எல்லாம் காங்கிரசால வந்தது.. திமுக கூட்டணியில் ஒரே குழப்பம்
Recommended Video

சென்னை: எல்லாம் காங்கிரசால வந்தது.. இப்போ பாருங்க ஆளாளுக்கு வம்பு பண்றாங்க என அங்கலாய்க்கிறார்கள், திமுக வட்டாரத்தில்.
அப்படி என்னதான் நடக்கிறது தொகுதி பங்கீட்டில் என கொஞ்சம் எட்டிப் பார்த்தோம். பெரும் களேபரமே நடந்து கொண்டுள்ளது திமுக கூட்டணி கட்சிகள் இடையே என்று அப்போதுதான் தெரியவந்தது.
இத்தனைக்கும் பிள்ளையார் சுழி போட்டது காங்கிரஸ்தான்.

பஞ்சாயத்து
கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு 10 தொகுதிகளை வாரிக் கொடுத்ததே திமுக.. அப்புறம் என்ன பஞ்சாயத்து வந்துவிடப்போகிறது என்கிறீர்களா, பஞ்சாயத்தே அங்கேதான் ஆரம்பம். "திண்ணையில் படுத்து கிடந்தவருக்கு திடுக்குன்னு வந்துச்சாம் வாழ்வு" என்பதைபோல, துள்ளிக் குதித்து கொண்டாடிக் கொண்டிருக்கிறது காங்கிரஸ்.

எல்லோரும் கேட்குறாங்க
ஆனால், திண்டாட்டம் என்னவோ, திமுகவுக்குதான். காங்கிரசுக்கே அத்தனை சீட் அள்ளிக் கொடுத்தீங்களே, எங்களுக்கும் கொடுங்க என வம்பு செய்கிறது வைகோவின் மதிமுக. பாமகவுக்கு டஃப் கொடுக்கப்போறதே நாங்கதான். எங்களுக்கு மட்டும் கம்மியா என உறுமுகிறது சிறுத்தை. இதனால்தான் தொகுதி பங்கீட்டில் தாமதம் ஏற்பட்டு வருகிறதாம்.

கட்சிகள் கேட்கும் தொகுதிகள்
மதிமுக 3, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட், இ.கம்யூனிஸ்ட் தலா 2 தொகுதிகளையும், கேட்டுவருவதால் ஷாக் ஆகியுள்ளது திமுக தலைமை. ஆளுக்கு ஒரு சீட் மட்டுமே கொடுக்கலாம் என்று கேஷுவலாக இருந்த திமுக தலைமைக்கு இந்த டிமாண்ட் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. எனவேதான், இதுவரை நடைபெற்ற கூட்டணி பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் அறிவிக்கப்படவில்லை.

சிங்கிள் போதாது
2016 சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் காங்கிரஸ் வென்றது, வெறும் 8 தொகுதிகளில்தான். இப்படியிருக்கும்போது, காங்கிரசுக்கே 10 லோக்சபா தொகுதிகளை ஒதுக்கிவிட்டு, எங்களுக்கு சிங்கிள் சீட்டுகளை கொடுத்தால் மரியாதையாக இருக்காது என கோரசாக கூறுகிறார்களாம், திமுக கூட்டணி கட்சிகள். "இதற்குத்தான் சொன்னோம், காங்கிரசுக்கு ஏன் இத்தனை சீட்டுன்னு....? மத்தியில் ஆளும் கட்சியாக இருந்தாலும், நாட்டிலேயே அதிக மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் கட்சியாக இருந்தாலும், பாஜகவிற்கு, அதிமுக கூட்டணியிலல் வெறும் 5 சீட்தான் கொடுத்துள்ளார்கள். ஆனால், பலவீனமாக உள்ள காங்கிரசுக்கு 10 தொகுதி கொடுத்தது தப்புங்க" என சீனியர் திமுக தலைவர்கள் தலைமையிடம் புலம்புகிறார்களாம்.

துரைமுருகன் முயற்சி
மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரு சில இடங்களில் மட்டுமே செல்வாக்கு கொண்டவை. ஆனால் காங்கிரஸ் அப்படியில்லை. தமிழகம் முழுக்க பரவலாக ஓட்டு வங்கி வைத்துள்ளது. அவர்களை உங்களோடு ஒப்பிடாதீர்கள் என சிரித்தபடியே கலாய்த்து வருகிறாராம் திமுக பேச்சுவார்த்தை குழுவில் உள்ள துரைமுருகன். ஆனால், காங்கிரசையே கை காட்டியபடி மற்ற கட்சிகள் விடாப்பிடியாக நிற்பதால் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இன்னும் நிறைவடையவில்லை.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது?












Click it and Unblock the Notifications