திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள்? தீயாக பரவும் "உத்தேச லிஸ்ட்"
சென்னை: அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து அனைவரது கவனமும் திமுக கூட்டணி பக்கம் திரும்பிவிட்டது.
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எவ்வளவு சீட் கிடைக்கும் என்ற யூகங்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் றெக்கை கட்டி பறக்க ஆரம்பித்துள்ளன.
அதிலும் குறிப்பாக காங்கிரசுக்கு திமுக எத்தனை தொகுதிகள் ஒதுக்கப் படுகிறது என்பது பற்றி அனைவரது எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இதற்கு காரணம் 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது காங்கிரசுக்கு அதிக சீட்டுகளை ஒதுக்கியது திமுக கூட்டணியின் பின்னடைவுக்கு காரணமாக மாரி இருந்ததுதான்.

வீண் செய்த காங்கிரஸ்
ஒரு வேளை காங்கிரஸ் போட்டியிட்ட இடங்களில் கணிசமான பகுதிகளில் திமுக போட்டியிட்டிருந்தால் திமுக ஆட்சியை பிடிக்க வாய்ப்பு இருந்தது என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து. ஏனெனில் அப்போது காங்கிரசுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் 8 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வென்றது.

திமுக திட்டம்
எனவே, இந்தமுறை காங்கிரசுக்கு குறைந்த தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்பது திமுக மூத்த நிர்வாகிகள் பலரும் தலைமைக்கு வலியுறுத்தும் விஷயமாக இருந்து வருகிறதாம். அதே நேரம் அப்போது காங்கிரஸ் மீது இருந்த எதிர்ப்பு அலை இப்போது கிடையாது. லோக்சபா தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது.. எனவே சீட்டுகளை குறைக்கக்கூடாது. இப்போது ராகுல்காந்தி செல்வாக்கு தமிழகத்தில் அதிகரித்துள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு 35க்கும் மேற்பட்ட தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்துவதாக கூறப்படுகிறது.

காங்கிரசுக்கு 25 தொகுதிகள்
எனவேதான், எத்தனை சீட்டுகள் காங்கிரசுக்கு என்பதில் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில்தான் எந்தக் கூட்டணிக்கு எவ்வளவு இடங்கள் என்பது பற்றி தற்போது தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. அதன்படி, காங்கிரஸ் கட்சிக்கு அதிக பட்சம் 25 தொகுதிகளை ஒதுக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள்
இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா 7 தொகுதிகளும், மதிமுகவுக்கு 5, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. திமுக தரப்பில் இருந்து இதுவரை இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை என்ற போதிலும் எப்படியாவது இந்த முறை ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்பு காட்டும் திமுக பெருவாரியான தொகுதிகளில் தாங்கள் போட்டியிடுவது தான் நல்லது என்ற நிலைப்பாட்டில் இருப்பதால் இந்த பட்டியல் ஏறத்தாழ உறுதி செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

கூட்டணி திட்டம்
பாட்டாளி மக்கள் கட்சிக்கு அதிமுக 23 இடங்கள் ஒதுக்கி உள்ளது. எனவே இதை சொல்லி காங்கிரஸ் கட்சிக்கு 25 சீட்களுடன் முடித்துக் கொள்வது திமுகவுக்கு எளிதான விஷயமாக மாறி உள்ளது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். கூட்டணி வெற்றிதான் முக்கியம். சீட்களை வேஸ்ட் செய்துவிடக் கூடாது என்பதுதான் திமுக கூட்டணி எண்ணமாக இருக்கிறது.
-
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்! -
திமுகவை உதறும் துரை வைகோ.. மதிமுக பொதுக்குழு அதிரடி முடிவு? 2 எம்எல்ஏகள் ராஜினாமா? -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
“கூட்டணியில் யாருமே இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லை.. சொந்த பலம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்!












Click it and Unblock the Notifications