"எல்லோரையும் வர சொல்லுங்க".. 8 கட்சிகளை அழைக்கும் ஸ்டாலின்.. மாஸ்டர் பிளான்! அப்போது அதிமுக? போச்சா

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஸ்டாலின் கடந்த சில மாதங்களாக செய்யாமல் இருந்த முக்கியமான விஷயம் ஒன்றை செய்ய போவதாக கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமையில் 2024ல் மெகா கூட்டணி அமையும் என்று சொன்னதில் இருந்தே தமிழ்நாடு அரசியல் பரபரப்பாக இருக்கிறது.

அதிமுக மெகா கூட்டணி அமைக்க போகிறதா? யாரெல்லாம் கூட்டணியில் சேர போகிறார்கள்? திமுக கூட்டணியில் இருந்து கட்சிகள் தாவுமா? அமமுக இந்த கூட்டணியில் சேருமா என்றெல்லாம் பல்வேறு கேள்விகள் வட்டமடிக்க தொடங்கி உள்ளன.

இந்த கேள்விகள் எல்லாம் ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் திமுக இதை எப்படி எதிர்கொள்ளும் என்பதே மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. எதிர்க்கட்சியான அதிமுகவின் மெகா கூட்டணிக்கு கண்டிப்பாக ஆளும் கட்சியான திமுக பதில் வியூகம் போட்டு இருக்கும்.

அப்படி திமுக வசம் இருக்கும் வியூகம் என்ன என்று கோட்டை வட்டாரத்தில் விசாரித்தோம். அவர்கள் நமக்கு சில முக்கிய தகவல்களை தந்தனர்.

திமுக நிலைப்பாடு

திமுக நிலைப்பாடு

திமுகவை பொறுத்தவரை இப்போதைக்கு கொள்கை ரீதியான கூட்டணியே முக்கியம் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறதாம். கொள்கை இல்லாமல் சில கட்சிகளுடன் கூட்டணி வைத்து அவர்கள் எம்பி பதவிகளை எல்லாம் வாங்கிகொண்டுவிட்டு, இப்போது எங்களுக்கே எதிராக பேசுகிறார்கள் என்ற வருத்தத்தில் இருக்கிறதாம் திமுக தலைமை. அதாவது ஐஜேக கட்சியின் பாரிவேந்தர் திமுக சின்னத்தில் எம்பி ஆகிவிட்டது திமுகவையே எதிர்த்து பேசுவதை திமுக தரப்பு விரும்பவில்லையாம்.

கூட்டணி

கூட்டணி

அதேபோல் பாஜகவை எதிர்க்க வேண்டும் என்றால் சீட் ஷேரிங் என்பதை தாண்டி கொள்கை ரீதியாக கட்சிகள் இணைய வேண்டும் என்பதில் திமுக தெளிவாக இருக்கிறதாம். தற்போது இருக்கும் திமுக கூட்டணியில் இரண்டு கட்சிகள் மட்டும் கொஞ்சம் அதிருப்தியில் இருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விசிக திமுகவுடன் மிக நெருக்கமாக இருக்கிறது. துரை வைகோ வந்த பின் வைகோவை விட மதிமுகவை அவர் மிக வேகமாக நடத்தி வருகிறார். அதோடு திமுகவுடனும் நெருக்கம் காட்டி வருகிறாராம்.

நெருக்கம்

நெருக்கம்

இது போக காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், மனிதநேய மக்கள் கட்சி எல்லாமும் திமுகவுடன் நெருக்கம் காட்டி வருகிறதாம். தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மட்டும் ஒரு சில விஷயங்களில் திமுகவுடன் கருத்து வேறுபாடு கொண்டு இருக்கிறதாம். தமிழ்நாட்டில் நடந்த சில சம்பவங்களில் திமுகவுடன் இவர்களுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கிறதாம். இவர்களை மட்டும் சமாதானம் செய்யும் திட்டத்தில் திமுக தலைமை இருப்பதாக கூறப்படுகிறது.

கூட்டம்

கூட்டம்

அதோடு முதல்வர் ஸ்டாலின் கடந்த சில மாதங்களாக செய்யாமல் இருந்த முக்கியமான விஷயம் ஒன்றை செய்ய போவதாக கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆட்சிக்கு வந்த பின் முதல்வர் ஸ்டாலின் பெரிதாக கூட்டணி தலைவர்களை ஒன்றாக சந்திக்கவில்லை. ஒரே மேடையில் இவர்கள் எல்லோரையும் அழைத்து வைத்து பேச முடியவில்லை. முதல்வர் ஸ்டாலினை சந்திக்க நினைக்கும் கூட்டணி தலைவர்களுக்கும் அப்பாயிண்ட்மெண்ட் கிடைப்பது இல்லை என்று கூறப்படுகிறது.

 அப்பாயிண்ட்மெண்ட்

அப்பாயிண்ட்மெண்ட்

முதல்வரின் அப்பாயிண்ட்மெண்ட் வாங்க முயன்று, முடியாமல் சில கூட்டணி தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள், நிகழ்வுகள் காரணமாக பிசியாக இருக்கிறார். அதோடு அவருக்கு உடல்நிலையில் பிரச்சனை இருக்கிறது. இதனால் கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்க போதிய நேரம் கிடைப்பது இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் இப்போது அதிமுக மெகா கூட்டணி அமைக்கும் திட்டத்தில் இருக்கிறது.

திமுக கூட்டணி

திமுக கூட்டணி

இதனால் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை இழுக்க அதிமுக முயற்சி எடுக்கும். அதிருப்தியில் இருக்கும் கட்சிகளை இழுக்க முயற்சி எடுக்கும். இதை தடுக்கவே கூட்டணி தலைவர்களை சந்தித்து பேசும் திட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் இருப்பதாக கூறப்படுகிறது. ஒன்றரை வருட ஆட்சி குறித்து ஆலோசனை, 2024 தேர்தல் தொடர்பான ஆலோசனை, ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்து தொடர்பான ஆலோசனை என்று பல விஷயங்களை இவர்கள் ஆலோசனை செய்வார்கள் என்று கூறப்படுகிறது.

8 கட்சிகள்

8 கட்சிகள்

காங்கிரஸ், மதிமுக, விசிக, சிபிஐ, சிபிஎம், மமக, கொ.ம,தே. கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகிய 8 கட்சிகளை அழைத்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்வார் என்று கூறப்படுகிறது. ஆளுநரை எதிர்க்கும் விவகாரத்தில் இவர்கள் எல்லோரும் நெருக்கமாகவே இருக்கிறார்கள்.இருந்தாலும் இவர்களை ஸ்டாலின் நேரில் சந்தித்து பேசுவது, அவர்களின் கோரிக்கைகளை கேட்பதே சரியாக இருக்கும் என்பதால் ஸ்டாலின் இவர்களை விரைவில் மீட்டிங்கிற்கு அழைப்பார் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+