விஜயபிரபாகரன் பிறந்தநாள்... தொண்டர்கள் திரண்டு வந்து நேரில் வாழ்த்து
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மூத்த மகன் விஜயபிரபாகரனின் பிறந்தநாள் விழா இன்று சென்னையில் கொண்டாடப்பட்டது.
சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டின் அருகே ஒரு சிறிய மேடை அமைக்கப்பட்டு அதில் நின்றவாறு தொண்டர்களிடமும், நிர்வாகிகளிடமும் வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டார் விஜயபிரபாகரன்.
இதுவரை இல்லாத வகையில் நிர்வாகிகளும், தொண்டர்களும் பெருமளவில் வந்து விஜய பிரபாகரனை வாழ்த்திச் சென்றனர்.

பிறந்தநாள்
தேமுதிக நிகழ்ச்சிகள் மற்றும் செயல்பாடுகளில் அண்மைக்காலமாக அதிக பங்களிப்பு செலுத்துபவர் விஜய பிரபாகரன். விஜயகாந்த்தின் மூத்த மகனான இவர், தமது தந்தைக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் தாய் பிரேமலதா விஜயகாந்த்திற்கு அரசியலிலும், கட்சியிலும் பக்கபலமாக துணை நின்று வருகிறார்.

திருமணம்
நாய் வளர்ப்பில் அதிக ஈடுபாடு கொண்ட விஜயபிரபாகரன் டென்னிஸ் விளையாட்டிலும் அதிகம் ஆர்வம் உடையவர். இவருக்கு கடந்தவாரம் தான் கோவையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. புதுமாப்பிள்ளையான இவருக்கு இன்று பிறந்தநாள் என்பதால் அதை அவரது கட்சியினர் கொண்டாடி மகிழ்ந்தனர்.

நிர்வாகிகள் சந்திப்பு
எப்போதும் தாய், தந்தையிடம் ஆசிர்வாதம் வாங்குவதுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தை முடித்துக்கொள்ளும் விஜய பிரபகாரன், இந்த ஆண்டு தொண்டர்களையும்ம், நிர்வாகிகளையும் சந்தித்து வாழ்த்துப் பெற்றுக்கொண்டார். இதற்காக வீட்டின் அருகே சிறியளவில் மேடை அமைக்கப்பட்டு அதில் நின்று தொண்டர்களை சந்தித்தார். காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து பெருமளவில் நிர்வாகிகள் வந்திருந்தனர்.

அன்பு
விஜயபிரபாகரனை சந்தித்து வாழ்த்துக்கூறிய தொண்டர்கள் பலர், கட்சிப்பணிகளில் இன்னும் நீங்க கவனம் செலுத்தனும், என அவரிடம் கோரிக்கை வைத்தனர். அதற்கு புன்னகையை பதிலாக தந்த விஜயபிரபாகரன், தொண்டர்கள் தந்த மாலை, சால்வைகளை அன்போடு ஏற்றுகொண்டார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications