முதுகில் சவாரி செய்யும் டெல்லி ‘ஜி’..அதிமுகவை பங்கமாக கலாய்த்த திமுக! ட்ரெண்டாகும் தேர்தல் விளம்பரம்
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் களம் கிளைமாக்ஸை நோக்கி வந்துள்ளது. வரும் 23ஆம் தேதி தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் சமூக வலைதள பிரச்சாரத்தில் கலக்கி வருகிறது திமுக. தற்போது வட மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை அதிமுகவினர் முதுகில் சுமப்பது போல வெளியிடப்பட்டிருக்கும் விளம்பரம் சமூக வலைதளங்களில் கவனத்தைப் பெற்று இருக்கிறது.
2026 சட்டமன்ற தேர்தல் களமானது பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. ஆளும் கட்சியான திமுக முதன் முறையாக அடுத்தடுத்து இரண்டாவது முறை ஆட்சி அமைக்க வேண்டும் என தீவிரமாக பணியாற்றி வருகிறது.
அதே நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு தேர்தல்களில் தோற்றதில்லை என்ற பெருமையை தக்க வைக்க தீவிரமாக முயன்று வருகிறார் அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி. இது மட்டுமல்லாமல் மேலும் பல அணிகளும் கட்சிகளும் களம் காண்கின்றனர்.

2026 சட்டசபை தேர்தல்
தமிழக வெற்றிக்கழகம், நாம் தமிழர், சசிகலா ராமதாஸ் கூட்டணி, தவாக வேல்முருகன், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி என பலரும் தனித்து களமிறங்கி இருப்பதால் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடும் போட்டி நிலவுகிறது. தேர்தல் என்றாலே பிரச்சாரம் தான் வாக்காளர்களை வெகுவாக கவரும். தேர்தல் வாக்குறுதிகளும் முக்கிய பங்காற்றும். கடந்த திமுக வெற்றி பெற அதன் பிரச்சாரம் தான் முக்கிய காரணம் என்பதும், தேர்தல் அறிக்கை ஹீரோவாகவே பார்க்கப்பட்டது.
திமுக தேர்தல் விளம்பரம்
தற்போது திமுகவினர் பிரச்சாரத்தில் கலக்கி வரும் நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினின் ஒட்டுமொத்த குடும்பமும் பிரச்சாரத்தில் இறங்கி இருக்கிறது. மு க ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி என நான்கு பேர் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். காலம் மாற மாற காட்சிகளும் மாறும் என்பது போல பிரச்சாரம் முறைகளும் மாறிவிட்டது. உள்ளங்கைக்குள் உலகம் சுருங்கி விட்ட நிலையில் இளைஞர்களை கவர்வதற்கு டிஜிட்டல் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றன அரசியல் கட்சிகள்.
டிஜிட்டல் பிரச்சாரம்
அதில் ஒரு படி முன்னே இருப்பது திமுக தான். கடந்த தேர்தலில் திமுகவின் டிஜிட்டல் பிரச்சாரம் வெகுவாக பேசப்பட்டது. தற்போதும் அதனை கையில் எடுத்திருக்கிறது திமுக. அதிமுக தலைமையை மறைமுகமாக விமர்சிப்பது போல அந்த விளம்பரம் எடுக்கப்பட்டிருக்கிறது. நேரடியாக சொல்லப்போனால் அதிமுக தலைமை டெல்லி பாஜகவை முதுகில் சுமக்கிறது என்பதை சொல்லாமல் சொல்லும் வகையில் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் வடமாநிலத்தை சேர்ந்த ஒருவரை முதுகில் சுமந்து கொண்டே பல்வேறு இடங்களுக்கு செல்வது போல அந்த விளம்பரம் இருக்கிறது.
அதிமுக விமர்சனம்
உணவகத்தில் அசைவ உணவை சாப்பிடக்கூடாது, பெண்கள் கல்வி கற்க கூடாது, வெளிநாட்டுக்குச் செல்லக்கூடாது பல்வேறு பிற்போக்குத்தன கருத்துக்களை முதுகில் அமர்ந்திருப்பவர் பேசுவது போலவும் பொதுமக்கள் அதற்கு பதிலடி கொடுப்பது போலவும் இந்த விளம்பரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் அந்த விளம்பரம் கடைக்கோடி மக்கள் வரை சென்றிருக்கிறது என்பதை உறுதியாக சொல்லலாம்.
சமூக வலைதள பிரச்சாரம்
காரணம் அந்த அளவுக்கு ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இந்த விளம்பரம் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதிமுக தரப்பிலும் சமூக வலைதள பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் திமுக கொண்டு வராத திட்டங்கள் சட்டம் ஒழுங்கு என வழக்கமான பிரச்சார யுக்தியாகவே இந்த விளம்பரங்கள் இருக்கிறது. நேரடியாக திமுகவை விமர்சிக்கும் வகையில் எந்த ஒரு பிரச்சாரத்தையும் செய்யவில்லை. சொல்லப்போனால் எடப்பாடியை முன்னிலைப்படுத்தும் விளம்பரங்களை கூட அதிமுக மேற்கொள்ளவில்லை என்பது விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.
-
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications