15 வருடத்திற்கு பின்.. அதே இடத்தில்.. அதே பிளானோடு களமிறங்கும் தேமுதிக.. பாமகவிற்கு வைக்கும் குறி!
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் எங்கிருந்து தனது அரசியல் வாழ்க்கையை 2006ல் தொடங்கினாரோ 2021லும் அதே இடத்தில் இருந்து தேமுதிக பொருளாளர் பிரேமலதாவும் இந்த தேர்தலில் களமிறங்க உள்ளார்.
அமமுக - தேமுதிக இடையில் நேற்று தொகுதி பங்கீடு உடன்படிக்கை எட்டப்பட்டது. அமமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 60 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. 2011ல் தேமுதிக வென்ற 29 தொகுதிகளில் 12 தொகுதிகளில் தேமுதிக மீண்டும் போட்டியிடுகிறது.
தேமுதிகவுக்கு 60 இடங்கள் ஒதுக்கப்பட்டதால் 42 வேட்பாளர்களை அமமுக திரும்ப பெற்றுள்ளது.

அமமுக
அமமுக கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் தேமுதிக சார்பாக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட உள்ளார். இந்த தொகுதி பாமக வலிமையாக இருக்கும் தொகுதியாகும். கிட்டத்தட்ட 40% வாக்காளர்கள் பாமகவிற்கு ஆதரவான வாக்காளர்கள். இங்குதான் தேமுதிகவை தொடங்கிய பின் விஜயகாந்த் போட்டியிட்டார்.

பாமக
பாமக வலிமையாக இருக்கும் தொகுதி என்றாலும் 2006ல் விருத்தாச்சலத்தில் விஜயகாந்த் 40%+ வாக்குகளை பெற்று வெற்றிபெறார். இந்த விருத்தாச்சலம் வெற்றிதான் தேமுதிகவின் வளர்ச்சிக்கு காரணமாக இருந்தது. அதன்பின் வரிசையாக வட தமிழகத்தில் தேமுதிக வளர்ச்சி அடைந்தது. பாமகவின் வெற்றியை வட மாவட்டங்களில் தடுக்கவும் இதுவே காரணமாக இருந்தது.

தேமுதிக
இந்த நிலையில் 15 வருடங்களுக்கு பின் மீண்டும் இங்கு தேமுதிக கவனம் செலுத்த உள்ளது. விஜயகாந்த் எங்கிருந்து தனது அரசியல் வாழ்க்கையை 2006ல் தொடங்கினாரோ 2021லும் அதே விருத்தாச்சலத்தில் தற்போது பிரேமலதா தேர்தலில் போட்டியிட உள்ளார். பாமகவிற்கு மீண்டும் போட்டியாக களமிறங்கும் எண்ணத்தில் தேமுதிக உள்ளது.

கேப்டன்
கேப்டன் சென்டிமென்டில் மக்கள் வாக்களிப்பார்கள், இதன் மூலம் விருத்தாசலத்தில் வெற்றிபெற முடியும் பிரேமலதா நம்புகிறார். தேமுதிகவுக்கு இது மறுமலர்ச்சியை கொடுக்கும் என்று நம்புகிறது. பாமகவை குறி வைத்து தேமுதிக திட்டங்களை வகுத்து வருகிறது. அதிமுக தங்களுக்கு கேட்ட இடங்கள் கிடைக்காததற்கு பாமகதான் காரணம் என்று தேமுதிக நினைக்கிறது.

ஈகோ மோதல்
இரண்டு கட்சிகளுக்கும் இடையில் கடுமையான ஈகோ மோதல் இருக்கிறது. இதனால் அதிமுகவை வீழ்த்துவதை விட பாமகவை வீழ்த்துவதை தேமுதிக முக்கியமாக இருக்கிறது. இதனால் கண்டிப்பாக பாமக , தேமுதிக நேருக்கு நேர் மோதும் தொகுதிகளில் கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .












Click it and Unblock the Notifications