திருமாவளவனுக்கு வந்த ஆசை.. அழகிரி அதுக்கு மேலே.. "சைலண்ட் மோடு"க்கு போன ஸ்டாலின்.. என்னாச்சு?
திருமாவளவன், ஸ்டாலினிடம் மேயர் பதவிகளை வலியுறுத்தி வருகிறார்
சென்னை: நடந்து முடிந்த நகர்ப்புற தேர்தலில் திமுக மட்டும் தான், கூட்டணி வைத்து போட்டியிட்டது.. ஆனால், இந்த கூட்டணிக்குள்ளேயே கூடிய சீக்கிரம் ஏதாவது விரிசல் வந்துவிடுமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுவிட்டது.. காரணம், முக்கிய பதவிகளை குறிவைத்து காகூட்டணி கட்சியினர் காய் நகர்த்தி வருவதுதான்.
உள்ளாட்சி தேர்தல் முடிந்தாலும் மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணை தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் வருகிற 4-ந் தேதி நடக்க உள்ளது. உள்ளாட்சி பதவிகளை பிடிப்பதற்கு அரசியல் கட்சியினர் தற்போதே தீவிர களப்பணியாற்றி வருகிறார்கள்.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளையும் திமுக கூட்டணியே கைப்பற்றியுள்ளது. அனைத்து மாநகராட்சியிலும் திமுகவை சேர்ந்தவர்களே மேயராக இருக்க வேண்டும் என்பதில் திமுக தலைமை உறுதியாக உள்ளது.. அதனால், கூட்டணி கட்சியினருக்கு துணை மேயர் பதவிகளை ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளது.

காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சி துணை மேயர் பதவியை எப்படியாவது கேட்டு பெற்று விட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.. காரணம், கோவை மாநகராட்சியில் 9 வார்டுகளில் காங்கிரஸ் போட்டியிட்டது. இதில் 9 வார்டிலுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் தங்கள் கட்சிக்கு துணை மேயர் பதவியை காங்கிரஸ் கேட்டு வருகிறது. அதற்கு ஏற்றவாறு அந்த கட்சி காய் நகர்த்தி துணை மேயர் பதவியை கேட்டு பெற்று விட வேண்டும் என முயற்சித்து வருகிறது.

திருமாவளவன்
காங்கிரஸ் என்றில்லை, திமுகவின் கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், மதிமுக கட்சிகளும் மேயர் மற்றும் நகர்மன்றத் தலைவர் பதவி கேட்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மேயர் பதவி குறித்து விரைவில் முதல்வரிடம் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று கூறியுள்ளார்... ஆனால் அதே நேரத்தில் கூட்டணி கட்சிகளுக்கு மேயர் பதவியையும் நகர்மன்றத் தலைவர் பதவியையும் கொடுக்க திமுக விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. வேண்டுமானால் துணைமேயர் அல்லது துணை நகர்மன்ற தலைவர் பதவியை ஒரு சில கட்சிகளுக்கு கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருமாவளவன்
ஆனால், திருமாவளவனோ, தங்களுக்கு எத்தனை பதவிகள் வேண்டும் என்ற பட்டியலையே ஸ்டாலினிடம் கொடுத்துள்ளார்.. கூட்டணி கட்சிகளின் எதிர்பார்ப்புகளுக்கு கிரீன் சிக்னல் எதையும் தராத ஸ்டாலின், திமுக மாவட்ட செயலாளர்களிடம் பேசி வாங்கிக்கொள்ளுங்கள் என்று என கூலாக சொல்லி விட்டாராம்.. காங்கிரஸை பொறுத்தவரை, 3 மேயர் பதவிகளையும், 12 நகராட்சி சேர்மன் பதவிகளையும் எதிர்பார்க்கிறது. ஒரு மேயர் பதவியாவது பிடித்து விட வேண்டும் என்று முயற்சித்து வருகிறார் அழகிரி... மேலும், சில எண்ணிக்கைகளில் துணை பதவிகளையும் எதிர்பார்க்கிறது காங்கிரஸ். காங்கிரசை போலவே, விசிக, மதிமுக, கம்யூனிஸ்டுகளும் எதிர்பார்க்கின்றனர்.

