48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக ஆகிய 4 முனை போட்டி நிலவுகிறது.

DMK Alliance Seat Sharing

இதில் நாம் தமிழர் சீமான் மட்டும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டார். நாளை முதல் திருத்தணியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார். தவெகவில் கூட விருப்பமனுக்களை பெற்றவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டு வருகிறது.

அது போல் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் தொடங்கி சில கட்சிகளுடன் உடன்படிக்கையும் நடந்துவிட்டது.

திமுக கூட்டணியில் முதலில் எந்தெந்த கட்சிகள் இணைந்துள்ளன என்பதை பார்க்கலாம்.

1. திமுக
2. காங்கிரஸ்
3. மதிமுக
4. இந்திய கம்யூனிஸ்ட்
5. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
6. விடுதலை சிறுத்தைகள்
7. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
8. தேமுதிக
9. மனிதநேய மக்கள் கட்சி
10. மக்கள் நீதி மய்யம்
11. மக்கள் விடுதலை கட்சி
12. ஆதித்தமிழர் பேரவை
13. அகில இந்திய பார்வர்டு பிளாக்
14. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி
15. எஸ்டிபிஐ
16. மனிதநேய ஜனநாயகக் கட்சி
17. முக்குலத்தோர் புலிப்படை
18. கொங்கு இளைஞர் பேரவை
19. திராவிட வெற்றிக் கழகம்
20. புதிய திராவிட கழகம்
21. ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சி

ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. அது போல் புரட்சி அதிமுக என்ற கட்சியை தொடங்கியுள்ள பெங்களூர் புகழேந்தி, திமுகவுக்கு ஆதரவான பிரச்சாரங்களை செய்வேன் என அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழு திமுக சார்பில் ஏற்படுத்தப்பட்டது. அந்த குழு முதலில் காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது.

அதன்பிறகு இடதுசாரிகள், மதிமுக, உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு சீட்டை திமுக ஒதுக்கியுள்ளது என்பதை பார்க்கலாம்.

காங்கிரஸ் - 28 தொகுதிகள்
மதிமுக - 4 தொகுதிகள்
மமக- 2 தொகுதிகள்
ஐயூஎம்எல்- 2 தொகுதிகள்
கொமதேக- 2 தொகுதிகள்
கம்யூனிஸ்ட்- 5 தொகுதிகள்
மார்க்சிஸ்ட்- 5 தொகுதிகள்

ஆக மொத்தம் 234 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு இதுவரை 48 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

விசிகவுடன் இரு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இதில் விசிக இரட்டை இலக்கத்தில் எண்ணிக்கை எதிர்பார்த்த நிலையில் திமுகவோ அதிக கட்சிகள் இணைந்துள்ளதால் குறைந்த தொகுதிகளை ஏற்குமாறு திருமாவளவனிடம் கோரிக்கை வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

எனினும் இன்று நடந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை பெறுவோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+