தமிழ்நாட்டில் கெத்து காட்டும் திமுக கூட்டணி! அதிமுக, பாஜகவுக்கு இத்தனை சீட் தானா? வெளியான புது சர்வே
சென்னை: நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்பு முடிவுகளை டைம்ஸ் நவ் - Matrize வெளியிட்டுள்ளதது. இதன்படி, தமிழகத்தில் திமுக கூட்டணி கிட்டத்தட்ட கிளீன் ஸ்வீப் செய்யும் அளவுக்கு பெரும் வெற்றியை பெறும் எனக் கூறியுள்ளது.
லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்டது. இதனால், அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு, கூட்டணியை இறுதி செய்வது உள்ளிட்ட பேச்சுவார்த்தையை முழு வீச்சில் மெற்கொண்டு வருகின்றன. தமிழகத்தில் ஆளும் திமுக தனது கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. இன்னொரு பக்கம் பாஜகவை கூட்டணியில் இருந்து கழற்றிவிட்ட அதிமுக, தனது தலைமையில் தனியாக ஒரு கூட்டணியை அமைக்க ஆலோசித்து வருகிறது.

அதிமுக, பாஜக: அதிமுக கூட்டணியில் பாமக, தேமுதிக இணைய வாய்ப்பு உள்ளதாக பேச்சு அடிபடுகிறது. ஆனால், இந்தக் கட்சிகள் பாஜக உடனும் பேசி வருவதாக சொல்லப்படுகிறது. இதனால், அதிமுக கூட்டணியில் எந்தக் கட்சி இடம் பெறும் என்பதை யூகிக்க முடியவில்லை. கூட்டணிக்கு யாரும் இல்லை என்றால் தனித்து போட்டியிடவும் அதிமுக தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது.
மறுபக்கம் அதிமுகவிற்காக கூட்டணி கதவுகள் திறந்தே இருக்கும் அமித்ஷா நேற்று கூட சொல்லியிருந்தார். ஆனால், பாஜகவுடன் கூட்டணி கிடையாது என அதிமுக மீண்டும் திட்டவட்டமாக கூறியிருக்கிறது. இந்த நிலையில்தான் பாஜக மூன்றாவது அணியை லோக்சபா தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாட்டில் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக கூட்டணிக்கே வெற்றி: அதன்படி பாஜக + ஓ பன்னீர்செல்வம் + டிடிவி தினகரன் + பாரி வேந்தரின் ஐஜேகே + மற்றும் சில சிறிய கட்சிகள் இணைந்து மூன்றாவது கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாமக, தேமுதிக கட்சிகளின் நிலைப்பாடு பொறுத்து இவை மாறும். தமிழ்நாட்டில் இந்த முறை லோக்சபா தேர்தலில் மும்முனை போட்டி நிலவும் எனத் தெரிகிறது.
இதனிடையே நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்பு முடிவுகளை டைம்ஸ் நவ் - Matrize வெளியிட்டுள்ளதது. இதன்படி, தமிழகத்தில் திமுக கூட்டணி கிட்டதட்ட கிளீன் ஸ்வீப் செய்யும் அளவுக்கு பெரும் வெற்றியை பெறும் எனக் கூறியுள்ளது. டைம்ஸ் நவ் சர்வே முடிவுகள் வருமாறு:
தமிழ்நாடு மொத்த தொகுதிகள்: 39
திமுக கூட்டணி - 36
அதிமுக - 02
பாஜக - 01.












Click it and Unblock the Notifications