Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுக -காங்கிரஸ் கூட்டணியை.. உடைக்க முயன்ற பிரவீன் சக்ரவர்த்தி! கண்கள் சிவந்த ராகுல்! விஜய் செம மூவ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய தேசிய காங்கிரஸின் தொழிற்துறை பிரிவுத் தலைவராகவும், அக்கட்சியின் தரவு பகுப்பாய்வுப் பிரிவின் தலைவராகவும் செயல்பட்டு வரும் பிரவீன் சக்கரவர்த்தி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் காங்கிரஸ் தலைமை தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மூத்த காங்கிரஸ் தலைவர் கே.சி. வேணுகோபால் இந்தக் நடவடிக்கைகளை நேரடியாகக் கண்காணித்து வருவதாகவும், இது தொடர்பாக தேசிய அளவில் முக்கிய விவாதங்கள் நடைபெற்று வருவதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் பிரச்சார உத்திகளை வகுப்பதில் பிரவீன் சக்கரவர்த்தி முக்கியப் பங்காற்றினார். முக்கியமாக தற்போது ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு விவகாரத்தில் ராகுல் காந்திக்கு தகவல்களை திரட்டியதில் அவருக்கு முக்கிய பங்கு உள்ளது.

குறிப்பாக, தரவு மற்றும் அரசியல் பகுப்பாய்வு தொடர்பான விஷயங்களில் ராகுல் காந்தியின் முக்கிய ஆலோசகராக அவர் கருதப்பட்டார். எனினும், கடந்த சில மாதங்களாகத் தமிழகத்தில் அவரது செயல்பாடுகள் கட்சிக்குள் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளன.

பிரவீன் சக்ரவர்த்தி மீது ராகுல் கோபம்

பிரவீன் சக்ரவர்த்தி மீது ராகுல் காந்தி கோபத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. காங்கிரஸ் வட்டாரங்களின் கூற்றுப்படி, தமிழகத்தில் வலுவான கூட்டணிக் கட்சிகளாக இருக்கும் திமுக மற்றும் காங்கிரஸ் இடையே குழப்பத்தையும் தவறான புரிதலையும் உருவாக்க பிரவீன் சக்ரவர்த்தி முயன்றுள்ளார். கூட்டணி தொடர்பான சில முடிவுகளில் அவரின் தலையீடு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என காங்கிரஸ் தலைமை கருதியுள்ளது.

விஜய் சந்திப்பு

காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்ரவர்த்தி தவெக விஜய் உடன் சந்திப்பு நடத்தி உள்ளார். அரசியல் விவகாரங்கள் தொடர்பாக இரண்டு பேரும் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

DMK anger Congress set to act against Praveen Chakravarthy for meeting TVK Vijay

கடந்த சில நாட்களுக்கு முன் விஜயை பாராட்டும் விதமாக பிரவீன் சக்ரவர்த்தி போஸ்ட் செய்திருந்தார். இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை இருவரும் சந்திப்பு நடத்தி உள்ளனர். இதில் கூட்டணி தொடர்பாகவும், ஆளும் திமுக தொடர்பாகவும், தமிழக அரசியல் விவகாரங்கள் தொடர்பாகவும் பேசியதாக கூறப்படுகிறது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு திடீரென ஆதரவாக பேசி இருக்கிறார். அவர் செய்துள்ள போஸ்ட் பெரிய அளவில் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி செய்துள்ள போஸ்டில், இந்திய அரசியல் கட்சிகள், தங்கள் தலைவர்களின் பேரணிகளுக்குப் பெரும் கூட்டத்தைக் கூட்ட கணிசமான நேரம், பணம் மற்றும் உழைப்பைச் செலவிட்டு வருகின்றன. ஆனால், தமிழக வெற்றி கழகத்தின் நிலைமை இதற்கு நேர் எதிரானது. தங்கள் பேரணிகளில் அதிக மக்கள் கூடுவதால், கூட்டத்தைக் குறைப்பதே அவர்களுக்குள்ள சவாலாக உள்ளது, இது பலருக்கும் வியப்பளிக்கிறது என்று விஜய்யை, தமிழக வெற்றிக் கழகத்தை பாராட்டுவது போல பேசி இருந்தார்.

பிரவீன் சக்ரவர்த்தி ராகுல் கோபம்

இதன் காரணமாக பிரவீன் சக்ரவர்த்தி மீது ராகுல் காந்தி கோபத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. பிரவீன் சக்கரவர்த்தி கூட்டணி கட்சிகளிடையே நம்பிக்கையைக் குலைக்கும் வகையில் செயல்படுகிறார் தமிழக காங்கிரஸ் தலைகள் நம்புகின்றனர். இதன் காரணமாக, அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது தவிர்க்க முடியாதது என்று தேசிய தலைமை தற்போது முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

முக்கியமாக பிரவீன் சக்கரவர்த்தி விஜய் சந்திப்பும் ராகுல் காந்தியை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளதாம். காங்கிரஸ் இவருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுத்தால், அவர் TVK-வில் சேரக்கூடும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சாத்தியக்கூறு காங்கிரஸ் தலைமைக்குள் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாரிந்த பிரவீன் சக்ரவர்த்தி?

காங்கிரஸ் நிபுணர்கள் & தரவு பகுப்பாய்வு குழுவின் தலைவராக பிரவீன் சக்ரவர்த்தி இருக்கிறார். இவர் முன்னாள் மைக்ரோசாப்ட்/ஐபிஎம்/வால் ஸ்ட்ரீட் பொருளாதாரம் பிரிவுகளில் பணிகளை செய்துள்ளார். கடந்த லோக்சபா தேர்தலில் இவர் மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட இருந்தது. ஆனால் திமுக இதை கடுமையாக எதிர்த்தது. இவருக்கும் திமுக நிர்வாகிகளுக்கும் இருக்கும் மோதல் உலகம் அறிந்தது.

இதன் காரணமாகவே அவரை கடுமையாக எதிர்த்தது. அப்போதே இவர் ஆட்சியில் பங்கு கேட்டு விவாதங்களை ஏற்படுத்தி இருந்தார். அப்போது திமுக எதிர்ப்பால் இவருக்கு பதிலாக சுதாவிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு அவர் மயிலாடுதுறை காங்கிரஸ் எம்பியாக வெற்றியும் பெற்றார். அதன்பின் ராஜ்ய சபாவிற்கு இவர் செல்ல முயன்றார். ஆனால் இதற்கு எதிராகவும் காங்கிரஸிடம் திமுக பிரஷர் போட்டதாக கூறப்பட்டது.

இப்படிப்பட்ட நிலையில்தான் பிரவீன் சக்ரவர்த்தி தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு திடீரென ஆதரவாக பேசி இருக்கிறார். அவர் காங்கிரசில் இருந்து நீக்கப்பட்டால் தவெகவில் இணைவார் என்று கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+