.கே. சுதீஷுக்கு ராஜ்யசபா சீட் வழங்குவதாக அதிமுக தலைமை வாக்குறுதி அளித்ததாகக் கூறப்படுகிறது.
"அதிமுக கொடுத்த அந்த வாக்குறுதியை நம்பித் தான் நான் 2024 மக்களவைத் தேர்தலில் கூட போட்டியிடாமல் ஒதுங்கினேன்," என்று சுதீஷ் பலமுறை வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
ஆனால், 2020-ல் காலியான இடங்களை அதிமுக தனது சொந்தக் கட்சிக்காரர்களுக்கும், ஜி.கே. வாசனுக்கும் ஒதுக்கியது. இது தேமுதிக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு வரை "ராஜ்யசபா சீட் தருவது அதிமுகவின் கடமை" என்று பிரேமலதா விஜயகாந்த் பகிரங்கமாக வலியுறுத்தியும், எடப்பாடி பழனிசாமி தரப்பில் அதற்குச் சாதகமான பதில் கிடைக்கவில்லை. அதிமுகவின் இந்தத் தொடர் 'ஏமாற்று' வேலைகளே, தேமுதிகவை திமுகவை நோக்கித் தள்ளியதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
"பாலில் விழுந்த பழம்" - திமுகவின் கரம்
தற்போது திமுக கூட்டணியில் இணைந்துள்ள பிரேமலதா விஜயகாந்த், "கேப்டன் விரும்பிய இந்த கூட்டணி 10 ஆண்டுகளுக்கு முன்பே அமைந்திருக்க வேண்டும்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் தேமுதிகவை மிகுந்த மரியாதையுடன் வரவேற்றுள்ள நிலையில், எல்.கே. சுதீஷுக்கு ஒரு சீட் வழங்க திமுக முன்வந்துள்ளது.
பல ஆண்டுகளாக அதிமுகவிடம் இழந்த உரிமையை, தற்போது திமுக மூலம் மீட்டெடுக்க சுதீஷ் தயாராகி வருகிறார். டெல்லி நாடாளுமன்றத்திற்குள் நுழைய வேண்டும் என்ற விஜயகாந்த் குடும்பத்தின் கனவு, இந்த மார்ச் மாதத் தேர்தலில் நனவாகுமா என்பது தான் இப்போது தமிழக அரசியலின் ஹாட் டாபிக்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications