ஸ்டாலின் டீ குடிக்கச் சொன்னார்! துரைமுருகன் அன்பாக பேசினார்! சிரித்த முகத்துடன் வந்த K.s.அழகிரி!
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி சிரித்த முகத்துடன் வெளியே வந்தார்.
மேலும், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தன்னிடம் அன்பாக பேசியதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தேநீர் குடிக்க கூறியதாகவும் தெரிவித்தார்.
கடந்த சட்டமன்ற தேர்தலின் போதும் திமுகவுடன் இடப்பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட கே.எஸ்.அழகிரி கண்ணீர் விட்டு அழுதது இங்கு கவனிக்கத்தக்கது.

நகர்ப்புற உள்ளாட்சி
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ள நிலையில், திமுக காங்கிரஸ் இடப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது. அந்த வகையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டார்.

திமுக பரிசீலனை
காங்கிரஸ் போட்டியிட விரும்பும் இடங்களை திமுக தலைமையிடம் எடுத்துக் கூறியிருப்பதாகவும் தாங்கள் கேட்டுள்ள இடங்களை பரிசீலிப்பதாக திமுக கூறியதாகவும் சிரித்த முகத்துடன் பேட்டியளித்தார் கே.எஸ்.அழகிரி. இந்தப் பேச்சுவார்த்தைக்கும் காங்கிரஸ் மேலிட தலைமைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் முழுக்க முழுக்க மாவட்ட அளவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இன்னும் ஓரிரு நாட்களில் வேட்பாளர்களை அறிவிப்போம் எனவும் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

சுமுக பேச்சுவார்த்தை
பல இடங்களில் இடப்பங்கீடு தொடர்பாக சுமூக பேச்சுவார்த்தை நடைபெற்றது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். மேலும், மேயர், நகர்மன்ற தலைவர் பதவியிடங்கள் குறித்து தேர்தல் முடிவுக்கு பிறகு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என கே.எஸ்.அழகிரி கூறினார். முதலமைச்சர் தங்களிடம் அதிகம் பேசுவதில்லை என நேற்று நடைபெற்ற திருமண விழா ஒன்றில் கே.எஸ்.அழகிரி குறைபட்டுக் கொண்ட நிலையில், இன்று முதலமைச்சர் தன்னை தேநீர் குடிக்கச் சொன்னதாகவும் துரைமுருகன் அன்பாக தன்னிடம் பேசியதாகவும் கூறியிருக்கிறார் கே.எஸ்.அழகிரி.

எழுந்து நின்று
இதேபோல் பேச்சுவார்த்தைக்கு சென்ற தன்னை பேச்சுவார்த்தை குழுவினர் எழுந்து நின்று வரவேற்றதாகவும் சிரித்த முகத்துடன் கூறினார் கே.எஸ்.அழகிரி. உள்ளே போன தங்களுக்கு தேனீர் கொடுக்க முதல்வர் ஸ்டாலின் கூறியதாகவும், தேனீர் குடித்தபடியே பேச்சுவார்த்தை நடத்தினோம், துரைமுருகன் அன்பாக பேசினார் என்றும் அழகிரி தெரிவித்தார். கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது திமுகவிடன் 25 இடங்களை பெறுவதற்குள் பல முறை தண்ணீர் குடித்த கே.எஸ்.அழகிரி, இந்த முறை சுமூகமான பேச்சுவார்த்தை சென்று கொண்டிருப்பதால் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார் என்கிறார்கள் காங்கிரஸ் வட்டாரத்தில். சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீட்டின்போது அழகிரி கண்களில் கண்ணீர் வந்துவிட்டதாக செய்திகள் வெளியானது நினைவிருக்கலாம்.
-
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார்












Click it and Unblock the Notifications