திமுக முப்பெரும் விழா 2021.. விருதுகள் பட்டியல் அறிவிப்பு - ழுழு தகவல்
சென்னை: வரும் செப்டம்பர் 15, 16, 17 ஆகிய தேதிகளில் முப்பெரும் விழா கொண்டாடப்படும் நிலையில், அதற்கான விருதுகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது,
Recommended Video
திமுக சார்
பில் வரும் செப்டம்பர் 15 முதல் 17 வரையிலான தேதிகளில் முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டில் முப்பெரும் விழாவில் விருது பட்டியல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திக - திமுக
திமுகவின் தாய் கழகமான திராவிட கழகத்தை நிறுவியவர் பெரியார். திராவிட இயக்கங்களின் தந்தையாகக் கருதப்படும் பெரியாரின் பிறந்த நாள் செப்டம்பர் 17 கொண்டாடப்படுகிறது. தொடக்கக் காலத்தில் பெரியாருடன் இணைந்து அண்ணாவும் திராவிடர் கழகத்திலேயே பயணித்து வந்தார். 1940-களின் பிற்பகுதியில் பெரியாருக்கும் அண்ணாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து அண்ணா 1949ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி சென்னை ராபின்சன் பூங்காவில் திராவிட முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினர்.

முப்பெரும் விழா
தனிக்கட்சி தொடங்கினாலும் கூட பெரியார் மீது அண்ணா மிகுந்த மரியாதை கொண்டிருந்தார். இதனால் திமுகவில் தலைவர் பதவி பெரியாருக்காக காலியாக விடப்படும் என்று அறிவித்துவிட்டு, கடைசி வரை பொதுச் செயலாளராகவே அண்ணா இருந்தார். அதேபோல அண்ணாவின் பிறந்த நாள் செப்டம்பர் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. எனவே, திமுக சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் 15, 16, 17 ஆகிய தேதிகளில் அண்ணா பிறந்த நாள், பெரியார் பிறந்த நாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாட்களை முன்னிட்டு முப்பெரும் விழா கொண்டாடப்படுவது வழக்கம்.

தலைவர்களின் பெயரில் விருதுகள்
திமுகவின் முக்கிய விழாக்களில் ஒன்றாக இருக்கும் இதில், தமிழ் அறிஞர்கள், தமிழ்ச் சமூகத்திற்குத் தொண்டாற்றியவர்கள் ஆகியோர் கவுரவிக்கப்படுவார்கள் இந்த முப்பெரும் விழாவில் பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர் ஆகிய தலைவர்களின் பெயர்களில் விருது வழங்கப்பட்டு வந்தது. திமுகவின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான அன்பழகன் மறைவுக்குப் பின், அவரது பெயரில் பேராசிரியர் விருது வழங்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

முப்பெரும் விழா விருதுகள் 2021
அதன்படி இந்த ஆண்டு திமுக முப்பெரும் விழா விருதுகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது
திமுக முப்பெரும் விழா விருது பட்டியல் 2021
பெரியார் விருது - மிசா.பி.மதிவாணன்
அண்ணா விருது - எல்.மூக்கையா
கலைஞர் விருது - கும்முடிபூண்டி கி.வேணு
பாவேந்தர் விருது - வாசுகி ரமணன்
பேராசிரியர் விருது - பா.மு.முபாரக்












Click it and Unblock the Notifications