திமுக VS அதிமுக.. தமிழக சட்டசபை தேர்தலில் அதிக செலவு செய்தது யார்? ரூ.1 கோடி மட்டுமே செலவிட்ட NTK

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் செய்த செலவுகள் குறித்த விவரங்கள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன்படி திமுக மொத்தம் ரூ.197 கோடி செலவு செய்ததாகவும், அதிமுக ரூ.116 கோடி செலவு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாம் தமிழர் கட்சி ரூ.1.38 கோடி செலவிட்டுள்ள நிலையில் காங்கிரஸை விட பாஜக அதிகமாக செலவழித்தது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தில் திமுக தாக்கல் செய்துள்ள அறிக்கையில், ''தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களின் செலவுக்காக நேரடியாக ரூ.47.95 கோடி வழங்கப்பட்டது. தேர்தல் வியூக நிறுவனமான 'பென்' நிறுவனத்துக்கு ரூ.65.28 கோடி வழங்கப்பட்டது. மீதமுள்ள பிரசாரம், விளம்பரம், பொதுக்கூட்டம், நட்சத்திர பேச்சாளர்களின் செலவு செய்யப்பட்டது. மொத்தமாக ரூ.197 கோடி செலவிடப்பட்டுள்ளது'' என கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் திமுக தனது வங்கி கணக்கில் மொத்தம் ரூ.319.39 கோடி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

dmk aiadmk election expenditure

அதேபோல் அதிமுக தாக்கல் செய்துள்ள அறிக்கையில்,''அதிமுக தனது பொதுவான தேர்தல் செலவுக்காக ரூ.109 கோடியை செலவு செய்தது. இதில் தேர்தல் வியூகம் வகுத்து கொடுத்த பிரமாண்யா ஸ்ரேட்டஜி கன்சல்டிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு ரூ.103.98 கோடி வழங்கப்பட்டது. இந்த நிறுவனம் சார்பில் சமூக வலைதளங்களில் புரோமேஷன், தொலைக்காட்சி மற்றும் இணையதளங்களில் விளம்பரங்கள் செய்யப்பட்டன.

வேட்பாளர்களின் செலவிற்காக ரூ.2.78 கோடி செலவிடப்பட்டது. இதுதவிர ரூ.4.11 கோடி என்பது தேர்தல் அறிக்கை தயாரிக்க பயன்படுத்தப்பட்டது'' என்று கூறப்ட்டுள்ளது. இந்த செலவுகள் போக அதிமுக தனது வங்கி கணக்கில் ரூ.295.98 கோடி இருப்பதாக கூறியுள்ளது.

இதுதவிர பாஜக தமிழக சட்டசபை தேர்தலுக்காக ரூ.51.56 கோடி செலவிட்டுள்ளது. இதில் ரூ.31.57 கோடியை தமிழக பாஜகவும், ரூ.19.99 கோடியை பாஜக தேசிய தலைமையும் செலவழித்துள்ளது. காங்கிரஸ் கட்சி ரூ.22.25 கோடியையும் செலவிடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர்களின் செலவிற்காக ரூ.7 கோடியை வழங்கி உள்ளது.

சீமானின் நாம் தமிழர் கட்சி ரூ.93.29 லட்சத்தையும் செலவிட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்தில் கணக்கு காட்டி உள்ளது. நாம் தமிழர் கட்சி ரூ.1.38 கோடி செலவிடடுள்ளதாக கூறியுள்ளது. இதுதவிர பகுஜன் சமாஜ் கட்சி ரூ.2.17 கோடியையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரூ.1.77 கோடியையும் செலவிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆளும் கட்சியாக இருக்கும் முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்னும் தேர்தல் செலவு தொடர்பான விவரங்கள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+