Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விருத்தாசலம் - ரிஷிவந்தியம் சென்டிமென்ட்! தேமுதிக கண்டிஷனால் திணறும் அறிவாலயம்.. பதறும் ராயப்பேட்டை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் தேமுதிகவை தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவர திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே மிகத் தீவிரமாகப் போராடி வருகின்றன. இதனால் கூட்டணி குறித்த ஒரு உடன்பாடு ஏற்படாத நிலையில், இழுபறியிலேயே உள்ளது... என்னதான் நடக்கிறது தேமுதிகவுக்குள்?

தமிழக அரசியலில் தேமுதிக என்ற ஒரு கட்சி மீண்டும் "கிங் மேக்கர்" நிலைமையிலேயே இன்னமும் நீடித்து வருகிறது.. எந்தப் பக்கம் திரும்பும் என்ற ஒரு முடிவு, பலரின் அரசியல் எதிர்காலத்தையே தீர்மானிக்கும் அளவுக்கு விஷயம் தீவிரமாகி விட்டது என்றே சொல்லலாம்..

DMDK alliace talk with DMK and AIADMK

திமுக - தேமுதிக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிகிறது.. இந்த பேச்சுவார்த்தையை நேரடியாக நடத்துவது அமைச்சர் எ.வ.வேலு என்றும் தகவல்கள் கூறுகின்றன..

தேமுதிக கூட்டணி யாருடன்

தேமுதிக கூட்டணி குறித்து பேசியதற்கு முதல்வர் ஸ்டாலின் தரப்பில் இருந்து 9+1 சீட் வரை ஒப்புதல் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் தேமுதிக இதை ஏற்கத் தயாராக இல்லையாம்.. அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18+1 சீட் வழங்கப்பட்டதை முன்வைத்து, "அதே மரியாதை எங்களுக்கும் வேண்டும்" என்ற பிடிவாதத்தில் தேமுதிக நிற்கிறதாம்..

18+1-ல் தொடங்கிய கோரிக்கை, 14+1 வரை வந்தாலும், 9+1 என்பது மிகக் குறைவு என்ற மனநிலையில்தான் பிரேமலதா கருதுகிறாராம்.. இதனால், திமுக தரப்பில் 10+1 வரை உயர்த்தி பேசி கன்வீன்ஸ் செய்ய முடியுமா என்ற முயற்சியும் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த இழுபறிதான் பாஜக, அதிமுகவை பதற செய்து வருகிறது.. காரணம்,தேமுதிக திமுக பக்கம் சென்றால், எதிர்க்கட்சிகள் ஒன்றாக பலவீனமடையும் என்ற கணக்கு இரு தரப்பிலும் ஓடுகிறது. அதனால்தான் காலையில் திமுக அமைச்சர் பேசினால், மாலையில் அதிமுக தரப்பில் எஸ்.பி.வேலுமணி பேச்சுவார்த்தை நடத்தும் நிலை உருவாகி உள்ளதாம்..

எடப்பாடி பழனிசாமி

வட மாவட்டங்களில் தேமுதிகவுக்கும் ஓட்டு வங்கி உள்ளதால், பாமக போல தேமுதிகவும் வந்தால் வெற்றி நிச்சயம் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு தீவிரமாக முயற்சிப்பதாக தெரிகிறது.. எனவேதான் எஸ்.பி.வேலுமணி மூலமாக பேச்சுவார்த்தைகள் நடக்கிறதாம்.. தேமுதிக எந்தப் பக்கம் சாய்கிறதோ அதைப் பொறுத்தே வட மாவட்டங்களில் வெற்றியின் திசை மாறும் என்று அதிமுக கணிப்பதால் இந்தப் போட்டி பலமாக இருக்கிறது.

இன்னொரு பக்கம், தேமுதிக எந்த கூட்டணிக்கு வந்தாலும் சில தொகுதிகள் சென்டிமென்ட் அடிப்படையில் கேட்கப்படும் என்பது திமுகவுக்கு பெரிய தலைவலியாக மாறியுள்ளது. அதாவது விருத்தாசலம், ரிஷிவந்தியம் - இந்த 2 தொகுதிகளும் விஜயகாந்தின் அரசியல் வரலாற்றோடு நேரடியாக இணைந்தவை என்பதால், தேமுதிக திமுக கூட்டணிக்கு வந்தால், இந்த இரண்டில் ஒன்றையாவது, அல்லது இரண்டையும் கேட்கும் வாய்ப்பு அதிகம் என்கிறார்கள்.. இதுதான் திமுக கூட்டணிக்குள்ளேயே பதற்றத்தை லேசாக ஏற்படுத்தி உள்ளது..

விருதாச்சலம், ரிஷிவந்தியம்

ஏனென்றால், விருத்தாசலத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன், ரிஷிவந்தியத்தில் திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் இருவருமே, சீட்டுக்காக காத்திருக்கிறார்களாம்.. தேமுதிக கூட்டணிக்குள் வந்தால், இதில் சிக்கல் ஏற்படும் என்பதையும் மறைப்பதற்கில்லை..

கடந்த தேர்தலில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி, கடுமையான உழைப்பு மற்றும் வலுவான உள்ளூர் ஆதரவு என அனைத்தும் ஒருபுறம் இருந்தாலும், தமிழகத்தின் தற்போதைய கூட்டணி அரசியல் என்பது ஒரு சிறிய கையொப்பத்தின் மூலம் ஒட்டுமொத்த தொகுதியையே மாற்றியமைத்துவிடும் அபாயத்தைக் கொண்டுள்ளது.

இதன் காரணமாக, தேமுதிக எடுக்கப்போகும் அந்த இறுதி முடிவு என்பது வெறும் ஒரு கட்சியின் இடங்களை மட்டும் தீர்மானிக்க போவதில்லை. மாறாக, திமுக, அதிமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட பல முக்கிய கட்சிகளின் உட்சிக்கலை முற்றிலுமாகக் குலைக்கும் ஒரு சக்தியாக உருவெடுத்துள்ளது.

அதிமுக, திமுக

குறிப்பாக, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாவதற்கு முன்பாக தனது முடிவை அறிவிப்பேன் என்று பிரேமலதா விஜயகாந்த் விதித்துள்ள கெடு, பல அரசியல் தலைவர்களின் தூக்கத்தை பறித்துள்ளது.

இந்த 2026 சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை, வெற்றி தோல்விக்கான முடிவுகள் அறிவாலயத்திலோ அல்லது ராயப்பேட்டையிலோ மட்டும் தீர்மானிக்கப்படப் போவதில்லை. மாறாக, தேமுதிக எடுக்கப்போகும் அந்த ஒற்றை முடிவைச் சார்ந்தே அவர்களின் வெற்றி தோல்வி முழுமையாகத் தீர்மானிக்கப்படும்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+