திமுக கூட்டணிக்குள் மீண்டும் மோதல்.. விசிக எம்எல்ஏ கருத்தால் காங்கிரஸ் கோபம்.. என்ன நடந்தது?
சென்னை: திமுக கூட்டணி (DMK Alliance) கட்சிகளுக்குள் மீண்டும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. ராமதாஸை திமுக கூட்டணிக்குள் கொண்டு வருவது தொடர்பாக காங்கிரஸ் கருத்து தெரிவித்து இருந்த நிலையில் இதற்கு விசிக கடும் எதிர்வினையாற்றியது. இந்தநிலையில் விசிகவின் கருத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு கங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் பாமக - திமுக கூட்டணி பற்றி கூறி இருந்தார், தமிழகத்தில் இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது. அதை சிதைக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியை திமுக கூட்டணியில் இருந்து வெளியே கொண்டுவர வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கமாக உள்ளது.

ராமதாஸும் திருமாவளவனும்..
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸை பிரித்து தனிமையாக்கி, அதன் வாக்கு வங்கியை குறைத்து, சிறுபான்மையினர் மற்றும் பட்டியலின வாக்குகளை சிதறடித்து தமிழகத்தை பிடித்துவிட வேண்டும் என மதவாத பாஜக கனவு காண்கிறது.
பாமக நிறுவனர் ராமதாஸ், திமுக கூட்டணிக்குள் வருவதை திமுகதான் முடிவு செய்ய வேண்டும். திமுகதான் கூட்டணிக்கு தலைமை. ராமதாஸும், விசிக தலைவர் திருமாவளவனும் நெருக்கமாக இருந்தவர்கள் தான். இருவருக்கும் இடையே இடைவெளி எல்லாம் இல்லை. அவருக்கு ஒன்று என்றால் இவர் பேசுவார்.
எதிர்வினையாற்றிய விசிக
இவருக்கு ஒன்று என்றால் அவர் பேசுவார். தேவை என்றால் ஒருவருக்கொருவர் சந்தித்து பேசி சரி செய்து கொள்வார்கள். அதை அவர்கள் தான் முடிவு செய்யவேண்டும்" என்று கூறினார். செல்வப்பெருந்தகையின் இந்த கருத்துக்கு விசிக கடும் எதிர்வினையாற்றியது. விசிக எம்.எல்.ஏ பாலாஜி இது தொடர்பாக கூறியதாவது:-
"கூட்டணியில் யார் யார் என்பதை திமுக முடிவெடுக்கும் என்பதைத் தான் நாங்களும் சொல்லி விட்டோமே. சாதியவாத, மதவாத சக்திகள் இருக்கும் இடத்தில் இருக்க மாட்டோம் எனும் நிலைப்பாட்டை விசிக மாற்றிக் கொள்ளும் என்கிற தோற்றத்தை திணிப்பது நாகரீகமற்ற அரசியல் அணுகுமுறை" என்று கூறியிருந்தார்.
செல்வப்பெருந்தகை கருத்து
விசிக - காங்கிரஸ் மோதலால் கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்ட நிலையில் செல்வப்பெருந்தகை இது தொடர்பாக தனது கருத்தை முன்வைத்து இருக்கிறார். செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மதுரையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., அவர்கள், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் தொடர்பான கூட்டணி விவகாரங்களில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிலைப்பாட்டை மிகத் தெளிவாகவும், பொறுப்புடனும் எடுத்துரைத்திருந்தார்.
உண்மைக்கு புறம்பானவை
அந்தச் சந்திப்பில், திமுக தலைமையிலான கூட்டணியில் எந்த அரசியல் கட்சி சேர வேண்டும் அல்லது சேரக் கூடாது என்பது குறித்து அவர் எவ்விதமான கருத்தையும் தெரிவிக்கவில்லை. குறிப்பாக, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், திமுக கூட்டணியில் இடம் பெற வேண்டும் என அவர் கூறியதாக வெளிவந்த செய்திகள் முற்றிலும் தவறானவை, உண்மைக்கு புறம்பானவை மற்றும் திரிக்கப்பட்ட செய்திகளாகும்.
உண்மையில், தமிழ்நாட்டின் அரசியல் நிலவரத்தை கருத்தில் கொண்டு, கூட்டணி தொடர்பான இறுதி முடிவுகள் அனைத்தும் தமிழ்நாட்டிற்கு தலைமையாற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலேயே எடுக்கப்படும் என்பதையே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அவர்கள் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டார்.
கண்டிக்கத்தக்க செயலாகும்
இந்நிலையில், உண்மையை முழுமையாக அறிந்து கொள்ளாமல், ஊடகங்களில் வெளியான ஆதாரமற்ற செய்திகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி அவர்கள் கண்டனம் தெரிவித்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும்.
கூட்டணிக் கட்சிகளுக்கிடையே நிலவும் நல்லுறவு, பரஸ்பர மரியாதை மற்றும் அரசியல் நாகரிகத்தைப் பேண வேண்டிய இத்தகைய காலகட்டத்தில், பொறுப்பற்ற முறையில் வெளியிடப்படும் தவறான செய்திகளை அடிப்படையாகக் கொண்டு கருத்துகளை வெளியிடுவது,
கூட்டணியின் ஒற்றுமைக்கும் அரசியல் நிலைத்தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலானதாகும். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ., அவர்கள் கூறாத கருத்தை கூறியதாகப் பரப்பி, அதனை அரசியல் நோக்கத்துடன் திரித்து விளக்கி, உண்மை அறியாமல் கண்டனம் தெரிவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.
எனவே, உண்மைக்கு புறம்பான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர்களுக்கும், அத்தகைய செய்திகளை பரப்பியவர்களுக்கும் எதிராக கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். என்று கூறியுள்ளார்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications