திமுகவிடம் 10 தொகுதிக்கான பட்டியலை கொடுத்த இந்திய கம்யூனிஸ்ட்! மறுபடியும் முதல்ல இருந்தா?
சென்னை: திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது 10 தொகுதிகளுக்கான விருப்ப பட்டியலை கொடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளை கேட்டதை தொடர்ந்து பல்வேறு கட்சிகளும் திமுகவிடம் அதிக தொகுதிகளை கேட்டு வருகின்றன. சட்டசபை தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்திருந்தது.

இது குறித்த தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையின் போது ஒரு தொகுதியை குறைத்துக் கொள்ளுமாறு திமுக கேட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்கும் போது தங்களுக்கு வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் விடாபிடியாக 6 தொகுதிகளில் நின்றது.
இதைத் தொடர்ந்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் 5 தொகுதிகளை ஒதுக்குவதாக சொன்னது. இதை இந்திய கம்யூனிஸ்ட் ஏற்றது. "பாஜகவை வீழ்த்துவதே எங்களது முதன்மை இலக்கு, அதற்காக ஒரு தொகுதியை விட்டுக்கொடுப்பதில் எங்களுக்குத் தயக்கமில்லை" என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் 10 தொகுதிகளுக்கான விருப்ப பட்டியலை திமுகவிடம் இன்று வழங்கியுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தளி, திருத்துறைப்பூண்டி, நாகை, வால்பாறை, தொண்டாமுத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், பழனி, சிவகங்கை, பவானிசாகர், திருப்பூர் வடக்கு ஆகிய 10 தொகுதிகளை கொடுத்துள்ளது. இந்த தொகுதிகளில் 5 தொகுதிகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இறுதி செய்யப்படும் என தெரிகிறது.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மொத்தம் 6 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் 2 மட்டுமே வென்றது. பவானிசாகர், சிவகாசி, ஸ்ரீவைகுண்டம், பல்லடம் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெறவில்லை. திருத்துறைப்பூண்டி, வால்பாறை ஆகிய தொகுதிகளில் வென்றுள்ளது.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications