வர்ற தேர்தலில் 200 தொகுதிக்கு மேல் திமுகவுக்கு கன்ஃபார்ம்.. அடித்து சொன்ன வடிவேலு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்றும், ஸ்டாலின் தலைமையில் மகளிர் திட்டங்கள் சிறப்பாக நடக்கின்றன என்றும் நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் நடந்த பெண்களுக்கான கபடி விழாவில் பங்கேற்ற நடிகர் வடிவேலு இவ்வாறு கூறினார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சைதாப்பேட்டையில் உள்ள சென்னை மாதிரிப்பள்ளி மைதானத்தில், 'சைதை முதல்வர் கோப்பை' என்னும் பெயரில் மாநில அளவிலான பெண்களுக்கான கபடி போட்டிகள் நடைபெற்றது.

Vadivelu

நடிகர் வடிவேலு பேச்சு

அமைச்சர் மா சுப்பிரமணியன் தலைமையில் கடந்த 5 ஆம் தேதி முதல் போட்டிகள் நடந்து வந்தன. நேற்று இறுதிப் போட்டி நடந்தது. இதையடுத்து விளையாட்டில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள், வெற்றிக் கோப்பைகளை நடிகர் வடிவேலு, நடிகை தேவயானி வழங்கினர். அப்போது நடிகர் வடிவேலு பேசியதாவது:-

இந்த போட்டியை பார்க்கும் போது மதுரை சித்திரை திருவிழா பார்த்தது போல் இருக்கிறது. பெண்கள் எல்லாரும் ஜல்லிக்கட்டு போட்டியில் துள்ளி குதிக்கும் காளைகளை போல சீறிப்பாய்கின்றனர். இந்த பெண்களை போட்டிகளுக்கு அனுப்பிய அவர்களது தாய்மார்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

திமுக 200-க்கும் மேல் வெற்றி பெறும்

இந்த போட்டிக்கான தலைப்பும் சூப்பராக இருக்கிறது. முதல்வர் கோப்பை.. முதல்வருக்கான கோப்பை மட்டும் அல்ல.. 2026 தேர்தலில் திமுக வெற்றி பெறுவதற்குமான கோப்பையும் கூட.. வரும் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு எல்லா பெண்களுக்கும், எல்லா மக்களுக்கும் நல்ல வாழ்வு அமைய உள்ளது.

200 தொகுதிகளுக்கு மேல் திமுக வெற்றி பெறும். 200 நிச்சயம்.. 200-க்கு மேல் வெற்றி பெறுவது லட்சியம். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, பெண்களுக்கு சொத்தில் சம பங்கு கொண்டு வந்தார். மகளிருக்கான சிறப்பான திட்டங்கள் திமுக ஆட்சியில் தான் தொடங்கப்பட்டன. திமுக அரசு எந்த காலத்திலும் தோற்காது.. வெற்றி மேல் வெற்றி பெறும். என்று கூறினார்.

அதிமுக - தேமுதிக கூட்டணி

முன்னதாக அவர் கபடி வீராங்கனைகளை ஊக்கப்படுத்தும் வகையில், எம்ஜிஆர் நடித்த அரசக்கட்டளை திரைப்படத்தின் பாடலை பாடி ரசிக்க வைத்தார். நடிகர் வடிவேலு திமுகவிற்கு ஆதரவாக பேசுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே கடந்த ஜெயலலிதா இருக்கும் போதே, 2011 சட்டசபை தேர்தல் நேரத்தில் அதிமுக - தேமுதிக கூட்டணியை விமர்சித்து பிரசாரம் செய்திருந்தார்.

விஜயகாந்தை விமர்சித்து பேசிய வடிவேலு தற்போது விஜய்யை மறைமுகமாக எதிர்க்கும் வகையில் தற்போது திமுகவுக்கு ஆதரவாக பேசியிருப்பது அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ளது.

நடிகை தேவயாணி பேச்சு

முன்னதாக இந்த விழாவில் கலந்துகொண்ட நடிகை தேவயாணி பேசுகையில், "மாணவர்களுக்கான நிகழ்ச்சிகளில் நான் எப்போதும் பங்கு பெறுவேன். பெண்களுக்கான போட்டிகளில் பெண்களை ஊக்கப்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இருக்கிறேன். பெண்களை விளையாட்டுப் போட்டிகளில் ஊக்குவிக்கும் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றி.

எல்லா பெண்களுமே சிங்க பெண்கள் தான். பெண்களை ஊக்குவிக்கச் செய்யும் வகையில் இதுபோன்ற பல்வேறு போட்டியினை அமைச்சர் மா சுப்பிரமணியன் நடத்த கோரிக்கை வைக்கிறேன். போட்டிகளில் பெண்கள் கலந்து கொள்வதும் முக்கியம்.. வெற்றிக்காக அல்ல.." என்று பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+