நெருக்கடி
இது பற்றி திமுக தரப்பில் விசாரிக்கும் போது, "உள்ளாட்சி இடங்களுக்கான பேச்சுவார்த்தை நடக்கும் போதே, மேயர் பதவி கேட்டு நெருக்கடி கொடுக்கக்கூடாது. இந்த முறை மேயர் பதவிகள் திமுகவுக்கு மட்டும் தான். அதேபோல, மாநகராட்சிகளில் துணை மேயர், நகராட்சிகளில் சேர்மன் ஆகிய பதவிக்கும் ஆசைப்படாதீர்கள். நகராட்சிகள்-பேரூராட்சிகளில் துணை தலைவர் பதவிகள் வேண்டுமானால் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கலாம். மற்றபடி ஏதுமில்லை என்று ஆரம்பத்திலேயே திமுக மா.செ.க்கள், கூட்டணி கட்சிகளின் தலைமைக்கு தெரியப்படுத்திவிட்டனர்.

நகர்மன்ற தலைவர்
அதையெல்லாம் மறந்து விட்டு இப்போது ஆசைப்படுகிறார்கள். இப்போது வரை முந்தைய முடிவுகளில் எந்த மாற்றமும் இல்லை. ஒருவேளை, முதல்வர் ஸ்டாலினிடமிருந்து உத்தரவு வந்தால்தான் இந்த முடிவில் மாற்றம் இருக்கும்.. உத்தரவு வரவில்லையெனில் மாற்றம் இருக்காது" என்று தெரிவிக்கின்றனர் திமுகவினர்... ஆனால் அதேநேரத்தில் மேயர், நகர்மன்றத் தலைவர் பதவியை கிடைக்காவிட்டால் கூட்டணி கட்சிகள் கடும் அதிருப்தியுடன் தான் கூட்டணியில் இருக்கும் என்று கூறப்படுகிறது. என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..!
-
விசிகவுக்கு எத்தனை தொகுதிகள்? வெளிப்படையாக சொன்ன திருமாவளவன்! ராமதாஸுக்கு வாழ்த்துகளாம்! -
5 பேர் ரெடி.. விசிகவில் சிட்டிங் எம்எல்ஏக்கு மீண்டும் சீட் கிடைக்குமா? திருமாவளவன் சொன்ன மேட்டர் -
"ப்ளீஸ் திருமா".. ஸ்டாலினின் அந்த வார்த்தை! மா.கம்யூனிஸ்ட்டால் விசிகவிற்கு விழும் அடி.. திமுக ‘செக்’ -
ஸ்டாலினை நேரில் சந்தித்த திருமாவளவன்.. காங்கிரஸ் பாணியில் விசிகவின் வியூகம் கைகொடுக்குமா -
8 கேட்கும் விசிக.. 6க்கு இழுக்கும் திமுக.. அழுத்தமாக நிற்கும் திருமாவளவன்.. திமுக கணக்கு என்ன? -
கோட்டையை எட்டிப்பிடிக்கும் ‘மகளிர்’ மேஜிக்! ரூ.2000 தேடி வருதுங்க! வங்கி கணக்கில் அடிக்கும் ஜாக்பாட் -
"கவுண்டவுன் ஸ்டார்ட்".. அண்ணா அறிவாலயத்தில் மின்னும் டிஜிட்டல் போர்டு.. திமுகவினர் உற்சாகம்! -
கோவையில் போட்டியா?... முதல்வரின் விருப்பத்தால் விரக்தியில் செந்தில் பாலாஜி! -
டெல்லியில் எடப்பாடி பழனிசாமி வெயிட்டிங்! இவர்களிடம் தமிழ்நாடு சிக்கினால் என்ன ஆகும்? ஸ்டாலின் அட்டாக் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications