கடுமையாக போராடி, வாதாடி.. கடைசியில் 4 இடங்களில் செட்டிலான தேமுதிக.. தொகுதிகள் இவைதானா?
அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு மொத்தம் 4 தொகுதிகள் அளிக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.
Recommended Video

சென்னை: அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு மொத்தம் 4 தொகுதிகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகள் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.
தேமுதிக - அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை இன்று கடைசியாக நடந்தது. கடந்த மூன்று வாரங்களாக நடந்த பேச்சுவார்த்தையில் எதிலும் உடன்பாட்டை எட்டவில்லை. இன்று உடன்பாடு எட்டப்பட்டது.
இன்று நடக்கும் பேச்சுவார்த்தைக்கு பின் அதிமுக - தேமுதிக கூட்டணி ஒப்பந்தம் இறுதியானது. தேமுதிகவுக்கு மொத்தம் நான்கு தொகுதிகள் அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்த தொகுதிகள் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.

வடசென்னை தொகுதி
சென்னையில் உள்ள மூன்று லோக்சபா தொகுதிகளை அதிமுக - பாஜக - தேமுதிக என்று பிரித்து போட்டியிட இருப்பதாக கூறுகிறார்கள். தென் சென்னையில் பாஜக போட்டியிடும் என்று செய்திகள் வருகிறது. மத்திய சென்னையில் அதிமுக போட்டியிடும். அதன்படி வடசென்னையை தேமுதிக பெற இருக்கிறது.

திருச்சி தொகுதி
அதேபோல் திருச்சி லோக்சபா தொகுதியும் தேமுதிக வசம் செல்ல இருக்கிறது. இங்கு அதிமுக, பாஜக இரண்டும் பெரிய அளவில் பலமான கட்சிகள் கிடையாது. அதனால் தேமுதிக இங்கு போட்டியிட வாய்ப்பு இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

விருதுநகர் தொகுதி
தற்போது விருதுநகர் தொகுதி எம்பியாக அதிமுகவை சேர்ந்த டி.ராதாகிருஷ்னன் இருக்கிறார். இங்கு மதிமுக தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாக செய்திகள் வருகிறது. இந்த நிலையில் மதிமுகவை எதிர்த்து தேமுதிக வேட்பாளர்கள் நிற்க வைக்கப்பட வாய்ப்புள்ளது.

கள்ளக்குறிச்சி தொகுதி
கள்ளக்குறிச்சி தொகுதியில் அதிமுக பலம் வாய்ந்த கட்சி. அதேபோல் பாமகவும் பலம் வாய்ந்த கட்சி. இந்த நிலையில் அங்கு தேமுதிக போட்டியிட இருப்பதாக கூறுகிறார்கள். தேமுதிகவுக்கு வெற்றிவாய்ப்பு இருக்கும் தொகுதிகளில் கள்ளக்குறிச்சி தொகுதியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது .
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications