234/234 DMK seat sharing: தொகுதி பங்கீடு ஓவர்! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள்! லிஸ்ட்!
சென்னை: திமுக கூட்டணியில் அனைத்து கட்சிகளுக்கும் தொகுதி பங்கீடு உடன்பாடு எட்டப்பட்டுவிட்டது. 234 தொகுதிகளில் எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்பதை காணலாம்.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் இரண்டாவது முறையாக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள திமுக போராடுகிறது. எப்படியாவது ஆட்சிக்கு வர வேண்டும் என அதிமுக துடிக்கிறது.

50 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிடக் கட்சிகள்தான் ஆட்சியை நடத்த வேண்டுமா என கேட்டு நாம் தமிழரும், தவெகவும் ஆட்சிக்கு வர முனைப்பு காட்டுகிறது.
இந்த நிலையில் திமுக கூட்டணியில் 1. திமுக
2. காங்கிரஸ்
3. மதிமுக
4. இந்திய கம்யூனிஸ்ட்
5. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
6. விடுதலை சிறுத்தைகள்
7. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
8. தேமுதிக
9. மனிதநேய மக்கள் கட்சி
10. மக்கள் நீதி மய்யம்
11. மக்கள் விடுதலை கட்சி
12. ஆதித்தமிழர் பேரவை
13. அகில இந்திய பார்வர்டு பிளாக்
14. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி
15. எஸ்டிபிஐ
16. மனிதநேய ஜனநாயகக் கட்சி
17. முக்குலத்தோர் புலிப்படை
18. திராவிட வெற்றிக் கழகம்
19. புதிய திராவிட கழகம்
20. ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சி
21. கொங்கு இளைஞர் பேரவை
ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறார்கள். இந்த நிலையில் திமுக கூட்டணியில் அனைத்து கட்சிகளுக்கும் தொகுதி பங்கீடு முடிந்துவிட்டது.
இந்த நிலையில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு என்பதை பார்க்கலாம்.
திமுக- 164
காங்கிரஸ்- 28
தேமுதிக- 10
விசிக- 8
இந்திய கம்யூனிஸ்ட் - 5
மார்க்சிஸ்ட் - 5
மதிமுக- 4
இந்திய யூனியன் முஸ்லீம் லீக்- 2
மனிதநேய மக்கள் கட்சி- 2
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி- 2
மனிதநேய ஜனநாயக கட்சி- 1
எஸ்டிபிஐ- 1
முக்குலத்தோர் புலிப்படை- 1
தமிழர் தேசம் கட்சி- 1
ஆக மொத்தம் 234 தொகுதிகளிலும் பங்கீடு நடந்து முடிந்துவிட்டது. இவர்களில் மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியில்லை என கூறிவிட்டது.
மேலும் திமுக கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகள் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். அது போல் மதிமுகவும் 4 தொகுதிகளில் 3 தொகுதிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன.
164+3+ 11= 178 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு நடந்து முடிந்தாலும் இன்னும் எந்தெந்த தொகுதிகள் எந்தெந்த கட்சிக்கு ஒதுக்கீடு, அதற்கான வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்டவை நடக்கவில்லை. இன்னும் ஓரிரு நாட்களில் நடைபெறும் என தெரிகிறது.
திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கப்பட்டது குறித்து கூட்டணியில் சிலருக்கு அதிருப்தி நிலவுவதாக சொல்லப்படுகிறது. ஆனால் திமுகவோ, தேமுதிகவுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்ததில் யாருக்கும் எந்த அதிருப்தியும் இல்லை, நாங்கள் ஒற்றுமையாகவே பயணிக்கிறோம் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications