ஓவர்.. ஓவர்! காங்கிரஸ் கட்சிக்கு 10 சீட்! திமுக காங்கிரஸ் இடையே இன்று தொகுதி பங்கீடு கையெழுத்தானது!
சென்னை: திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகி உள்ளது. திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் முன்னிலையில் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். தமிழ்நாட்டில் 9, புதுச்சேரி 1 என காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் சீட் ஷேரிங்: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், தொகுதிப் பங்கீடு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் கொமதேக கட்சிகளுக்கு ராமநாதபுரம் மற்றும் நாமக்கல் என தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
விசிகவுக்கு 2 சீட், மதிமுகவுக்கு 1 சீட் என ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மாநிலங்களவை தேர்தலில் 1 இடம் ஒதுக்க ஒப்புக்கொண்டுள்ளது திமுக. மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு லோக்சபா தேர்தலில் போட்டியிட திமுக சீட் ஒதுக்கவில்லை. மநீம, திமுக கூட்டணிக்கு எதிராக 40 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்யும் என கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்கு?: மக்களவைத் தேர்தல் தொடர்பாக, திமுக கூட்டணியுடன் முதன் முதலில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கிய காங்கிரஸ் கட்சியுடன் தற்போது உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. திமுகவுடன் காங்கிரஸ் தலைமை தொடர்ந்து தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்களான முகுல் வாஸ்னிக் மற்றும் அஜய்குமார் மற்றும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கேசி வேணுகோபால் ஆகியோர் டெல்லியில் இருந்து இன்று சென்னை வருகை தந்தனர்.
காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் கட்சி நிர்வாகிகளுடன் மேலிட தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர்கள் அண்ணா அறிவாலயம் சென்றனர். அதன்பிறகு, திமுக-காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு திமுக - காங்கிரஸ் இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. கடந்த 2019 மக்களவை தேர்தலை போன்றே, திமுக கூட்டணியில் இந்த முறையும் தமிழ்நாட்டில் 9, புதுச்சேரியில் ஒன்று என 10 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
ஸ்டாலினும் ஆலோசனை: முன்னதாக, காங்கிரஸ் கட்சியுடனான தொகுதிப் பங்கீடு குறித்து திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில், டிஆர் பாலு உள்ளிட்ட தொகுதி பங்கீட்டு குழுவினருடன் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் கட்சி சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் 39 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. கேரளா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். தமிழ்நாட்டிலும் தொகுதிப் பங்கீடு நிறைவடைந்துள்ள நிலையில் இங்கும் விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.
-
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மதிமுக - இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் விரும்பும் தொகுதிகள் எது? திமுக கையில் முடிவு.. இதோ லிஸ்ட் -
தேனியில் உள்ள 4 தொகுதிகளில் 3ல் உதயசூரியன் உதிப்பது உறுதி.. பெரியகுளம் ரிசல்ட் விஜய் கையில் இருக்கு! -
நள்ளிரவில் ‘செக்’ வைக்கும் காக்கிகள்.. சென்னையில் இரவு நேரத்தில் வெளியே போறீங்களா? இதை நோட் பண்ணுங்க -
தனித்தொகுதிகள்.. கோட்டையை இழந்த அதிமுக... களம் வென்ற திமுக! 2016 vs 2021 vs 2026 என்ன நடக்கும்? -
“எம்எல்ஏ சீட் வாங்கித் தருகிறோம்”.. தேனி மாவட்ட திமுக பிரமுகரிடம் ரூ.1.30 கோடி மோசடி செய்த கும்பல்! -
டிபன்டர் காருடன் போஸ் கொடுத்த.. பிரேமலதா! திமுகவுக்கு தேவையில்லாத ஆணி.. நெட்டிசன்கள் கொந்தளிப்பு -
கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி முதல் கல்வி கடன் ரத்து வரை! 2021ல் திமுக, அதிமுக கொடுத்த வாக்குறுதிகள்! -
BJP- TVK- DMK: தவெகவில் இருந்து விலகிய நடிகை ரஞ்சனா நாச்சியார் திமுகவில் ஐக்கியம்! -
சொத்து கணக்கை காட்டுவாரா சங்கீதா விஜய்? தவெக தலைவர் மொத்த மதிப்பும் இவ்வளவா? திமுக மாஸ்டர் பிளான் -
கோவையை விடமாட்டோம்.. 3 தொகுதிகளை குறிவைத்த காங்கிரஸ்.. திமுக கூட்டணியில் முட்டி மோதும் கட்சிகள் -
யார் பெரிய தலை? கதர் கட்சியில் ’கை’கலப்பு! 2 ஆக பிரிந்த நிர்வாகிகள்! டெல்லிக்கு சென்ற பஞ்சாயத்து!












Click it and Unblock the Notifications