தேமுதிக - தவெக கூட்டணி அமையுமா? “விஜயகாந்த் ரசிகர்கள் முட்டாள்கள் இல்லை”: விஜய பிரபாகரன் சொன்ன பதில்

Subscribe to Oneindia Tamil

மதுரை: விஜய்யின் தவெக கட்சியுடன் தேமுதிக கூட்டணி சேர வாய்ப்புள்ளதா என்பது பற்றி ஜனவரியில் பொதுச் செயலாளர் அறிவிப்பார் என அக்கட்சியின் இளைஞரணி மாநிலச் செயலாளர் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். விஜயகாந்த் ரசிகர்களும், தொண்டர்களும் எப்போதும் கேப்டன் பின்னால் தான் நிற்பார்கள் என விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்துக்கும், விஜய்க்கும் மிகப்பெரிய நட்பு உள்ளது. அதை தான் த.வெ.க. மாநாட்டில் விஜய் வெளிப்படுத்தியுள்ளார். விஜய்யை எங்களுக்கு பிடிக்கும். அவர் எங்களுக்கு எதிரி இல்லை. நாங்கள் மக்களுடன் தான் கூட்டணியில் உள்ளோம் என விஜய பிரபாகரன் கூறியுள்ளார்.

DMDK s Stand on Alliance with Vijay s TVK to Be Announced in January Says Vijaya Prabhakaran

தேமுதிக நிர்வாகியின் இல்லத் திருமண விழா இன்று மதுரையில் நடைபெற்றது. இந்த விழாவில் அக்கட்சியின் இளைஞர் அணி மாநிலச் செயலாளர் விஜய பிரபாகரன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த விஜய பிரபாகரன் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

விஜய பிரபாகரன் பேசுகையில், "விஜயகாந்துக்கும் - விஜய்க்கும் இடையே மிகப்பெரிய அளவில் நட்பு இருந்தது. அதைத் தான் விஜய், தனது மாநாட்டு மேடையில் வெளிப்படுத்தினார். எனவே விஜயகாந்த் ரசிகர்கள் அவர் பின்னால் சென்றுவிடமாட்டார்கள். விஜயகாந்த் ரசிகர்கள் முட்டாள்கள் இல்லை. அவர்கள் கேப்டன் பின்னால் தான் நிற்பார்கள். விஜய்யை எங்களுக்கும் பிடிக்கும். அதனால் அவர் எங்கள் எதிரி கிடையாது.

விஜய்யுடன் கூட்டணியா என்பது ஜனவரி 9 ஆம் தேதி தெரியவரும். ஜனவரி மாதம் 9ஆம் தேதி நடைபெறும் மாநாட்டில் தேமுதிகவின் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும். 2026 தேர்தலில் தேமுதிக இணையும் கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம். இன்றைய தேதியில் மக்களுடன் மட்டுமே நாங்கள் கூட்டணி. அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை எதிரியும் இல்லை.

பல எதிர்ப்புகளை மீறி தேமுதிக கட்சி வளர்ந்துள்ளது. அதற்கு கேப்டன் விஜயகாந்த் தான் காரணம். என் அப்பாவை நான் மிஸ் பண்ணுவது போல தமிழகத்தில் ஒவ்வொருவரும் மிஸ் பண்ணுகிறார்கள். கேப்டன் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றே அரசியலுக்கு வந்தார். உங்கள் ஆசையை பூர்த்தி செய்ய லேடி கேப்டன் வந்துள்ளார்கள்.

யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் யாரும் கூட்டம் கூட்டலாம். ஆனால் மக்கள் தெளிவானவர்கள். யாருக்கு ஓட்டு போடவேண்டும் என்று மக்களுக்கு தெரியும். எனது அப்பா லட்சியம் ஜெயிக்கவே என் குடும்பம் எல்லாத்தையும் விட்டுவிட்டு உங்கள் முன் நிற்கிறேன். நாம் தமிழர் கட்சி சீமான் அன்றைய தினம் கேப்டன் ட்ரெண்டிங்கில் இருந்தபோது, அவரை திட்டியதால் ஓட்டு வாங்கி பெரிய ஆளாகி உள்ளார்" எனத் தெரிவித்தார்.

மேலும், பாஜக - அதிமுக கூட்டணியில் இருந்து அமமுக வெளியேறியது பற்றிய கேள்விக்கு, "பாஜக கூட்டணியில் இருந்து அமமுக வெளியேறியது என்பது அவர்களின் உட்கட்சி விவகாரம். அதில் நான் கருத்து சொன்னால் தவறாக இருக்கும்." எனப் பதில் அளித்துள்ளார் விஜயபிரபாகரன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+