ஹோட்டல் சாப்பாடு வயிற்றுக்கு சேராது! சமையல் மாஸ்டர்களை ஈரோட்டுக்கு அழைத்து வந்த அரசியல் கட்சியினர்!
ஈரோடுக்கு சமையல் மாஸ்டர்களை அழைத்து வந்த அரசியல்கட்சியினர்.
ஈரோடு: ஈரோடு கிழக்குத் தொகுதியில் முகாமிட்டு தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள திமுக மற்றும் அதிமுகவினர் கையோடு தங்கள் ஊர்களிலிருந்து சமையல் மாஸ்டர்களையும் அழைத்து வந்திருக்கின்றனர்.
ஹோட்டல் சாப்பாடு பலருக்கு வயிற்றுக்கு சேராமல் போகக்கூடும் என்பது ஒரு காரணம் என்றாலும் கூட முக்கியக் காரணம் செலவு மிச்சமாகும் என்பதே.
இதனிடையே ஈரோட்டில் விடுதி அறைகளை வாடகைக்கு எடுத்து தங்கினால் செலவு கட்டுபடியாகாது என்பதால் அங்குள்ள வீடுகளை வாடகைக்கு எடுத்து அரசியல் கட்சியினர் தங்கியுள்ளனர்.

ஈரோடு கிழக்கு
ஈரோடு கிழக்குத் தொகுதி முழுவதும் ''பெரியோரே தாய்மாரே.. போடுங்கம்மா ஓட்டு..'' என்ற முழக்கங்கள் தான் திரும்பிய திசையெல்லாம் கேட்கின்றன. அந்தளவுக்கு அங்கு தேர்தல் களம் மிக பரபரப்பாக இருந்து வருகிறது. அமைச்சர்கள் அனைவரும் ஈரோடு கிழக்கில் முகாமிட்டிருப்பதால், அவர்களுடன் அவரவர் மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான திமுக நிர்வாகிகள் தேர்தல் பணிகளுக்காக ஈரோடு வந்திருக்கின்றனர்.

பெரிய டீம்
இதேபோல் அதிமுக தரப்பிலும் முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் என ஒரு பெரிய டீம் ஈரோடு கிழக்கில் முகாமிட்டு தேர்தல் பணியாற்றி வருகிறது. இவர்களுக்கு பக்கபலமாக அதிமுக கீழ்மட்ட நிர்வாகிகள் பலர் வெளியூர்களிலிருந்து ஈரோடு வந்து முகாமிட்டுள்ளனர். இப்படியாக திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் ஈரோட்டில் தங்கியுள்ள சூழலில், தங்கள் ஊர்களில் இருந்து சமையல் மாஸ்டர்களை கையோடு அழைத்து வந்து தினமும் வகைவகையாக சாப்பாடு சமைத்து சாப்பிட்டு வருகின்றனர்.

அலைந்து திரிந்து
எல்லா வேளையும் ஹோட்டலில் சாப்பிட்டால் அது பலருக்கு வயிற்றுக்கு சேராமல் போகக்கூடும் என்பதாலும் செலவு எங்கேயோ போய்விடும் என்பதாலும் சமையல் மாஸ்டர்களை பணியமர்த்தி தாங்கள் அழைத்து வந்த நிர்வாகிகளுக்கு சாப்பாடு கொடுத்து வருகிறார்கள் அமைச்சர்களும், மாஜி அமைச்சர்களும். ஓட்டுக்கேட்டு அலைந்து திரிந்து வரும் நிர்வாகிகளுக்கு மட்டன், சிக்கன், என அசைவ உணவுகளுக்கு பஞ்சமே இல்லாமல் பரிமாறப்படுகிறது.

டீ கடைகளில் கூட்டம்
இதனிடையே ஈரோடு கிழக்குத் தொகுதிக்குட்பட்ட தேநீர் கடைகள் அனைத்திலும் வியாபாரம் சக்கை போடு போட்டு வருகிறது. தொகுதி முழுவதும் திமுக, அதிமுக கரைவேட்டிகள் தான் அதிகம் தென்படுகிறதே தவிர தேமுதிகவினரை தேடி பார்க்க வேண்டிய நிலை உள்ளது.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications