மேற்கு மண்டலம்.. திமுக 21, அதிமுக 18, 11 இடங்களில் கடும் இழுபறி.. தந்தி டிவி சர்வே.. முழு விவரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக கடந்த முறை ஆட்சியமைக்க ஆரம்பிக்க காரணமாக இருந்த மேற்கு மண்டலத்தில் இந்தமுறை திமுக கூட்டணி 21 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக தந்திடிவி கூறியுள்ளது. அதேநேரம் அதிமுக கூட்டணி 18 இடங்களில் வெல்லக்கூடும் என்றும், திமுக அதிமுக கூட்டணி இடையே 11 இடங்களில் இழுபறி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தந்தி டிவி மார்ச் 5ம் தேதி முதல் மார்ச் 28ம் தேதி வரை தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் கருத்துக்கணிப்பு நடத்தி வெளியிட்டுள்ளது.

இதில் திமுக கூட்டணி 124 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி 52 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாகவும், அதிமுக திமுக இடையே 58 இடங்களில் கடும் போட்டி உள்ளதாகவும் தந்திடிவி சர்வேயில் கூறப்பட்டுள்ளது. மேற்கு மண்டலத்தில் யார் யாருக்கு எந்த தொகுதியில் வெல்ல வாய்ப்பு என்பதை பார்ப்போம்.

11 இடங்கள்

11 இடங்கள்

மேற்கு மண்டலத்தில் ராசிபுரம், ஈரோடு கிழக்கு, பெருந்துறை, தாராபுரம், மடத்துக்குளம், கவுண்டம்பாளையம், கோவை தெற்கு, சங்ககிரி நாமக்கல், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி ஆகிய 11 தொகுதிகளில் கடும் போட்டி நிலவுகிறதாம். பெருந்துறையில் சுயேட்சையாக போட்டியிடும் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் கணிசமான வாக்குகளை பிரிப்பதால் அங்கு போட்டி நிலவுகிறது. இதேபோல் கோவை தெற்கில் காங்கிரஸ், பாஜகவைவிட அதிக வாக்குகளை மநீம பெறுவதால் கடும் போட்டி நிலவுகிறது,

அதிமுக அதிகம்

அதிமுக அதிகம்

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை அங்குள்ள 10 தொகுதிகளில் அதிமுக நான்கு இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும், திமுக கூட்டணி 2 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாகவும் சர்வேயில் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் 4 தொகுதிகளில் கடும் போட்டி நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது கோவை வடக்கு, தொண்டாமுத்தூர், மேட்டுப்பாளையம், சூலூர் ஆகிய இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாம். திமுக கூட்டணி சிங்காநல்லூர், வால்பாறையில் வெல்ல வாய்ப்பு உள்ளதாம்.

திமுக பைட்

திமுக பைட்

திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி, திருப்பூர் வடக்கு, பல்லடம், உடுமலைப்பேட்டை ஆகிய நான்கு தொகுதிகளில் திமுக வெல்லக்கூடும் என்கிறது. அதேபோல் காங்கேயம், திருப்பூர் தெற்கு, ஆகிய தொகுதிகளில் திமுக வெல்லக்கூடும் என்றும், தாராபுரம், மடத்துக்குளத்தில் கடும் போட்டி நிலவுகிறது என்றும் தந்திடிவி கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

திமுக வெல்லும்

திமுக வெல்லும்

நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை உதகமண்டலம், கூடலூர், குன்னூர் ஆகிய மூன்று தொகுதிகளிலும் திமுக கூட்டணி 3 வெற்றி உறுதி என்கிறது தந்திடிவி கணிப்பு. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை ஈரோடு மேற்கு, பாவனிசாகர், அந்தியூர், மொடக்குறிச்சியில் திமுக வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாம். கோபிசெட்டிபாளையம், பவானியில் அதிமுக வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும், பெருந்துறையில் கடும் போட்டி நிலவுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதிமுக வெல்லும்

அதிமுக வெல்லும்

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை ஆத்தூர், ஏற்காடு, ஓமலூர், மேட்டூர், எடப்பாடி, சேலம் மேற்கு, சேலம் தெற்கு ஆகிய தொகுதிகளில் அதிமுக பாமக கூட்டணி வெல்ல வாய்ப்பு உள்ளதாம். திமுக கூட்டணி சேலம் வடக்கு, வீரபாண்டி, ஆகிய இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாம். சங்ககிரியில் கடும் போட்டி நிலவுகிறது என தந்திடிவி கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

கரூர்

கரூர்

நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, சேந்தமங்கலத்தில் திமுக கூட்டணி வெல்லும் என்றும் அதிமுக குமாரபாளையத்தில் வெல்லும் என்றும், ராசிபுரத்தில் கடும் போட்டி நிலவுவதாகவும் கூறப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயவுரம், குளித்தலை என ஐந்து தொகுதியிலும் திமுகவே வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+