நம்ம விஜயகாந்த்தா இது.. இப்டி ஆயிட்டாரே.. "கேப்டன், கேப்டன் இங்கே பாருங்க".. விண்ணை பிளந்த குரல்
விஜயகாந்த்தை பார்க்க பொதுமக்கள் திரளாக கூடினர்
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் தன்னுடைய பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார்.. இதையடுத்து, விஜயகாந்த பிரச்சாரம் செய்யும் வீடியோ, போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதுவரை தேமுதிகவை தாங்கி பிடித்து கொண்டிருப்பதே விஜயகாந்த் என்ற ஒற்றை மனிதர்தான்.. முன்பெல்லாம் விஜயகாந்த் செய்தியாளர்களை சந்திக்கிறார் என்றாலே, ஒருவித பரபரப்பும், எதிர்பார்ப்பும், மீடியா உலகில் பற்றிக் கொள்ளும்..
அவர் பேட்டி தருகிறார் என்றால், அதற்கு முன்னதாகவே செய்தியாளர்கள் ஆவலுடன் காத்து கிடப்பார்கள். செய்தியாளர் சந்திப்பே இப்படி என்றால், பிரச்சார கூட்டங்களில் கேட்க வேண்டாம்..

துணிச்சல்
அசால்ட் பேச்சு, தைரியமான பேச்சு, யாருக்கும் வணங்காத தலைநிமிர்ந்த பேச்சு, யதார்த்த பேச்சு, பாகுபாடு அற்று மொத்த பேரையும் விளாசி தள்ளும் மனோபாவம் உடையவர் விஜயகாந்த்.. சிங்கம் போல முழங்கிய அந்த பிரச்சாரங்கள் ஒவ்வொன்றும் தேமுதிகவை கிராமப்புறங்களின் மூலைமுடுக்கெல்லாம் கொண்டு போய் சேர்த்தது.

விஜயகாந்த்
சில வருடங்களாகவே, விஜயகாந்த்துக்கு உடம்பு சரியில்லாமல் முடங்கி போய்விடவும், அந்த கட்சியும் கரைந்து காணாமல் போய் கொண்டிருக்கிறது.. தமிழகம் முழுவதும் பரவலான அதேசமயம் குறைந்த அளவு ஓட்டு வங்கியை அந்த கட்சி பெற்றுள்ளது என்பது ஆறுதல் செய்தி.. ஆனால், இதற்கு காரணமும் சாட்சாத் விஜயகாந்த்தான்.

வாக்காளர்கள்
உடம்பு சரியில்லாமல் இருந்தபோதுகூட, 2, 3 தேர்தல்களை தேமுதிக சந்தித்தது.. அப்போதெல்லாம் முன்பு போல பேச முடியாவிட்டாலும், ஓரளவு வாக்காளர்களிடம் பேசி வாக்கு சேகரித்தார் விஜயகாந்த்.. வேனுக்குள்ளேயே உட்கார்ந்து ஓரிரு வார்த்தைகளை திக்கி திணறி, பேசுவதை கேட்டு, பொதுமக்கள் பெரும் கவலை அடைந்தனர்.. கடந்த சில தினங்களுக்கு முன்பு, கூட்டணி முடிவாகியபிறகு, டிடிவி தினகரன் விஜயகாந்த்தை சென்று சந்தித்துள்ளார்.

உடல் மெலிவு
அந்த போட்டோக்கள் மீடியாவில் வெளிவந்தன.. அதில் விஜயகாந்தை பார்ப்பதற்கே பரிதாபம்தான் ஏற்பட்டது.. கட்டுமஸ்தான அவரது உடல் கரைந்து போயிருந்தது.. எலும்பும் தோலுமாக மெலிந்து கிடந்தார்.. ட்ரீட்மென்ட்டில் உள்ளதால் அப்படி இருக்கிறார் போலும்.. ஆனால, நம்ம விஜயகாந்த்தா இது என்று மக்கள் கலங்கி போய் பார்த்தனர். உடல்நிலை சரியில்லாதவரை இப்படி பிரச்சாரத்துக்கு அழைத்து வர வேண்டுமா? என்ற மனிதாபிமான கேள்விகளும் எழாமல் இல்லை..

திரண்ட கூட்டம்
எப்போதுமே பிரச்சாரத்துக்கு விஜயகாந்த் வருகிறார் என்றதுமே, கட்சிக்கு அப்பாற்பட்டு அவரை பார்க்க மக்கள் கூடுவது வழக்கம். இந்த முறையும் அப்படித்தான் கும்மிடிப்பூண்டி பஸ் நிலையம் கூடினார்கள்.. விஜயகாந்த், திறந்த வேனில் நின்று, கையை மட்டும் அசைத்தபடி ஓட்டு சேகரித்தார்... எதுவுமே பேசவில்லை.. மவுனமாக கடந்து சென்றார்.. இதை பார்த்த தொண்டர்கள், 'கேப்டன்... கேப்டன்' என உருகி மருகி கோஷமிட்டனர்.

உதவியாளர்கள்
ரொம்ப நாள் கழித்து நேரில் பார்ப்பதால், சிலர் உணர்ச்சி வசப்பட்டுவிட்டனர்.. பொதுமக்கள் ஆரவாரத்துடன் கையை அசைத்தால், அவர்கள் பக்கம் மெல்லமாக திரும்பி கையை அசைத்தபடி சென்றார் விஜயகாந்த்.. அவருடன் சில உதவியாளர்களும் அந்த வேனில் இருந்தனர்.. ஆனால், விஜயகாந்த் அங்கிருந்து நகரும்வரை கேப்டன் என்ற வார்த்தை விண்ணை பிளந்து கொண்டிருந்தது.

போன் பண்ணுங்க
முன்பெல்லாம் தேமுதிக மாநாடு நடத்தினால், மாநாட்டு முடிய இரவு ஆகிவிடும்.. அந்த லேட் நைட்டில் தொண்டர்கள் கிளம்பி செல்லும்போது, விஜயகாந்த் மைக்கில் நின்று, அவர்களிடம் மறக்காமல் ஒன்று சொல்லுவார்.. "பத்திரமா வீட்டுக்கு போகணும், சரியா? வீட்டுக்கு போய்ட்டு எனக்கு போன் பண்ணனும்... இல்லாட்டி நான் போன் பண்ணி கேட்பேன்" என்பதுதான்.. இப்படி ஒரு நல்ல இதயம், மீண்டும் பழையபடி கர்ஜிக்க வேண்டும் என்பதே இந்த தமிழக மக்களின் ஒரே ஆசை..!
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications