விசிகவுக்கு திருப்போரூர், பெரியகுளம் உள்பட 8 தொகுதிகள்! உத்தேச பட்டியல் வெளியீடு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டசபை தேர்தலில், திமுக கூட்டணியில் போட்டியிடும் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் அவற்றின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.

திமுக கூட்டணியில் விசிகவுக்கு 6 தனி தொகுதியும் 2 பொதுத் தொகுதியும் ஒதுக்கப்பட்டன. அந்த வகையில் இன்றைய தினம் எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து ஆலோசனை நடத்த அறிவாலயத்திற்கு விசிக தலைவர் திருமாவளவன் சென்றிருந்தார்.

DMK Alliance Seat

அங்கு பேச்சுவார்த்தை குழுவுடன் ஆலோசனை நடத்தியிருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது: திமுக பேச்சுவார்த்தையில் விசிகவின் 8 தொகுதிகள் அடையாளம் கண்டு உள்ளோம்.

திமுக- விசிக இடையே தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது. எந்தெந்த தொகுதிகள் என முறைப்படி முதல்வர் அறிவிப்பார்.

எங்களுக்கு திருப்திகரமாக பேச்சுவார்த்தை இருந்தது. விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன. அனைத்து கட்சிகளுக்கும் தொகுதி ஒதுக்கிய பிறகு முதல்வர் நாளை அறிவிப்பார்.

திமுக கூட்டணியில் ஏதாவது பிரச்சினை ஏற்படுமா என காத்திருப்பவர்கள் ஏமாந்துதான் போவார்கள். எங்கள் கூட்டணியில் அதிக கட்சிகள் உள்ளதால் தனித்தனியாக ஒவ்வொரு கட்சியையும் அழைத்துப் பேசும்போது ஒரு கட்சி கேட்கும் தொகுதியை மற்றொரு கட்சியும் கேட்கக் கூடிய சூழல் இருப்பதால் தாமதம் இருக்கத்தான் செய்யும்.

எங்களுக்குள் எந்த இழுபறியும் இல்லை. இன்று இரவு அல்லது நாளை காலை அனைத்து தொகுதிகளும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பின்னர் முதல்வர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்.

புதுவையில் பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளோம். ஆனால் இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே பானைச் சின்னத்தையும் ஒதுக்கவில்லை. சுயேச்சை சின்னத்திலேயே புதுவையில் போட்டியிடவுள்ளோம்.

அதிமுக கூட்டணியில் உள்ள சின்ன சின்ன கட்சிகளுக்கு நெருக்கடிகள் தருகிறார்கள். அங்கே தாமரையிலும் இரட்டை இலையிலும் நிற்க வேண்டும் என நெருக்கடி தருகிறார்கள். தமிழ் மாநில காங்கிரஸுக்கு 5 இடங்களை கொடுத்துவிட்டு தாமரை சின்னத்தில் நிற்க வேண்டும் என அழுத்தம் கொடுக்கிறார்கள்.

அது போன்ற பிரச்சினைகள் எல்லாம் எங்கள் கூட்டணியில் இல்லை. ஆனால் திமுக கூட்டணியில் இழுபறி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அப்படி இல்லை.

பெரம்பூரில் தமிழக வெற்றிக் கழக தேர்தல் பிரச்சாரத்திற்கு காவல் துறை அனுமதி மறுத்தது குறித்தான கேள்விக்கு, விஜய்க்கு அனுமதி வழங்குவது இப்போது தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது.

அதற்கும் திமுகவிற்கும் எந்த சம்பந்தம் இல்லை என தெரிவித்தார். இந்த நிலையில் விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் குறித்த உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.

திருப்போரூர்
ஆர்.கே.நகர்
காட்டுமன்னார்கோவில் (தனி)
செய்யூர் (தனி)
கள்ளக்குறிச்சி (தனி)
பெரியகுளம் (தனி)
அரக்கோணம் (தனி)
திண்டிவனம் (தனி)

ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்படும் என சொல்லப்படுகிறது. திருப்போரூர் சட்டசபை தொகுதியில் இதுவரை திமுகவும் அதிமுகவும் தலா 4 முறை வென்றுள்ளது. கடந்த தேர்தலில் விசிகவை சேர்ந்த எஸ்.எஸ்.பாலாஜி வெற்றி பெற்றார். இதனால் இந்த முறையும் இதே தொகுதியை விசிக கேட்டுள்ளதாக தெரிகிறது.

ஆர்.கே.நகரை பொருத்தமட்டில் வடசென்னையில் ஒரு தொகுதியாகும். இங்கு அதிமுக 3 முறையும், திமுக, காங்கிரஸ் தலா இரு முறையும் வென்றுள்ளனர். கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் வென்றிருக்கிறார். அதன் பின்னர் கடந்த தேர்தலில் திமுக வேட்பாளர் ஜான் எபினேசர் வென்றுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+