181–189 தொகுதிகளில் வெற்றி.. மீண்டும் வெல்லும் திமுக கூட்டணி.. அதிமுக – தவெகவிற்கு ஷாக் தந்த சர்வே
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலையொட்டி பல்வேறு கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் தான் Lok Poll சார்பில் புதிய கருத்து கணிப்பின் முடிவு தற்போது வெளியாகி உள்ளது. இதில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றும், அதிமுக கூட்டணி, விஜயின் தவெக மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு கடும் பின்னடைவை சந்திக்கும் என்றும் லோக்போல் சார்பில் நடத்தப்பட்ட தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. மே 4 ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, சீமானின் நாம் தமிழர், விஜயின் தமிழக வெற்றிக் கழகம், ராமதாஸ் - சசிகலா கூட்டணி என்று 5 முனை போட்டி நிலவி வருகிறது.

இதில் நேரடி போட்டி என்பது திமுக கூட்டணி - அதிமுக கூட்டணி இடையே தான் உள்ளது. ஆட்சியை தக்கவைக்கும் முனைப்பில் திமுகவும், மீண்டும் ஆட்சியை அமைக்க வேண்டும் என்று அதிமுகவும் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.
புதிய கருத்து கணிப்பு
இந்நிலையில் தான் லோக்போல் (Lok Poll) சார்பில் தமிழக சட்டசபை தேர்தலையொட்டி கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு தொகுதிக்கும் சுமார் 500 பேர் என்ற அடிப்படையில் மொத்தம் 1,17,000 பேரிடம் கூறிய கருத்துகளின் அடிப்படையில் தற்போது அதன் முடிவுகள் வெளியிடப்பட்டது.
திமுக அமோக வெற்றி
அதன்படி, தமிழக சட்டசபை தேர்தலில் மீண்டும் திமுக தான் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது
திமுக கூட்டணி 181முதல் 189 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும், திமுக கூட்டணிக்கு சுமார் 40.1 சதவீத ஓட்டுகள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த கருத்து கணிப்பால் திமுகவினர் ஹேப்பியாகி உள்ளனர்.
அதிமுக - தவெகவிற்கு ஷாக்
அதேவேளையில் இந்த கருத்து கணிப்பு அதிமுக கூட்டணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. அதன்படி அதிமுக கூட்டணி 38 முதல் 42 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும். இந்த கூட்டணிக்கு 29 சதவீத ஓட்டுகள் தான் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் புதிதாக கட்சி தொடங்கிய விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 8 முதல் 10 இடங்களில் வெல்லும். தவெகவிற்கு 23.9 சதவீதம் வரையிலான ஓட்டுகள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
சீமான் நாம் தமிழர் கட்சிக்கு அதிர்ச்சி
மேலும் இந்த தேர்தலில் மீண்டும் தனித்து களம் காணும் சீமானின் நாம் தமிழர் கட்சி ஒரு இடம் கூட ஜெயிக்காது. இந்த கடசிக்கு வெறும் 4.9 சதவீத ஓட்டுகள் மட்டுமே கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது சொந்த மாவட்டமான சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்டுள்ளார். அங்கு அவர் வெற்றி பெறுவார் என்று கட்சியினர் நம்பிக்கை தெரிவித்து வரும் நிலையில் இந்த கருத்து கணிப்பில் நாம் தமிழர் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் தவிற பிற கட்சிகளுக்கு 2.1 சதவீதம் வரையிலான வாக்குகளை பெறும். இருப்பினும் யாரும் வெற்றி பெறமாட்டார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications