விஜயின் தவெக சரியில்லை... தமிழ்நாடு பிஷப் கவுன்சில் திமுக கூட்டணிக்கு ஆதரவு.. அதிமுக மீது ‘அட்டாக்'
சென்னை: சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாடு பிஷப் கவுன்சில் மற்றும் கிறிஸ்தவ உரிமை இயக்கம் ஆகியவை இணைந்து திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவை அறிவித்துள்ளன. அதோடு தமிழகத்தில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளதாலும், கொள்கை எதிரி என விஜயின் தவெக கூறினாலும் கூட அவர்களின் செயல்பாடு அப்படியானதாக இல்லை என்று தமிழ்நாடு பிஷப் கவுன்சில் மற்றும் கிறிஸ்தவ உரிமை இயக்ககம் விமர்சனம் செய்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. அதன்பிறகு மே 4ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் 4 முனை போட்டி நிலவுகிறது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, சீமானின் நாம் தமிழர், விஜயின் தமிழக வெற்றிக் கழகம் இடையே போட்டி உள்ளது.

இதில் ஆட்சியை யார் பிடிப்பது ? என்பதில் திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணி இடையே தான் உள்ளது. இந்த தேர்தல் வழக்கத்துக்கு மாறாக 4 முனை போட்டியாக மாறி உள்ளது. விஜயின் அரசியல் வருகையால் வாக்குகள் சிதறும் நிலை உள்ளது. இது திமுக மற்றும் அதிமுகவினரை கதிகலங்க வைத்துள்ளது.
பிஷப் கவுன்சில் திமுக கூட்டணிக்கு ஆதரவு
இதனால் தேர்தலில் அனைத்து தரப்பு மக்களையும் பெறும் வகையில் இருகட்சிகளும் பணியாற்றி வருகின்றன. தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக ஒவ்வொரு கட்சிகளும் சின்ன சின்ன அமைப்புகளிடம் ஆதரவு கோரி வருகின்றன. இந்நிலையில் தான் தமிழ்நாடு பிஷப் கவுன்சில் மற்றும் கிறிஸ்தவ உரிமை இயக்கம் (Tamil Nadu Bishop Council and Christian Rights Movement) ஆகியவை திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளன. இதுதொடர்பாக கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மதசார்பின்மை காக்க வேண்டும்
அதில், ''மதச்சார்பின்மை காக்கப்பட வேண்டும். பெரும்பான்மைவாத சக்திகள் தோற்கடிக்கப்பட வேண்டும். தற்போதைய ஆட்சியில் மகளிருக்கு இலவச பேருந்து பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப் பெண் போன்ற நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. பள்ளி - கல்லூரி சேர்க்கை விகிதம், பணிக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை, தொழில்துறை வளர்ச்சி உள்ளிட்டவற்றில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.
அதிமுக- தவெக மீது அட்டாக்
நாடு முழுவதும் சர்ச்சுகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. பல கிறிஸ்தவ அமைப்புகளின் FCRA உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒரே தேசம், ஒரே கலாசாரம், ஒரே மொழி என்ற கொள்கையை மத்திய அரசு திணிக்க முயற்சிக்கிறது. பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்து திராவிட கொள்கைகளை முழுமையாக கைவிட்டு விட்டது.
மதுரை மாநாட்டில் பெரியார் உருவப்படம் நீக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அந்த கட்சியின் நிலைப்பாட்டையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழக வெற்றிக் கழகம், பாஜகவை ஒரு கொள்கை எதிரியாக காட்டி கொண்டாலும் அதன் செயல்பாடு என்பது அப்படியானதாக இல்லை. இதனால் திமுக தலைமையிலான காங்கிரஸ் அங்கம் வகிக்கும் கூட்டணிக்கு வாக்காளர்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும்'' என்று கூறியுள்ளது.
விஜயின் தவெகவிற்கு பெரிய ஷாக்
இதன்மூலம் தமிழ்நாடு பிஷப் கவுன்சில் மற்றும் கிறிஸ்தவ உரிமை இயக்ககம் தமிழக சட்டசபை தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளது. பொதுவாகவே கிறிஸ்தவர்களின் ஓட்டுகள் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு தான் பெரும்பான்மையாக கிடைக்கும். அதிமுகவுக்கு மிக குறைந்த அளவில் தான் கிடைக்கும். தற்போது பாஜகவுடன் அதிமுக கைகோர்த்துள்ளதால் கிறிஸ்தவ அமைப்புகள் ஆதரவு தெரிவிக்க தயங்குகின்றன.
அதேவேளையில் விஜய் கிறிஸ்தவர். இதனால் அவருக்கு கிறிஸ்தவ அமைப்புகளின் ஆதரவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழ்நாடு பிஷப் கவுன்சில் மற்றும் கிறிஸ்தவ உரிமைகள் இயக்கம் விஜயை நம்பாமல் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இது விஜயின் தவெகவினருக்கு அதிர்ச்சி வைத்தியமாக அமைந்துள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications