Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விருதுநகரில் "சின்ன விஜி"! மற்ற 4 தொகுதிகளில் யார் யார்? தேமுதிக உத்தேச வேட்பாளர் பட்டியல் இதோ!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட 5 தொகுதிகளில் யார் யார் போட்டியிடுவார்கள் என்பதற்கான உத்தேச வேட்பாளர் பட்டியலும் வெளியாகியுள்ளது.

தேமுதிக யாருடன் கூட்டணி என்ற அறிவிப்பை வியாழக்கிழமை அறிவிப்பதால் நேற்று முன் தினம் கட்சியினரிடம் விருப்ப மனுவை பெற்றுக் கொண்ட பிரேமலதா தெரிவித்திருந்தார். ஆனால் நேற்றைய தினமே அதிமுகவுடன் கூட்டணி என்பதை தேமுதிக அறிவித்திருந்தது.

DMDK tentative candidate list released for Lok sabha Election 2024

தமிழக லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கு அதிமுக, திமுக, பாஜக ஆகிய தனித்தனியே கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. ஆனால் நாம் தமிழர் கட்சி மட்டும் தனித்து போட்டியிடுகிறது.

கூட்டணி நிறைவு: திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், மதிமுக, இந்திய முஸ்லீம் லீக், கொங்கு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகள் உள்ளன. இவற்றிற்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஆனால் மனிதநேய மக்கள் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை என்றாலும் திமுக கூட்டணி வெற்றிக்கு பாடுபடுவேன் என அக்கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

பாஜக கூட்டணியில் : அது போல் பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதி கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், ஓபிஎஸ் அணி, அமமுக உள்ளிட்டவை கூட்டணி அமைத்திருந்தன. அது போல் அதிமுகவுடன் போக இருந்த பாமகவை, பாஜக எப்படியோ இழுத்து உள்ளே போட்டுவிட்டது.

இந்த நிலையில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில் தேமுதிக, அதிமுகவுடன் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் 5 தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

5 தொகுதிகள்: அவை தஞ்சாவூர், விருதுநகர், கடலூர், திருவள்ளூர் (தனி), மத்திய சென்னை ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த தொகுதிகளில் போட்டியிடும் உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி தஞ்சையில் டாக்டர் ராமநாதன் போட்டியிட வாய்ப்புள்ளது. இவர் தேமுதிக மாவட்டச் செயலாளராக உள்ளார், கடந்த 2009ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிட்ட போது அவர் 69 ஆயிரம் வாக்குகளை பெற்றார்.

பின்னர் 2016, 2021 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டசபை தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்டிருந்தார். அடுத்ததாக விருதுநகர் தொகுதி- இந்த தொகுதியில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் போட்டியிடுவார் என சொல்லப்படுகிறது. அவர் முதல் முறையாக போட்டியிடுகிறார். விஜயகாந்துக்கு உடல் நிலை பாதிக்கப்பட்ட போதிலிருந்தே கட்சியில் பணியாற்றி வருகிறார்.

கடலூரில் யார்: விருதுநகர் மாவட்டத்தில் விஜயகாந்த் பிறந்துள்ளார் என்பதால் இங்கு விஜய பிரபாகரனுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது. விஜயகாந்த் விருதுநகர் மாவட்டத்தில் பிறந்து பிறகு மதுரைக்கு குடிபெயர்ந்தனர். கடலூர் தொகுதியில் சிவக்கொழுந்து போட்டியிடுவார் என தெரிகிறது. இவர் பண்ருட்டி எம்எல்ஏவாக இருந்தவர்.

பார்த்தசாரதி: திருவள்ளூர் தனி தொகுதியில் பூந்தமல்லி நகரச் செயலாளர் ஸ்ரீராம் போட்டியிடுவார் என தெரிகிறது. இல்லாவிட்டால் எழும்பூர் முன்னாள் எம்எல்ஏ நல்லத்தம்பி போட்டியிடவும் வாய்ப்புள்ளது. மத்திய சென்னை தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ பார்த்தசாரதி அல்லது மாவட்டச் செயலாளர் பிரபாகரன் போட்டியிட வாய்ப்புள்ளது. இவர் 2006ஆம் ஆண்டு வில்லிவாக்கத்தில் 94ஆவது வார்டு கவுன்சிலராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+