இளைய மகனை படை தலைவனாக அறிமுகம் செய்த விஜயகாந்த்! அரசியல் என்ட்ரிக்கு அச்சாரம்? ஆர்ப்பரித்த பிரேமலதா!
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இளைய மகனான சண்முகபாண்டியன் நடிப்பில் திரைக்கு வரவுள்ள புதிய திரைப்படத்திற்கு படை தலைவன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஏற்கனவே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கலகத் தலைவன், மாமன்னன் போன்ற பெயர்களில் திரைப்படங்கள் வெளியாகிய நிலையில் விஜயகாந்தின் மகன் நடித்துள்ள படத்துக்கு படை தலைவன் என பெயர் சூட்டப்பட்டிருப்பது அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

ஏனெனில் படத்தின் தலைப்பு அப்படி அமைந்திருக்கிறது. இதுவரை தேமுதிக நிகழ்ச்சிகளில் விஜயகாந்தின் மூத்த மகனான விஜய பிரபாகரன் மட்டும் தான் கலந்துகொண்டு வருகிறார். அவருக்கு இன்னும் கட்சியில் பொறுப்புகள் தரப்படவில்லை. இதனிடையே விஜயகாந்தின் இளைய மகனான சண்முகபாண்டியனும் அரசியலில் கால் பதிக்க விரும்புகிறாரா என விவாதங்கள் எழத் தொடங்கியுள்ளன.
தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு வந்த விஜயகாந்த் தனது மகனின் படை தலைவன் திரைப்பட புரோமோவை வெளியிட்டதோடு படத்தின் பெயரையும் வெளியிட்டார். அப்போது அங்கிருந்த தொண்டர்களை காட்டிலும் பிரேமலதா விஜயகாந்த் தான் ஆர்பரித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
மேலும், ஒன்ஸ் மோர் ஒன்ஸ் மோர் எனக் கேட்டு தனது இளையமகனின் படை தலைவன் திரைப்பட புரோமோவை மூன்று முறை ஒளிபரப்ப வைத்தார். அதே போல் விஜய பிரபாகரனை காட்டிலும் நடிகர் சண்முக பாண்டியனை தேமுதிக தொண்டர்கள் தோளில் தூக்கி வைத்து கொண்டாடிய காட்சிகளையும் காண முடிந்தது.












Click it and Unblock the Notifications