Agni News Survey: பெரம்பூரில் விஜய் வெல்வாரா? அப்போ ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்துக்கு புஸ்ஸா?
சென்னை: சென்னை மண்டலத்தில் உள்ள 37 தொகுதிகளில் 31 தொகுதிகளில் திமுக கூட்டணி வெல்லும் என அக்னி நியூஸ் கணித்துள்ளது. தவெகவுக்கு சென்னை மண்டலத்தில் ஒரு இடம்தான் கிடைக்கும் என்றும் கணிப்புகள் வெளியாகியுள்ளன.
கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் 85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இது சதவீத அடிப்படையில் உயர்வாகத் தெரிந்தாலும், வாக்காளர்களின் எண்ணிக்கையை முந்தைய தேர்தல்களோடு ஒப்பிடும்போது, இதில் பெரிய அளவிலான 'வாக்குப்புரட்சி' ஏதும் நிகழவில்லை என்பதே அரசியல் வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.

எக்சிட் போல் (Exit Poll) நிலவரம்
வழக்கமாக தேர்தல் முடிந்தவுடன் கருத்துக் கணிப்புகள் வெளியாகும். ஆனால், மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்டத் தேர்தல் இன்று (ஏப்ரல் 29) வரை நடைபெற்றதால், தேர்தல் ஆணையம் எக்சிட் போல் முடிவுகளை வெளியிடத் தடை விதித்திருந்தது. தற்போது அங்கு தேர்தல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து தமிழகம், புதுச்சேரி, அஸ்ஸாம், கேரளா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்கான எக்சிட் போல் முடிவுகள் வெளியாகத் தொடங்கியுள்ளன.
2021 தேர்தல் முடிவுகள் (மீள்பார்வை):
திமுக: 133 இடங்கள் (தனிப்பெரும்பான்மை)
அதிமுக: 66 இடங்கள்
காங்கிரஸ்: 18 இடங்கள்
பாமக: 5 இடங்கள்
பாஜக: 4 இடங்கள்
விசிக: 4 இடங்கள்
கம்யூனிஸ்ட் & மார்க்சிஸ்ட்: தலா 2 இடங்கள்

தற்போது வெளியாகியுள்ள எக்சிட் போல் முடிவுகள், தமிழகத்தில் மீண்டும் அதே போன்ற ஒரு வலுவான நிலையை ஒரு கட்சி பெறுமா அல்லது அரசியல் மாற்றங்கள் நிகழுமா என்பதைத் தீர்மானிக்கும் காரணியாகப் பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் இன்றைய தினம் எக்சிட் போல் வெளியானது. அதில் சென்னை மண்டலத்தில் உள்ள 37 தொகுதிகளில் திமுக கூட்டணி 31 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 5 தொகுதிகளிலும் தவெக ஒரு தொகுதியிலும் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.
அது போல் சென்னை மண்டலத்தில் வாக்கு சதவீதத்தை பொருத்தமட்டில் திமுக 44.12 சதவீதமும், அதிமுக 29.26 சதவீதமும், தவெக 21.60 சதவீதமும், நாம் தமிழர் 4.04 சதவீதமும் பெறும் வாய்ப்புள்ளது என கணிப்புகள் சொல்கின்றன.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications