அதிமுகவுக்கு இண்டிகேட்டர் போட்டு.. தவெக பக்கம் திருப்பும் தேமுதிக? அமித்ஷா என்ட்ரி.. பிரேமலதா ஆலோசனை
சென்னை: 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பல கட்சிகள் தங்களின் கூட்டணி முடிவுகளை ஓரளவு தெளிவுபடுத்தி விட்ட சூழலில், இன்னும் தங்களின் நிலைப்பாட்டை அறிவிக்காமல் உள்ள ஒரே பெரிய கட்சி தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் (தேமுதிக) தான். ஜனவரி 9ஆம் தேதி நடைபெறும் மாநில மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிப்போம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்த நிலையில், அதனை முன்னிட்டு இன்று மாவட்ட செயலாளர்களுடன் அவர் முக்கிய ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.
பாஜக முக்கிய தலைவரான அமித்ஷா தமிழகம் வந்திருக்கும் நிலையில், கூட்டணி குறித்த இறுதி முடிவு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஜனவரி 9ஆம் நடக்கவுள்ள மாநாடு குறித்தும் பிரேமலதா ஆலோசனை நடத்துவார் என சொல்லப்படுகிறது.
2026 சட்டமன்ற தேர்தல் களம் மெல்ல மெல்ல சூடு பிடிக்க ஆரம்பித்து இருக்கிறது. தமிழகத்தை ஆளும் கட்சியான திமுகவும், ஆண்ட கட்சியான அதிமுகவும் இந்த 2026 தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என தீவிரமாக காய் நகர்த்தி வருகின்றன.

2026 சட்டமன்ற தேர்தல்
திமுகவும் அதிமுகவும் தங்களுக்கு சாதகமாக கூட்டணியை வலுப்படுத்த முயற்சித்து வருகின்றன. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே உள்ளன. இதில் தொகுதி பங்கீடு மட்டும் பேசப்பட்டு முடிவு செய்யப்பட வேண்டியுள்ளது. 'ஆட்சியில் பங்கு' என்ற கோஷம் எழுந்தாலும், இறுதி முடிவு திமுகவின் கைகளில்தான் உள்ளது. மறுபுறம் அதிமுக கூட்டணியில் பாஜக, தமாகா, ஐஜேகே போன்ற கட்சிகள் இடம்பிடித்துள்ளன.
தேமுதிக கூட்டணி
மேலும் பாமகவும் கூட்டணிக்குத் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் அதிமுக-பாமக-பாஜக கூட்டணி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், கடந்த காலத்தில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக மட்டும் இன்னும் தங்களின் நிலைப்பாட்டை அறிவிக்காமல் இருந்து வருகிறது. கூட்டணி தொடர்பான முடிவை ஜனவரி 9ஆம் தேதி நடைபெறும் மாநில மாநாட்டில் அறிவிப்போம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தார்.
தமிழக வெற்றி கழகம்
திமுகவும் அதிமுகவும் தேமுதிகவுக்கு அழைப்பு விடுத்தும், தொகுதி ஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை சரியாக நடைபெறாததால் தான் முடிவு தாமதமாகி வருவதாக கூறப்படுகிறது. இதனால், கடைசி நேரத்தில் அதிக தொகுதிகள் பெறும் நோக்கத்துடன் தேமுதிக மூன்று முக்கிய கட்சிகளான திமுக, அதிமுக, மற்றும் தமிழக வெற்றி கழகத்துடன் ஒரே நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்ற தகவலும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
பிரேமலதா விஜயகாந்த்
எந்தக் கட்சி அதிக சீட்டுகளை வழங்குகிறதோ, அதனுடன் சேர்ந்தே தேமுதிக கூட்டணி செல்லும் என்ற கருத்தும் நிலவுகிறது. ஜனவரி 9ஆம் தேதி நடைபெறும் மாநில மாநாட்டில் இதுதொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ள நிலையில், அதற்கான முன்னோட்டமாக இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில்தான் தேமுதிக கூட்டணி குறித்த இறுதி முடிவு தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமித்ஷா விஜயம்
இதற்கிடையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று தமிழகம் வந்துள்ளார். இன்று நடைபெறும் மோடி பொங்கல் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார். அமித்ஷா டெல்லி திரும்புவதற்கு முன் தேமுதிக கூட்டணி தொடர்பாக முக்கிய ஆலோசனை நடைபெறலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
-
கொங்கு மண்டல பிரச்சாரத்தின் போது செங்கோட்டையன் வீட்டில் தங்கும் விஜய்.. புலம்பும் ஆதவ் அர்ஜுனா! -
போகிற இடமெல்லாம்.. அஜித் போட்டோவை தூக்கிட்டு போகும் எடப்பாடி.. விஜய்க்கு கவுண்டரா? ஆனால்...! -
10 சீட்டுகளை வெல்லும் தவெக.. 23.9 சதவிகித வாக்குகளை கைப்பற்றும் விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு -
விஜய்க்கு அதிகாலையே சிம்ம சொப்பனமாக வந்த ஸ்டாலின்.. திருச்சியில் 'டீ' பிரேக் பாலிடிக்ஸ்.. செம மூவ்! -
கேலிக்குள்ளான அமித்ஷாவுக்கு தவெக எழுதியதாக பரவும் கடிதம்.. ராஜ்மோகன் விளக்கம் -
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்? எடப்பாடியை பின்னுக்கு தள்ளிய விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு! -
கழுத்தில் இருந்த விசிலை பிடுங்கி வீசிய அதிமுக நிர்வாகி! திருப்பூர் அருகே கூட்டத்தில் பரபரப்பு! -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா? -
Vijay: உங்கள் விஜய்.. நா வரேன்.. விசிலடிக்க ரெடியா? தவெகவின் தேர்தல் பிரச்சார பாடல் வெளியீடு! -
தன்னையும், மக்களையும் நம்பாதவர்தான்.. 2 தொகுதியில் போட்டியிடுவார்! அட்டாக் மோடில் சீமான் -
தவெக வேட்பாளருக்கு எதிராக கொந்தளித்த மகளிரணி! கட்சியிலிருந்தே நீக்குங்க.. வெடிக்கும் பஞ்சாயத்து! -
‘ஜனநாயகன்’ டிக்கெட்டை அதிக விலைக்கு விற்று மோசடி செய்தவர் தவெக வேட்பாளரா? சொந்த கட்சியினரே எதிர்ப்பு












Click it and Unblock the Notifications