“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி!
சென்னை: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வரும் நிலையில், கூட்டணி வெல்ல சில தொகுதிகளை விட்டுக் கொடுக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக தேமுதிக விட்டுக்கொடுக்கும் எனக் கூறியுள்ளார் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.
திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை இறுதி செய்து வருகிறது. ஏற்கனவே, காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள், மதிமுகவுக்கு 4, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது.

தேமுதிக புதிதாக திமுக கூட்டணியில் இணைந்துள்ள நிலையில் அக்கட்சிக்கு 1 ராஜ்யசபா சீட் வழங்கப்பட்டது. எத்தனை சட்டசபை தொகுதிகள் என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை. தேமுதிக உடன் விரைவில் கூட்டணி உடன்பாடு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டணியில் உள்ள எல்லா கட்சிகளுக்கும் இடங்களை பகிர்ந்து கொடுக்க வேண்டியிருப்பதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ளச் சொல்லி கூட்டணிக் கட்சிகளை திமுக கோரி வருகிறது. தேமுதிகவிடமும் ஒரு தொகுதியை குறைத்துக் கொள்ளுமாறு பெற்றுக் கொள்ளுமாறு திமுக கோரியதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தொகுதிப் பங்கீடு, எந்தெந்தத் தொகுதிகளில் போட்டியிடலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா கூறுகையில், "இதுவரை ஊழல் குற்றச்சாட்டுகளே இல்லாத கட்சி தேமுதிக. எப்படி கேப்டன் மீது குடிக்கிறார், போதை பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார் என்று தவறாக விமர்சனத்தை முன் வைத்தார்களோ.. தற்போது நான் கார் வாங்கியுள்ளதாக கூறி சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
ஏன் ஒரு கார் வாங்கும் தகுதி கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா? மக்களுக்காக 100% உழைப்பை கொடுத்தவர் கேப்டன் விஜயகாந்த். அவருக்கு பின்னால் இருந்தவள் நான் என்பது இந்த ஊர் அறியும் என்று கூறினார். தேமுதிக 0.5% வாக்கு வைத்துள்ளது என்கிறீர்கள் பிறகு, ஏன் யூடியூப் மற்றும் தொலைக்காட்சிகளில் விவாதம் செய்கிறீர்கள். அதனை விட்டு விட வேண்டியது தானே. தேமுதிக என்ற ஒரு பெயர் இல்லாமல் எந்த விவாதத்தில் பேச முடியுமா? வாழ்த்தினாலும் தேமுதிக தான் விமர்சித்தாலும் தேமுதிக தான். உயர்த்திப் பிடித்தாலும் தேமுதிக தான் என்று கூறினார்.
தேமுதிகவுக்கு திமுக கூட்டணியில் சீட் குறைக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு ஒரு கூட்டணி வெல்ல சில தொகுதிகளை விட்டுக் கொடுக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக தேமுதிக விட்டுக் கொடுக்கும். மற்றவர்கள் விட்டுக் கொடுக்கும் போது தேமுதிகவும் விட்டுக் கொடுப்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்று கூறினார். மேலும் கட்சியில் விசுவாசிகளுக்கு தேர்தலில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
துண்டு துண்டாக உடைகிறதா திமுக ஓட்டு? சென்னை வேளச்சேரி தவெக விஜய் 18% வாக்குகளா? ஷாக் பாயிண்ட் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி! -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி












Click it and Unblock the Notifications