Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காங்.-ஐ ’கை’ கழுவ தயாரான திமுக! பிரேமலதாவுடன் பேசிய முக்கிய தலை! 7+2 என முடிந்த டீல்! பரபர பாலிடிக்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு, திமுக கூட்டணியில் தேமுதிகவும் இணைய வாய்ப்புள்ளது என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாக எந்தக் கூட்டணியில் சேருவது என்று சஸ்பென்ஸ் வைத்திருந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், இறுதியாக திமுகவுடன் கை கோர்க்க தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என அதிமுகவிலிருந்து விலகியது. பின்னர் பாஜக மற்றும் தவெகவுடனும் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அதிமுக-பாஜக கூட்டணியில் வெற்றி வாய்ப்பு குறைவு என பிரேமலதா கருதியதாக கூறப்படுகிறது.

DMK DMDK congress

மேலும், தற்போது விஜயகாந்தின் மறைவால் ஏற்பட்டுள்ள அனுதாப அலை தேர்தலில் ஓட்டாக மாறும் என்பதால், வெற்றி அதிக வாய்ப்பு உள்ள கூட்டணியில் தான் சேர விரும்புகிறார். இதேபோல், தவெகவுடனும் ஆரம்பத்தில் பேச்சுகள் நடந்தன. தவெக காங்கிரஸுடன் இணைந்தால் தாமும் அந்த கூட்டணியில் சேரலாம் என்ற எண்ணம் இருந்தது.

திமுக கூட்டணி

ஆனால் காங்கிரஸ் - தவெக கூட்டணி நடைபெறாததால், அந்த முயற்சியிலிருந்து பிரேமலதா பின்வாங்கியுள்ளார். இந்த நிலையில், திமுக தரப்பில் அமைச்சர் எ.வ.வேலு தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்தை சந்தித்து பேசி வருகிறார். தேமுதிகவுக்கு 7 தொகுதிகள் மற்றும் பிரேமலதா-விஜய பிரபாகரன் போட்டியிட தனியே 2 தொகுதிகள் வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தேர்தல் செலவுக்கான ஒரு பகுதியை திமுக ஏற்கும் வாய்ப்பும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

தேமுதிக திமுக பேச்சு

இதற்கிடையே காங்கிரஸ், திமுகவிடமிருந்து 35க்கும் மேற்பட்ட தொகுதிகள் கோரி வருகிறது. ஆனால் திமுக, அதிகபட்சம் 28 தொகுதிகள் மட்டும் வழங்க தயார் என கூறப்படுகிறது. அமைச்சரவையில் இடம் வழங்கும் விவகாரத்திலும் திமுக கட்டுப்படுத்தப்பட்ட நிலைப்பாட்டில் உள்ளது. தேமுதிக திமுக கூட்டணியில் சேர்ந்தால், காங்கிரஸுக்கு கிடைக்கும் தொகுதி எண்ணிக்கை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது. ஒருபடி மேலாக, 10 தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்கப்படலாம் என திமுக தலைமையகம் பரிசீலித்து வருவது காங்கிரஸ் தரப்புக்கு சவாலாக மாறியுள்ளது.

காங்கிரஸ் தொகுதி பங்கீடு

அகிலஇந்திய அளவில் ஏற்கனவே பின்னடைவை சந்தித்து வரும் காங்கிரஸுக்கு, தமிழ்நாட்டில் திமுக கூட்டணியை விட்டு வெளியேறுவதற்கான சூழல் இல்லை என கூறப்படுகிறது. எனவே, இறுதியில் திமுக நிர்ணயிக்கும் தொகுதி எண்ணிக்கையில் காங்கிரஸ் சம்மதிக்க வேண்டிய நிலை உருவாகலாம் என்று அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன. மொத்தத்தில், தேமுதிக திமுக கூட்டணியில் இணையுவது உறுதியாகும் நிலையில்தான் அரசியல் நகர்கிறது. அடுத்த சில நாட்களில் திமுக-காங்கிரஸ் தொகுதி பங்கீடு உட்பட அனைத்து முக்கிய முடிவுகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேமுதிக கூட்டணி

ஒருவேளை காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகாமல் தேமுதிக கூட்டணிக்கு வரவும் வாய்ப்பு இருக்கிறது. அப்படி வந்தால் திமுக தலைமைக்கு சற்று நெருக்கடி ஏற்படலாம் என சொல்லப்படுகிறது. காரணம் கடந்த தேர்தலின் போது காங்கிரசுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு பிற கட்சிகளுக்கு இரண்டு முதல் பத்து சீட்டுகள் வரை ஒதுக்கப்பட்டது. தற்போது தேமுதிக வந்தால் அந்த கட்சிகளின் சீட்டுகள் குறைக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு தேர்தலை விட இந்த தேர்தலில் கூடுதல் தொகுதிகள் கேட்போம் என திமுக கூட்டணி கட்சிகள் கூறிவரும் நிலையில் தேமுதிக வந்தால் அவற்றின் சட்டமன்ற தொகுதிகள் எண்ணிக்கை குறையும் வாய்ப்புள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+