என்னண்ணே.. மீண்டும் திமுக தானா? சிரிச்சிட்டே நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி சொன்ன பதில் பாருங்க
சென்னை: எக்ஸிட் போல் பெரும்பாலும், திமுகவுக்குச் சாதகமாக உள்ள நிலையில், இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது தொண்டர்களிடம் சில தகவல்களை ரகசியமாக பகிர்ந்து கொண்டாராம்.. குறிப்பாக, எக்ஸிட் போல் முடிவுகளைத் தூக்கி எறிந்துவிட்டு, மக்கள் ஏன் திமுகவை வீழ்த்த முடிவெடுத்துள்ளனர் என்பதற்கான 3 அதிரடி காரணங்களையும் பட்டியலிட்டதாக தெரிகிறது.. இதுகுறித்து எக்ஸ்ளூசிவ் தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.
வாக்குப்பதிவின் பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்ட பெரும்பாலான நிறுவனங்கள், திமுகவே மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரிவித்திருக்கின்றன. ஒரு நிறுவனம் மட்டும் அதிமுகவும், மற்றொரு நிறுவனம் தவெகவும் ஆட்சி அமைக்கும் என்று வெளிப்படுத்தியுள்ளது.

என்னண்ணே.. மீண்டும் திமுக தானா?
இந்த கருத்துக்கணிப்புகள் வெளியான மறுநாள் அதாவது நேற்று 30-ந்தேதி, எடப்பாடி பழனிச்சாமியை அதிமுகவினர் பலரும் சந்தித்திருக்கிறார்கள்.. அப்போது எக்ஸிட் போல் ரிசல்ட் குறித்தே கேள்விகளும் எழுந்துள்ளன. விவாதங்களும் நடந்திருக்கிந்றன,
குறிப்பாக, என்னண்ணே... மீண்டும் திமுக ஆட்சி தானா? என்கிற ஆதங்கமே அதிகமாக எதிரொலித்ததாம். ஆனால், தன்னை சந்தித்த அதிமுகவினர் எழுப்பிய கேள்விகளுக்கு சிரித்த முகத்துடன் பதில் சொல்லியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
நம்பாதீங்க, தைரியமா இருங்க
அதாவது, "ஒப்பீனியன் போல், எக்ஸிட் போல் விஷயத்திலெல்லாம் எனக்கு பெரிய ஆர்வம் இருந்ததில்லை. அதெல்லாம் நம்பாதீங்க. கடந்த 3 மாதங்களாக திமுகவுக்கு ஆதரவான நெரேட்டிவ்வை பல ஊடகங்களும் கட்டமைத்தன. அதேபோல தான் எக்ஸிட் போல் விவகாரமும். அதிமுகவுக்கு ஆதரவாகக்கூட ஒரு நிறுவனம் சொல்லியிருக்கே என்பதற்காக அதனை சாதகமாக நான் எடுத்துக் கொள்ள வில்லை.
என்னை பொறுத்தவரை, எவ்வளவுதான் திமுகவை தூக்கி நிறுத்த பல நிறுவனங்கள் முயற்சித்திருந்தாலும் அதெல்லாம் மக்களிடம் எடுபடாதுங்கிறது என் நம்பிக்கை.
தேர்தல்னா தமிழக மக்கள் ஒரு விஷயத்தில் கவனமாக இருப்பார்கள். கன்னியாகுமரியில் இருப்பவர்களுக்கும், சென்னையில் இருப்பவர்களுக்கும் எவ்வித தொடர்பும் இருக்காது. ஆனா, தேர்தலில் ஒரே மாதிரி யோசிப்பார்கள். அந்த வகையில், யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை விட யார் வீழ்த்தப்பட வேண்டும் என்பதில் தான் தமிழக மக்கள் கவனமாக இருப்பார்கள்.
எடப்பாடி பழனிசாமி அசராத நம்பிக்கை
அந்த வகையில், திமுக ஆட்சி மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. குறிப்பாக, மக்கள் நல திட்டங்களை திமுக கொண்டு வந்திருக்கலாம். ஆனால், சட்டம் ஒழுங்கு, லஞ்சம், போதை பொருள் நடமாட்டம் என்ற இந்த மூன்றுமே சரியில்லை. இதைத்தான், பிரச்சாரத்துக்கு நான் சென்ற இடங்களிலெல்லாம் தனிப்பட்ட முறையில் மக்கள் என்னிடத்தில் புலம்பினார்கள்.. அதனால், மக்கள் நல திட்டங்களை கொடுத்திருந்தாலும் இந்த 3-ம் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
எப்படி பார்த்தாலும், திமுகவை வீழ்த்த மக்கள் முடிவெடுத்துவிட்டதாகத்தான் நான் நினைக்கிறேன். அந்த வகையில், திமுக ஆட்சி வீழ்த்தப்படும். நாம் ஆட்சியைப் பிடிப்போம். அதனால், எக்ஸிட் போல் விஷயத்தை வைத்துக்கொண்டு குழப்பிக்கொள்ளாதீங்க" என்று சொல்லி அனுப்பி வைத்தாராம் எடப்பாடி பழனிச்சாமி.
- எழில்
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications