முகாம் அலுவலகத்தில் முகம் மலர்ந்த திமுக கூட்டணி கட்சி தலைவர்கள்! தித்தித்த ஸ்வீட் பாக்ஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் மு..ஸ்டாலினை அவரது முகாம் அலுவலகத்தில் திமுக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களான திருமாவளவன், பாலகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் சந்தித்தனர். இந்த சந்திப்புக்கு அமைச்சர் ..வேலு ஏற்பாடு செய்திருந்தார்.

சாம்சங் நிறுவனத்துக்கும் அதன் தொழிலாளர்களுக்குமிடையே ஏற்பட்ட பிரச்சனைகள், கோரிக்கைகள் ஆகியவற்றை சுமுகமாக திமுக அரசு தீர்வு கண்டதற்கு நன்றி தெரிவிப்பதற்காக இந்த சந்திப்பு நடந்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுகவும் அதனையே தெரிவித்திருக்கிறது. ஆனால், சந்திப்புக்கு வேறு சில காரணங்கள் இருக்கிறது என்கிறார்கள்.

dmk vck communist

இது குறித்து விசாரித்தபோது, "கூட்டணிக்குள் விரிசல் ஏற்படும் பல சம்பவங்கள் கூட்டணி தலைவர்களால் சமீப காலங்களில் நடந்து கொண்டிருக்கின்றன. அதனை அம்பலப்படுத்ததான், திமுக கூட்டணியில் விரிசல் என விமர்சித்தார் எடப்பாடி. இதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், கூட்டணியில் விவாதங்கள் இருக்கிறதே தவிர விரிசல் கிடையாது என சொன்னார். இந்த நிலையில், கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை என எதிர்க்கட்சிகளுக்கு உணர்த்தும் வகையில் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இது தவிர, கூட்டணித் தலைவர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள் சொல்லியிருக்கிறார் ஸ்டாலின். அத்துடன், தீபாவளி கிப்ட்டாக ஒரு ஸ்வீட் பாக்ஸ் மற்றும் கனமான பரிசு பைகளையும் கொடுத்து குஷியாக வாழ்த்துச் சொல்லியிருக்கிறார் ஸ்டாலின்.

கனிவான, அன்பான கவனிப்புகளுடன் தீபாவளி பரிசுகள் கூட்டணி தலைவர்களை குஷிப்படுத்தும் என்று திமுக நினைக்கிறது, என்கிறார்கள் திமுக மேலிடத்துக்கு நெருக்கமானவர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+