ஸ்டாலினுக்கு எதிராக கம்பு சுற்றும் பாமக.. இப்படியே போய்ட்டு இருந்தா எப்படி?.. என்ட் தான் என்ன?!!

ராமதாஸ் குறித்த முக ஸ்டாலினின் பேச்சிற்கு பாமகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    பாமக கூட்டணியை பார்த்து ஏன் இப்படி பதறுகிறது திமுக?- வீடியோ

    சென்னை: "சூடு சொரணை இல்லையா"ன்னு டாக்டர் ராமதாசை பார்த்து மு.க.ஸ்டாலின் கேட்டாலும் கேட்டார்.. திமுகவுக்கு எதிரான நடவடிக்கையில் பாமகவினர் ரவுண்டு கட்டி இறங்கி உள்ளனர்.

    நேற்று தமிழகத்தில் பெரும் திருப்புமுனையாக அதிமுக - பாமக கூட்டணி உருவானது. இதனால் அதிமுக தரப்பைவிட பாமகதான் நிறைய விமர்சனங்களுக்கு உள்ளானது.

    காரணம், 15 வருடங்கள் கழித்து கூட்டணி என்பதாலும், யாரை கழுவி கழுவி ஊற்றினார்களோ அதே அதிமுகவுடனேயே மீண்டும் கூட்டணி வைத்ததால்தான்.

    யாருடன் கூட்டணி?

    யாருடன் கூட்டணி?

    இது சம்பந்தமாக கருத்து சொன்ன திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், டாக்டர் ராமதாஸை, சூடு இல்லை சொரணை இல்லை, வெட்கம் இல்லை என்று மிகக் கடுமையாக தாக்கிப் பேசினார். இதுவரை டாக்டர் ராமதாஸ் யாருடனெல்லாம் கூட்டணி அமைத்தார் என்பது குறித்த விவரங்களையும் திமுகவினர் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

    திமுக ஒழுங்கா?

    திமுக ஒழுங்கா?

    இது பாமகவினருக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் திமுகவுக்கு எதிராக குறிப்பாக ஸ்டாலினை தாக்கியும், அவருக்கு எதிராகவும் ட்வீட்கள், போட்டோக்களை வைரலாக்கி வருகின்றனர். பாமகவை மட்டும் மாறி மாறி கூட்டணி வைத்ததாக குறை சொல்லுகிறீர்களே, திமுக மட்டும் என்ன ஒழுங்கா என்று கேட்பது போல ஒரு போட்டோவை பதிவிட்டுள்ளனர்.

    தொடரும்

    தொடரும்

    அதில் வருஷ வாரியாக யாருடன் திமுக கூட்டணி வைத்தது என்று கொட்டை எழுத்தில் உள்ளது. 1971-காங்கிரஸ், 1977-ஜனதா பார்ட்டி, 1980-காங்கிரஸ், 1984-ஜனதா பார்ட்டி, 1989-ஜனதா தள், 1991-3-ம் அணி, 1996-ஜனதா, 1998-ஜனதா, 1999-பாஜக, 2004-காங்கிரஸ், 2019-காங்கிரஸ்.. என்று எழுதப்பட்டு.. "தொடரும்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    கம்பு சுத்துகிறார்

    கம்பு சுத்துகிறார்

    இதில் ஒரு மைதானத்தின் நடுவில் ஸ்டாலின் டி-ஷர்ட் பேன்ட் இன் செய்து கொண்டு கையில் கையில் கம்பு சுத்தி விளையாடுவது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. அதாவது மாறி மாறி மத்தியில் கூட்டணி அமைத்து வருவதைதான் இப்படி சிம்பாலிக்காக சொல்லி இருக்கிறார்களாம்.

    வைரல் போட்டோ

    வைரல் போட்டோ

    ஸ்டாலின் கம்பு சுத்தி விளையாடுவதை சுற்றிலும் கட்சிக்காரர்கள், மீடியாக்கள், பாதுகாப்பு வீரர்கள், நின்று கொண்டு கைதட்டி ரசிப்பது போல உள்ளது. இதுதான் இப்போது வைரலாகி கொண்டிருக்கிறது. இப்படியே போய்ட்டு இருந்தா எப்படி? இதுக்கு என்ட் தான் என்ன?!!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+