அரசியலில் கால்பதித்து முதன்முதலாக தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கும் விஜயகாந்த்.. தொண்டர்கள் சோகம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜயகாந்த் 2005-ல் தேமுதிகவை ஆரம்பித்ததில் இருந்து முதன்முதலாக இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.

2006-ல் முதன் முதலாக தேர்தலை சந்தித்து விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட அவர் வெற்றி பெற்றார். 2011-ல் ரிஷிவந்தியம் தொகுதியிலில் வெற்றி பெற்றார். 2016-ல் உளுந்தூர்பேட்டையில் தோல்வியை தழுவினார்.

விஜயகாந்த் தேர்தலில் போட்டியிடாதது தேமுதிக தொண்டர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தேமுதிக வெளியேற்றம்

தேமுதிக வெளியேற்றம்

தமிழக சட்டமன்ற தேர்தல் களம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றன. அதிமுக, திமுக கூட்டணிகள் வேட்பாளர் பட்டியலை அறிவித்து விட்டது. மேலும் அதிமுக, திமுக தேர்தல் அறிக்கையும் வெளியிட்டது. அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தேமுதிக அதிமுக 20 தொகுதிகளை கூட ஒதுக்க முன் வராததால் கூட்டணியில் இருந்து வெளியேறியது.

தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

பின்னர் டி.டி.வி தினகரனின் அமமுகவுடன் கூட்டணியில் இணைந்தது. முதலில் அமமுக-தேமுதிக இடையே பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெறவில்லை. இறுதியில் பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு சுமுக முடிவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.இதனையடுத்து தேமுதிக போட்டியிடும் 60 தொகுதிகள் பட்டியல் வெளியிடப்பட்டன.

விஜயகாந்த் போட்டியிடவில்லை

விஜயகாந்த் போட்டியிடவில்லை

அதன்பின்னர் சில மணி நேரங்களில் 60 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விருகம்பாக்கம் தொகுதியில் தே.மு.தி.க துணைப் செயலாளர் பார்த்தசாரதி போட்டியிடுகிறார். தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த் தேர்தலில் போட்டியிடவில்லை. அதேபோல, எல்.கே.சுதிஷ், விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் ஆகியோரும் தேர்தலில் போட்டியிடவில்லை.

2 முறை வெற்றி; ஒருமுறை தோல்வி

2 முறை வெற்றி; ஒருமுறை தோல்வி

விஜயகாந்த் 2005-ல் தேமுதிகவை ஆரம்பித்ததில் இருந்து எந்த தேர்தலிலும் போட்டியிடாமல் இருந்தது இல்லை. 2006-ல் முதன் முதலாக தேர்தலை சந்தித்து விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட அவர் வெற்றி எம்.எல்.ஏ. ஆனார். அதன்பின்னர் 2011 தேர்தலில் ரிஷிவந்தியம் தொகுதியிலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்தார். ஆனால் 2016-ல் உளுந்தூர்பேட்டையில் போட்டியிட்ட அவர் தோல்வியை தழுவினார்.

போட்டியிடாத காரணம் என்ன?

போட்டியிடாத காரணம் என்ன?

ஆனால் இந்தமுறை அவர் தேர்தலில் போட்டியிடவில்லை. சமீப காலமாக விஜயகாந்த் உடல் நிலை சீராக இல்லாத காரணத்தால் அவர் பெரும்பாலும் கட்சி நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொள்ளவில்லை. இதனால் உடல்நிலை காரணமாகவே அவர் தேர்தலில் போட்டியிடவில்லை என்று கூறப்படுகிறது. விஜயகாந்த் தேர்தலில் போட்டியிடாதது தேமுதிக தொண்டர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+