டெல்லிக்கு போகும் விஜயகாந்த் மச்சான்.. தேமுதிகவின் முதல் எம்.பி.. யார் இந்த எல்.கே. சுதீஷ்?
சென்னை: திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் அக்கட்சி சார்பில் எல்.கே.சுதீஷ் ராஜ்யசபா எம்.பி ஆக உள்ளா. இன்று மாநிலங்களவை வேட்பாளராக எல்.கே.சுதீஷை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது தேமுதிக. தேமுதிக கட்சி தொடங்கப்பட்டு 21 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் முறையாக அக்கட்சியைச் சேர்ந்த ஒருவர் நாடாளுமன்றத்துக்குச் செல்கிறார்.
தேமுதிக சார்பில் மாநிலங்களவை வேட்பாளராக அக்கட்சியின் பொருளாளர் எல்.கே. சுதீஷ் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளார். இன்றே அவர் மாநிலங்களவை எம்.பி பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

யார் இந்த எல்.கே.சுதீஷ்?
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தின் தம்பி எல்.கே.சுதீஷ். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள செம்பேடு கிராமம்தான் சுதீஷின் சொந்த ஊர். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்தவர் சுதீஷ். இவரது அப்பா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அலுவலராகப் பணியாற்றியவர்.
விஜயகாந்த் நடித்த பல திரைப்படங்களைத் தயாரித்துள்ளார் சுதீஷ். நடிப்பு ஆர்வம் கொண்டிருந்தார். விஜயகாந்த் ஏற்காததால் நடிப்புத் துறையில் கால்வைக்கவில்லை. பின்னர் விஜயகாந்த் அரசியலில் அடியெடுத்து வைத்தபோது தொடங்கி அவருக்குப் பக்கபலமாகச் செயல்பட்டு வந்தார்.
2005-ல் தென்சென்னை மாவட்டத்தின் தலைமைப் பொதுக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார் எல்.கே.சுதீஷ். 2006 சட்டசபை தேர்தலில் குடியாத்தம் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்டார். அந்தத் தேர்தலுக்குப் பின் சுதீஷை இளைஞர் அணி செயலாளராக நியமித்தார் விஜயகாந்த். 2009 லோக்சபா தேர்தலில் கள்ளக்குறிச்சியிலும், 2014 லோக்சபா தேர்தலில் சேலத்திலும் போட்டியிட்டார்.
தேமுதிகவின் முதல் ராஜ்யசபா எம்.பி
கடந்த 2017-ல் தேமுதிகவின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 2019 ஆம் ஆண்டில் மீண்டும் பாஜக கூட்டணியில் தேமுதிக சார்பில் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டார். அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு தேமுதிகவின் பொருளாளராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், ராஜ்யசபா உறுப்பினராக டெல்லி செல்ல இருக்கிறார் சுதீஷ். கடந்த 2006 முதல் பல்வேறு தேர்தல்களிலும் போட்டியிட்டுள்ள சுதீஷ், 2009, 2014, 2019 என 3 மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியைச் சந்தித்தார். இந்நிலையில், தேமுதிக சார்பில் முதல் ராஜ்யசபா உறுப்பினராக டெல்லிக்குச் செல்ல இருக்கிறார் சுதீஷ்.

21 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக
தேமுதிகவை கடந்த 2005 ஆம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கினார் கேப்டன் விஜயகாந்த். கட்சி தொடங்கி 21 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இதுவரை தேமுதிக சார்பில் ஒருவர் கூட நாடாளுமன்ற உறுப்பினர் ஆனதில்லை. கட்சி தொடங்கிய 6 ஆண்டுகளிலேயே தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பிடித்தாலும், இதுவரை நாடாளுமன்றத்திற்குள் நுழைய முடியவில்லை.
கடந்த 2011 சட்டசபை தேர்தலில் தேமுதிக 29 இடங்களில் வென்றிருந்தது. அதன்பிறகு 2013 ஆம் ஆண்டு ராஜ்யசபா தேர்தல் நடைபெற்றது. அப்போது தேமுதிகவுக்கு வேறு கட்சிகளைச் சேர்ந்த 5 எம்.எல்.ஏக்கள் ஆதரித்தால் ஒரு மாநிலங்களவை இடத்தைப் பெறுவதற்கான வாய்ப்பு இருந்தது. ஆனால், அப்போது தேமுதிகவின் 7 எம்.எல்.ஏக்கள் அதிமுகவை ஆதரித்தனர்.
இதனால் தேமுதிக சார்பில் மாநிலங்களவை வேட்பாளராக நிறுத்தப்பட்ட அன்றைய தேமுதிக பொருளாளர் ஏ.ஆர். இளங்கோவன் தோல்வி அடைந்தார். அதன் பிறகு தேமுதிக சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெறவில்லை. ராஜ்யசபா வாய்ப்பும் கிடைக்கவில்லை. இந்நிலையில் தான் கட்சி தொடங்கி 21 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக மாநிலங்களவைக்கு தேமுதிக சார்பாக செல்ல இருக்கிறார் விஜயகாந்த்தின் மைத்துனர் எல்.கே. சுதீஷ்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications