66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ?
சென்னை: திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 தொகுதிகளை ஒதுக்கீடு செய்த நிலையில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்பதை பார்க்கலாம்.
தமிழகத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக, சசிகலா- ராமதாஸ் கூட்டணி என போட்டி நிலவுகிறது.

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பெரும்பாலான கட்சிகளுக்கு தொகுதிகளின் எண்ணிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளன.
அந்த வகையில் இன்று காலை விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அது போல் தேமுதிகவுக்கு இன்று மாலையோ அல்லது நாளையோ எண்ணிக்கை இறுதி செய்யப்படும் என்றார்கள். அந்த வகையில் தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு சீட்டை திமுக ஒதுக்கியுள்ளது என்பதை பார்க்கலாம்.
காங்கிரஸ் - 28 தொகுதிகள்
மதிமுக - 4 தொகுதிகள்
மமக- 2 தொகுதிகள்
ஐயூஎம்எல்- 2 தொகுதிகள்
கொமதேக- 2 தொகுதிகள்
கம்யூனிஸ்ட்- 5 தொகுதிகள்
மார்க்சிஸ்ட்- 5 தொகுதிகள்
விசிக- 8 தொகுதிகள்
தேமுதிக- 10 தொகுதிகள்
ஆக மொத்தம் 234 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு இதுவரை 66 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மீதம் 168 தொகுதிகள் உள்ளன. இதில் மக்கள் நீதி மய்யம், தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை என கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
எனவே மஜக, முக்குலத்தோர் புலிப்படை ஆகிய கட்சிகளுக்கான தொகுதி உடன்பாடும் நாளை கையெழுத்தாகும் என சொல்லப்படுகிறது. அந்த வகையில் மஜக, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா ஒரு சீட்டும் ஒதுக்கப்படும். மீதமுள்ள 166 தொகுதிகளில் திமுக போட்டியிடும். இல்லாவிட்டால் சிறிய கட்சிகளுக்கு மேலும் 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டால் 163 தொகுதிகளில் திமுக போட்டியிடும் என தெரிகிறது.
10 ஆண்டுகளாக ஒரு கவுன்சிலர் கூட இல்லாத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளையும் ஒரு ராஜ்யசபா தொகுதியையும் திமுக ஒதுக்கியுள்ளது மற்ற கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விசிகவுக்கு சிட்டிங் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் இருக்கிறார்கள். அக்கட்சி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்கு இரட்டை இலக்க தொகுதிகள் கொடுக்காதது விசிக நிர்வாகிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன என சொல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications