திமுக கூட்டணியில்.. ஐயுஎம்எல்-க்கு இந்த முறை சீட் குறைவு! காரணம் இதுதான்!
சென்னை: திமுக, தனது கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து வருகிறது. தற்போது இஸ்லாமிய கட்சிகளுடன் பங்கீட்டை இறுதி செய்து வருகிறது. ஆனால், கடந்த முறையுடன் ஒப்பிடும்போது இந்த முறை, ஐயுஎம்எல் கட்சிக்கு 1 தொகுதி குறைவாக திமுக ஒதுக்கியிருக்கிறது.
கடந்த முறை திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சியும், ஐயுஎம்எல் கட்சியும் இடம்பெற்றிருந்தன. இந்த முறையும் கூட்டணியில் இந்த இரண்டு இஸ்லாமிய கட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. இது தவிர, தமிமுன் அன்சாரி தலைமையிலான மனிதநேய ஜனநாயக கட்சி இணைந்துள்ளது. இத்துடன் எஸ்டிபிஐ கட்சியும் இணையலாம் என பேசப்படுகிறது. எனவே மொத்தமாக திமுக கூட்டணியில் 4 இஸ்லாமிய கட்சிகள் இடம் பெறுகின்றன.

தற்போது ஐயுஎம்எல் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியுடன் சீட் பங்கீடு முடிக்கப்பட்டிருக்கிறது. இதில், ஐயுஎம்எல் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. கடந்த முறை 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது.
- வாணியம்பாடி
- கடையநல்லூர்
- சிதம்பரம்
ஆகிய தொகுதிகளில் ஐயுஎம்எல் போட்டியிட்டது. இதில் வாணியம்பாடியில் 5,000 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவிடம் தோல்வியை தழுவியது. கடையநல்லூரில் 20,000க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்திலும், சிதம்பரத்தில் 15,000 வாக்குகள் வித்தியாசத்திலும் அதிமுகவிடம் தோல்வியை தழுவியது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், 3 தொகுதிகளிலும் இக்கட்சி தனது சின்னமான ஏணி சின்னத்தில் போட்டியிட்டிருந்தது.
மறுபுறம் மனிதநேய மக்கள் கட்சி, திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தது. மணப்பாறை மற்றும் பாபநாசம் தொகுதிகள் இந்த கட்சிக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. இரண்டு தொகுதிகளிலும் கட்சி அபாரமான வெற்றியை பதிவு செய்திருந்தது.
இந்த தேர்தலுக்கு தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடங்கியபோது ஐயுஎம்எல், 5 தொகுதிகளை கேட்டிருந்தது. ஆனால், கடந்த முறை தோல்வியடைந்ததாலும், கூட்டணியில் கூடுதலாக இஸ்லாமிய கட்சிகள் இணைந்ததாலும் 2 தொகுதிகள் மட்டுமே வெற்றிப்பெற்றது. அதேபோல கடந்த முறை 2 தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற மனிதநேய மக்கள் கட்சிக்கு இந்த முறையும் 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.
2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகள்
- திராவிட முன்னேற்றக் கழகம் (DMK) - 173 உதயசூரியன்
- இந்திய தேசிய காங்கிரஸ் (INC) - 25 கை
- மறுமலர்ச்சி திமுக (MDMK) - 6 உதயசூரியன்
- விடுதலை சிறுத்தைகள் கட்சி (VCK) - 6 பானை
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) - 6 கதிர் அரிவாள்
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPIM) - 6 அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்
- இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் (IUML - 3 ஏணி
- கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (KMDK) - 3 உதயசூரியன்
- மனிதநேய மக்கள் கட்சி (MMK) - 2 உதயசூரியன்
- தமிழக வாழ்வுரிமைக் கட்சி (TVK) - 1 உதயசூரியன்
- ஆதித்தமிழர் பேரவை - 1 உதயசூரியன்
- மக்கள் விடுதலைக் கட்சி - 1 உதயசூரியன்
- ஃபார்வர்டு பிளாக் - 1 உதயசூரியன்
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்!












Click it and Unblock the Notifications