Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"தேமுதிக NDA கூட்டணிக்கு வரப்போகுது.. பாஜக தலைமை பேசிக்கிட்டு இருக்கு”.. உறுதிபடச் சொன்ன சீனிவாசன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "தேமுதிக உடன் பாஜக தலைமை பேசி வருகிறது, விரைவில் என்.டி.ஏ கூட்டணிக்கு தேமுதிக வந்துவிடும்" என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உறுதியாகத் தெரிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் இருபெரும் கட்சிகளான திமுகவும், அதிமுகவும் கிட்டத்தட்ட தங்கள் கூட்டணியை வலுப்படுத்தி வருகின்றன. திமுக தலைமையில் ஒரு கூட்டணியும் அதிமுக தலைமையில் இன்னொரு கூட்டணியும் செயல்பட்டு வரும் நிலையில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் தனித்து களமிறங்குகின்றனர். இதனால் சட்டமன்ற தேர்தலில் 4 முனை போட்டி நிலவுகிறது.

DMDK to Join NDA Soon Ex-AIADMK Minister s Claim Sparks Political Buzz

தேமுதிக யாருடன் கூட்டணி?

வரும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்பதை இன்று வரை உறுதி செய்யவில்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தேமுதிக தற்போது எந்தக் கூட்டணியிலும் இல்லை என்கிற அறிவிப்பை வெளியிட்டு விட்டு யாருடன் கூட்டணி அமைப்பது என்று ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

இது தொடர்பாக திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகளுடனும் தேமுதிக திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. தேமுதிக இரட்டை இலக்கங்களில் தொகுதிகளை கேட்பதால், திமுகவும், அதிமுகவும் ரொம்பவே யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. தேமுதிக கூட்டணி குறித்து ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறுவது முற்றிலும் பொய்யான தகவல் என பிரேமலதா தெரிவித்தார்.

தேமுதிக முடிவு என்ன?

இந்த முறை திமுக கூட்டணியில் இடம் பெற்று தேர்தலை சந்திக்க தேமுதிக தயாராகி விட்டதாகவும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முக்கிய திருப்பமாக தேமுதிகவை தங்களது கூட்டணியில் எப்படியாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று பாஜக தலைமை தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.

பாஜக - தேமுதிக இடையே பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டுள்ளன. இந்த பேச்சுவார்த்தையை இன்னும் சில தினங்களில் முடித்து கூட்டணியில் தேமுதிகவை உறுதி செய்துவிட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழக பாஜக தலைவர்களிடம் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

பாஜக திட்டம்?

இன்னும் 2 வாரத்தில் பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வர உள்ள நிலையில், அப்போது நடக்கும் கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவையும் மேடை ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

கடந்த முறை மதுராந்தகத்தில் நடைபெற்ற பிரதமர் மோடியின் பொதுக்கூட்டத்திலேயே தேமுக பொதுச்செயலாளர் பிரேமலதா பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தைகள் இறுதி செய்யப்படாததால் பிரேமலதா அந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இந்நிலையில், பிரேமலதா உடன் பாஜக தலைவர்கள் தீவிர பேச்சுவார்த்தையில் உள்ளனராம்.

திண்டுக்கல் சீனிவாசன் உறுதி

இந்நிலையில், அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன், "தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உடன் பாஜக தலைமை பேசி வருகிறது. விரைவில் என்.டி.ஏ கூட்டணிக்கு தேமுதிக வந்துவிடும்" எனக் கூறியுள்ளார்.

இரு கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்துகிறோம் என்பது தவறு என பிரேமலதா விஜயகாந்த் கூறி இருந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தேமுதிக, அதிமுக கூட்டணியில் இணையப்போகிறது என உறுதியாகத் தெரிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+