கலவரம் செய்ய சதி.. பாஜக கூட்டணியின் ப்ளான்! அதிர வைக்கும் திமுகவின் புகார்! பரபர தேர்தல் களம்!
சென்னை: தமிழகம் முழுவதும் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கும் நிலையில், வாக்கு எண்ணும் மையங்களில் பாஜக சதி செய்ய இருப்பதாக தகவல் வருகிறது எனவும், பாஜகவின் B-Team ஆக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது, எனவே வாக்கு எண்ணும் மையங்களில் புகார் வரும் போது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திமுக எதையும் சந்திக்க தயாராக உள்ளது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ உள்ளிட்டோர் இணைந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

முன்னதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிற்கு திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடிதம் எழுதி இருந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்," நடத்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி ஆகிவிட்டது.
அனைத்து தரப்பு மக்களும் தளபதி தான் இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்க போகிறார் என்ற கருத்து தெரிவித்து வருகிறார்கள் என தெரிவித்தார். பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஏதேனும் வாக்கு எண்ணும் மையத்தில் திட்டமிட்டு ஏதேனும் செய்ய உள்ளார்கள் என்ற சமூக ஊடகங்களில் வருகிற செய்தியை அடிப்படையாக கொண்டு வரும் சந்தேங்களின் அடிப்படையில் எந்த புகார் வந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளோம்.
புகார் வரும் போது நடவடிக்கை எடுக்கிறன் என கூறுவார்கள் ஆனால் மாலை வரை எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டார்கள் அதனால் தான் முன்கூட்டியே கடிதம் எழுதி உள்ளோம் என கூறினார். இரண்டு ஆண்டுகளாக SIR உள்ளிட்ட பல பணிகளில் திமுக கூட்டணிகள் இணைந்து சிறப்பாக பணியாற்றி உள்ளார்கள்.
அதனை கெடுக்கும் நோக்கில் பாஜகவினர் எந்த எல்லைக்கும் செல்வார்கள் எனவும் தேர்தல் ஆணையம் பாஜகவின் B டீமாக செயல்படுகிறது எனவும் தெரிவித்தார்.
திமுக எதையும் சந்திக்க தயாராக உள்ளது. பொதுவாக வாக்கு எண்ணும் மையங்களில் எந்த சட்ட ஒழுங்கு பிரச்சனைகளும் வர கூடாது என தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளோம்" என தெரிவித்தார்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications