4 தொகுதி இடைத் தேர்தல்.. திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு.. 2 மாஜி அமைச்சர்களுக்கு சீட்!
Recommended Video

சென்னை: 4 தொகுதி சட்டசபை இடைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர்களை கட்சி மேலிடம் அறிவித்துள்ளது.
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய நான்கு சட்டசபைத் தொகுதிகளுக்கு மே 19ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நான்கு தொகுதிகளிலும் திமுகவே போட்டியிடும் என அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி இன்று வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்தது.

வேட்பாளர்கள் விவரம்:
திருப்பரங்குன்றம் - டாக்டர் சரவணன்
அரவக்குறிச்சி - செந்தில் பாலாஜி
சூலூர் - பொங்கலூர் பழனிச்சாமி
ஒட்டப்பிடாரம் - எம்.சி. சண்முகையா
இவர்களில் செந்தில் பாலாஜி மற்றும் பழனிச்சாமி ஆகிய இருவரும் முன்னாள் அமைச்சர்கள் ஆவர். செந்தில் பாலாஜி அதிமுகவில் அமைச்சராக இருந்தார். சசிகலா குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர். தினகரனுடன் இணைந்து அமமுகவில் செயல்பட்டவர். சமீபத்தில்தான் விலகி வந்து திமுகவில் இணைந்தார். தற்போது அவருக்கு அவர் ஏற்கனவே போட்டியிட்டு வென்ற அரவக்குறிச்சி தொகுதியையே திமுக கொடுத்துள்ளது.
பொங்கலூர் பழனிச்சாமியின் மகன் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் சீட் தரப்படவில்லை. பொங்கலூர் பழனிச்சாமியும் தீவிரமான அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கியே இருந்து வந்தார். இந்த நிலையில் அவரை தற்போது சூலூர் தொகுதியில் வேட்பாளராக்கியுள்ளார் ஸ்டாலின்.
திருப்பரங்குன்றம் தொகுதி இடைத் தேர்தலில் போஸை எதிர்த்துப் போட்டியிட்டவர் டாக்டர் சரவணன். ஆனால் தோல்வியடைந்தார். போஸ் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர்ந்து சமீபத்தில்தான் வெற்றியும் பெற்றார். போஸ் மறைந்ததைத் தொடர்ந்து தற்போது அங்கு இடைத் தேர்தல் வந்துள்ளது, சரவணனே மீண்டும் போட்டியிடுகிறார்.
-
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்!












Click it and Unblock the Notifications