விஜய்யால் கதறும் திமுக- அதிமுக.. தவெகவால் திணறும் திராவிட கட்சிகள்.. மாஸ் காட்டும் செங்கோட்டையன்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் கட்சி தொடங்கிய 2 ஆண்டுகளிலேயே விஜய் ஆட்சியை பிடித்து முதல்வராகிவிட்டார். இது இருபெரும் திராவிட கட்சிகளான திமுக, அதிமுகவிற்கு பெரிய ஷாக்காக உள்ளது. இந்த ஷாக்கில் இருந்து இருகட்சிகளும் மீள்வதற்குள் விஜய்யின் தவெக அடுத்த அதிர்ச்சி வைத்தியத்தை கொடுப்பதால் இருகட்சிகளின் நிர்வாகிகளின் புலம்ப தொடங்கி உள்ளனர். அப்படி என்ன நடக்கிறது? வாங்க பார்க்கலாம்.
தமிழக சட்டசபை தேர்தலில் ஆளும் திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக ஆகியவற்றை வீழ்த்தி முதல்வர் அரியணையில் ஏறியுள்ளார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்.

1967 ம் ஆண்டில் இருந்து தமிழ்நாட்டை திமுக அல்லது அதிமுக தான் மாறி மாறி ஆட்சி செய்த நிலையில் முதல் முறையாக இருகட்சிகளையும் எதிர்க்கட்சிகளின் வரிசையில் அமர வைத்துள்ளார் முதல்வர் விஜய்.
திமுக வீழ்ச்சி - அதிமுகவில் பிளவு
இந்த தோல்வியில் இருந்து மீண்டு வருவது எப்படி? தோல்விக்கான காரணம் என்ன? என்பது பற்றி திமுக ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த சரிவில் இருந்து மீளும் முனைப்பில் குழு அமைத்து செயல்பட்டு வருகிறது. ஆனால் அதிமுக நிலைமையோ பரிதாபமாக உள்ளது.
அதிமுகவில் உள்ள 47 எம்எல்ஏக்கள் இரு பிரிவாக செயல்பட்டு வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 22 எம்எல்ஏக்களும், எஸ்பி வேலுமணி தலைமையில் 25 எம்எல்ஏக்களும் செயல்பட்டு வருகின்றனர்.
தவெகவின் அடுத்த ஷாக்
உண்மையில் விஜய்யின் அரசியல் வருகை என்பது இரு திராவிட கட்சிகளுக்கும் பெரும் சவாலை ஏற்படுத்தி உள்ளது. இப்படியான சூழலில் தான் விஜய் இருகட்சிகளுக்கும் அடுத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளார். சட்டசபை தேர்தலில் வீழ்த்தியதோடு மட்டுமின்றி தற்போது அந்த கட்சிகளின் நிர்வாகிகளை தொடர்ந்து தவெகவில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.
கட்சி மாறும் நிர்வாகிகள்
இதனால் உள்ளாட்சி தேர்தலை மனதில் வைத்து திமுக மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலரும் தவெகவில் ஐக்கியமாகி வருகின்றனர். சென்னை முதல் கன்னியாகுமரி வரை தவெகவில் இணையும் நிர்வாகிகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. குறிப்பாக கொங்கு மண்டலத்தில் திமுக, அதிமுகவிற்கு குட்பை சொல்லும் நிர்வாகிகளின் எண்ணிக்கை பிற இடங்களை ஒப்பிடும்போது அதிகமாக உள்ளது.
கொங்குவில் அதிகம்
அதன்படி சமீபத்தில் மட்டும் ஈரோடு திமுக மாநில நிர்வாகி எல்லோராபாளையம் ஆர். சிவக்குமார், நாமக்கல் கிழக்கு மாவட்ட பொருளாளர் ஏ.கே. பாலச்சந்தர், ராசிபுரம் நகராட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் ராம்குமார், 'கேட்' தங்கவேல் உள்ளிட்டவர்கள் அடங்குவர்.
அதேபோல அதிமுகவை எடுத்து கொண்டால் முன்னாள் அமைச்சர் கேவி ராமலிங்கமும், அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் சேர்ந்தார். அதுமட்டுமின்றி இன்று எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த மாவட்டமான சேலம் மாநகர அதிமுக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் கண்ணன் அவரது மகன் சஞ்சய் ஆகியோர் செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர்.
இதுதவிர கொங்கு மண்டலத்தில் பல முக்கிய நிர்வாகிகளை தவெக நோக்கி இழுக்கும் வேலையில் செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கவலையில் திமுக - அதிமுக
இது திமுக, அதிமுக என்று இரு திராவிடக் கட்சிகளையும் கவலைப்படுத்தியுள்ளது. மேலும் இது ஒரு தொடக்கமே என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்னும் பலரும் தவெகவில் சேர தயாராகி வருகின்றனர். இதனால் உள்ளாட்சி தேர்தல் நெருங்க நெருங்க இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று திமுக, அதிமுகவினர் அஞ்சுகின்றனர்.
இதுபற்றி அந்த கட்சிகளை சேர்ந்தவர்கள் கூறுகையில், ''உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை அறிவித்தால், சட்டசபை தேர்தல் வெற்றியை உள்ளாட்சியிலும் தவெக பெறும் என பலரும் நினைக்கின்றனர். இதனால் தான் திராவிடக் கட்சிகளின் பலர் ஆளும் கட்சியை நோக்கி நகர்கிறார்கள்'' என புலம்பி வருகின்றனர்.
-
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
ராமதாஸின் விஸ்வாசிக்கு வலைவீசும் விஜய்.. தவெகவில் இணையும் அதிமுக மாஜி அமைச்சர் செல்லப்பாண்டியன்? -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
1.5 டிரில்லியன் டாலர் இலக்கு.. ஸ்டாலின் வைத்த டார்கெட்டை உயர்த்திய விஜய்.. மோடியிடம் சொன்னது என்ன? -
கோவைக்கு எய்ம்ஸ் தேவை! நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வைத்த கோரிக்கைகள் என்ன? -
“கூட்டணியில் யாருமே இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லை.. சொந்த பலம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி -
திமுகவை உதறும் துரை வைகோ.. மதிமுக பொதுக்குழு அதிரடி முடிவு? 2 எம்எல்ஏகள் ராஜினாமா? -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
துடி துடித்த தூத்துக்குடி.. குடும்ப கவுரவத்துக்காக நடந்த கொடூரம்! 19 வயது இளம்பெண் ஆணவக்கொலை!











Click it and Unblock the Notifications