Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Premalatha mother: விஜயகாந்த் வீட்டில் துக்கம்! ஈரோட்டில் இருந்து கண்ணீருடன் வரும் பிரேமலதா, சுதீஷ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷின் தாயார் அம்சவேணி காலமானார். அவருக்கு வயது 85. அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு பூத் முகவர்கள் கூட்டத்திற்கு சென்ற பிரேமலதாவும் சுதீஷும் சென்னைக்கு விரைகிறார்கள்.

பிரேமலதா விஜயகாந்த் குடியாத்தம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவரது தம்பி எல்.கே.சுதீஷ். இவரும் சினிமா, அரசியல் என்று தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார்.

premalatha lk sudhish dmdk

இவர்களது தாய் அம்சவேணிக்கு அண்மைக்காலமாக வயது மூப்பால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது. இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அம்சவேணி இன்று காலை காலமானார்.

அவருடைய உடல் சாலிகிராமத்தில் உள்ள சுதீஷின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் பூத் முகவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரேமலதாவுக்கும் சுதீஷுக்கும் இந்த தகவல் தெரியவந்ததும் அவர்கள் அந்த நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு திரும்பி வருகிறார்கள்.

பிரேமலதாவின் வீட்டில் நடந்த துக்க சம்பவத்தை அடுத்து தேமுதிக தொண்டர்கள் அந்த பகுதியில் கூடி வருகிறார்கள். குடியாத்தத்தில் வளர்ந்த பிரேமலதாவை விஜயகாந்த் திருமணம் செய்து கொண்டார். அவர் சினிமாவில் ஆரம்ப கட்டத்தில் நடித்து வந்த போதே இவர்களுக்கு திருமணம் நடந்தது. ஹனிமூன் கூட சூட்டிங் சென்ற இடத்தில் சென்றதாக ஒரு முறை பிரேமலதா தெரிவித்திருந்தார்.

கடந்த 11 ஆம் தேதிதான் விஜயகாந்த் சகோதரி விஜயலட்சுமி (78) உடல்நலக் குறைவால் காலமானார்.

அவரது உடலுக்கு பிரேமலதா, சுதீஷ், இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் ஆகியோர் நேரில் போய் அஞ்சலி செலுத்தினர். விஜயலட்சுமி ஒரு மருத்துவர், அவர் மதுரையில் மருத்துவமனை நடத்தி வந்தார். அவரது கணவர் துரைராஜ், நரம்பு சுருள் நோய் தடுப்பு நிபுணராவார். வயதுமூப்பால் சென்னையில் உள்ள அவரது மகன் வீட்டில் தங்கியிருந்த விஜயலட்சுமி சிகிச்சை பலனின்றி காலமானார். இதையடுத்து அவரது உடல் சென்னையிலிருந்து இறுதி அஞ்சலிக்காக மதுரை அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டது.

கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி விஜயகாந்த் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு அப்போது வயது 71 ஆகும்.

முதல்வர் இரங்கல்

இந்நிலையில் பிரேமலதா விஜயகாந்தின் தாயார் மறைவுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய் தியில் கூறியிருப்பதாவது: தே.மு.தி.க பொதுச் செயலாளர் சகோதரி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுடைய தாயார் அம்சவேணி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.

பெற்றெடுத்து அன்பு செலுத்தி வளர்த்த அன்னையை இழந்து வாடும் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தே.மு.தி.க.வின் பொருளாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்ட அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+