திமுகவுக்கு எத்தனை சீட்? மீண்டும் ஸ்டாலின்? விஜய்க்கு இத்தனை % வாக்குகளா? சொல்றது யாருனு பாருங்க
சென்னை: திமுக கூட்டணி 180-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்லும், மீண்டும் ஸ்டாலின் முதல்வராவது உறுதி என்றும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார். மேலும் விஜய்க்கு எவ்வளவு வாக்குகள் கிடைக்கும் என்பதையும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் செய்தி சேனல் ஒன்றுக்கு கூறியிருப்பதாவது: தமிழக சட்டசபை தேர்தலில் விஜய் 20 சதவீதம் வாக்குகளை வாங்கிவிட்டார் என வைத்துக் கொள்வோம், மொத்தம் 4.75 கோடி வாக்குகள், 5 கோடி என வைத்துக் கொள்வோம். விஜய் 20 சதவீதம் என்றால் அவர் 1 கோடி ஓட்டு வாங்க வேண்டும். அவர் வாங்குவாரா என்பதெல்லாம் எனக்கு சந்தேகம். அவர் வாங்கிவிட்டார் என வைத்துக் கொள்ளலாம்.

நாம் தமிழர் கட்சி ஒரு 50 லட்சம் வாக்குகளை வாங்கினால் மீதம் 3.5 கோடி வாக்குகள் இருக்கின்றன. இதில் யார் ஒன்னே கால் கோடி வாக்குகளை வாங்குகிறார்களோ, அவர்கள் விஜய்யுடன் கூட்டணிக்கு போவார்கள். யார் 1.45 கோடி வாங்குகிறார்களோ அவர்கள் ஒன்னே கால் கோடியுடன் போய்விடுவார்கள்.
அப்படி பார்த்தால் 1.40 கோடி வாக்குகளை வாங்குவோர் எல்லா தொகுதிகளிலும் ஜெயிப்பார். சதவீத கணக்கு என்பது தேர்தலுக்கு பிறகு தோற்றவர்கள் சொல்வதுதான்.
திமுகவின் வெற்றி உறுதி
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்றும், மு.க. ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராகப் பதவியேற்பது உறுதி.
திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. திமுக கூட்டணி சுமார் 180-க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்ற வாய்ப்புள்ளது. நடிகர் விஜய்யின் அரசியல் வருகை இளைஞர்களை அரசியல் நீரோட்டத்திற்குள் கொண்டு வந்துள்ளது வரவேற்கத்தக்கது.
விஜய் 20% வாக்குகளைப் பெற்றாலும், அது தேர்தல் முடிவுகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது. தோல்வியுற்றவர்கள்தான் சதவீத கணக்கு பேசுவார்கள், வெற்றி பெற்றவர்கள் இடங்களின் கணக்கையே பேசுவார்கள் என முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறியதை அவர் சுட்டிக் காட்டினார்.
விஜய்யின் வெற்றி என்பது அவர் ஒரு அரசியல்வாதியாக எந்த அளவுக்கு உழைப்பைக் கொடுக்கப் போகிறார் என்பதில் உள்ளது. தற்போது எடப்பாடி பழனிசாமி மற்றும் ஸ்டாலின் ஆகியோருடன் ஒப்பிடும்போது விஜய்யின் களப்பணி மிகவும் குறைவு என்று அவர் விமர்சித்தார்.
திமுகவுக்கு அடுத்தபடியாக அதிமுக ஒரு வலுவான நிலையில் உள்ளது. திமுக 150 தொகுதிகளில் நின்றால், அதிமுக சுமார் 80 தொகுதிகள் வரை வெல்ல வாய்ப்புள்ளது. வாக்குகளை இடங்களாக மாற்றும் திறன் இப்போதும் இரு திராவிடக் கட்சிகளிடமே உள்ளது. மற்ற கட்சிகளிடம் பூத் அளவில் ஆட்கள் பற்றாக்குறை இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
விஜய்யின் வருகையால் அரசியலுக்கு வந்த இளைஞர்களுக்கு தமிழகத்தின் வரலாறு, தமிழ் மண் மற்றும் சமூக நீதி குறித்து முறையாகக் கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியம் உள்ளது.
இளைஞர்கள் அரசியலில் ஈடுபடுவது நல்லது என்றாலும், அவர்களின் பார்வை வரும் ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் போது சரியான முடிவுகளை எடுப்பார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தத் தேர்தல் முடிவுகள் விஜய்யின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்றும், சட்டசபைக்குள் அவர் ஒரு உறுப்பினராக நுழைந்து செயல்படுவதே அவரது அரசியல் முதிர்ச்சிக்குச் சான்றாக இருக்கும் என்றும் தராசு ஷயாம் குறிப்பிட்டார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications