DMK: விஜய் கர்நாடகா செல்லும் அதே நாளில்.. தஞ்சையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்த திமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையை நிலைநாட்ட உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவும், டெல்டா விவசாயிகளுக்குச் சிறப்பு நிவாரணத் தொகுப்பை அறிவிக்கவும் வலியுறுத்தி தஞ்சையில் வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். விவசாயிகளின் குரலுக்குத் தூங்குமூஞ்சி த.வெ.க. அரசு செவிசாய்க்க மறுத்தால் மேலும் பெரிய அளவிலான போராட்டங்களைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

காவிரி விவகாரத்தில் தவெக அரசு மவுனம் காத்து வருவதாக திமுக கடுமையாக விமர்சித்து வருகிறது. காவிரி விவகாரம் குறித்து பேசுவதற்காக கர்நாடகாவிற்கு தமிழக முதல்வர் விஜய் ஆகஸ்ட் 3 ஆம் தேதி செல்கிறார். கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரை சந்தித்து முதல்வர் விஜய் பேச திட்டமிட்டு இருக்கிறார். விஜய்யின் இந்த சந்திப்பு சட்டப்பூர்வ போராட்டத்தை நீர்த்து போக செய்துவிடும் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருவதோடு, விஜய் கர்நாடகா போகக் கூடாது என்றும் வலியுறுத்தி வருகிறது.

DMK announces massive protest in Thanjavur on the same day Vijay visits Karnataka

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

எனினும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு தரப்பில் இருந்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை. விஜய் வருகைக்கான ஏற்பாடுகளும் கர்நாடகாவில் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஆகஸ்ட் 3 ஆம் தேதி திமுக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது. இது தொடர்பாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-

பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்றம்.. மேகதாது அணை விவகாரத்தில் மெத்தனப் போக்கு.. மேட்டூர் அணை திறக்கப்படாததால் குறுவை சாகுபடி பாதிப்பு.. அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டாமல் காலம் தாழ்த்தல்.. என விவசாயிகளை எல்லா வகையிலும் வஞ்சித்து வேதனையில் தள்ளியிருக்கிறது செயல்படாத தவெக அரசு.. தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையை நிலைநாட்ட உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவும், டெல்டா விவசாயிகளுக்குச் சிறப்பு நிவாரணத் தொகுப்பை அறிவிக்கவும் வலியுறுத்தி உதயநிதி தலைமையில் 03-08-2026 அன்று தஞ்சையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்..

படம் வெளியாவதில் சிக்கல் வரக்கூடாது

விவசாயிகளின் குரலுக்குத் தூங்குமூஞ்சி த.வெ.க. அரசு செவிசாய்க்க மறுத்தால் மேலும் பெரிய அளவிலான போராட்டங்களைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன். சொன்னதை செய்ய நேரம் கேட்ட முதல்வர் இன்னும் எவ்வளவு நேரம் வேண்டும்.. என்றாவது விவசாயிகளிடம் சொல்லியிருக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதில் இருந்தே மேகதாது அணை கட்டுவதில் கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு மாறாக இவ்விவகாரத்தில் தமிழ்நாடு முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதியதோடு தனது கடமை முடிந்துவிட்டது என மவுனம் காத்து வருகிறார்.

ஆகஸ்ட் 3 ஆம் தேதி விஜய் கர்நாடகா செல்வதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இது தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் இன்னும் வாய் திறக்காமல் இருக்கிறார். மேகதாது விவகாரம் தொடர்பாக ஒரு தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தின் மூலம் வலியுறுத்தி இருக்கின்ற நிலையில், இந்த கர்நாடக பயணம் இதனை நீர்த்து போக செய்யாதா? முதல்வரின் திரைப்படம் கர்நாடகவில் வெளியாவதில் சிக்கல் ஏற்படக்கூடாது என்பதற்கவே இது குறித்து வெளிப்படையாக பேசாமல் அமைதி காப்பதாக ஊடகங்களில் ஓயாமல் செய்திகள் வெளியாகின்றன.

யார் குரலையும் கேட்காமல்..

மாநிலத்தின் முக்கியப் பிரச்சினையில் யார் குரலையும் கேட்காமல் indifferent ஆகவும், inactive ஆகவும் இந்த அரசு இருப்பது நல்லதல்ல. அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கும் தி.மு.க.தான் அழைப்பு விடுக்க வேண்டும் என முதலமைச்சர் எதிர்பார்க்கிறாரா? அரசால் முடியாது என்றால் சொல்லிவிடுங்கள்; அதற்கும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம். இந்த ஆண்டு மேட்டூர் அணை திறக்கப்படாததால் 2,500 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டு 14 இலட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுத் தவிக்கிறார்கள். எனவே அவர்களுக்கு நிவாரணத் தொகுப்பினைக் காலம் தாழ்த்தாமல் அறிவித்திட வேண்டும்.

உதயநிதி தலைமையில் போராட்டம்

விவசாயப் பெருமக்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், காவிரி உரிமையை நிலைநாட்டுவதில் த.வெ.க. அரசின் மெத்தனப்போக்கைக் கண்டித்தும் வரும் 03-08-2026 அன்று காலை 10 மணியளவில், தஞ்சாவூர், பனகல் கட்டடம் அருகில் எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். அனைத்து விவசாயச் சங்கங்களைச் சேர்ந்த தோழர்களும், இவ்விவகாரத்தில் ஒருமித்த கருத்துடைய அனைத்து அரசியல் கட்சிகளின் தோழர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகள் விரைவில் வென்றிடத் துணை நிற்க வேண்டும். என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+