“கெஞ்சி கூத்தாடி ஆட்சியமைத்த விஜய்.. மானம், மரியாதை இழந்து ஆதரவளித்த காங்கிரஸ்” - அப்பாவு அட்டாக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "மற்ற கட்சிகளிடம் கெஞ்சிக் கூத்தாடி ஆட்சி அமைத்தார் விஜய். நேரில் சந்தித்து ஆதரவு கேட்காத தவெகவுக்கு மானம் மரியாதை இழந்து ஆதரவு கொடுத்தது காங்கிரஸ் கட்சி. இப்போது பிரதமர் வேட்பாளர் விஜய் என்பதையும் எதிர்கொள்கிறது காங்கிரஸ் கட்சி" என முன்னாள் சபாநாயகர் அப்பாவு விமர்சித்துள்ளார்.

அப்பாவு சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "2026 சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்ததும் விசிக, சிபிஐ, சிபிஐஎம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சித் தலைவர்களையும் அதிமுகவில் உள்ள ஒரு பிரிவுத் தலைவர்களின் இல்லத்திற்கும் சென்று கெஞ்சிக் கூத்தாடி ஆதரவைப் பெற்று ஆட்சியமைத்தவர் விஜய்.

DMK Appavu Slams Vijay

ஆனால் காங்கிரஸின் மூத்த தலைவர் ராகுல் காந்தியையோ தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரையோ நேரில் சந்தித்து ஆதரவு கேட்காத தவெகவுக்கு மானம் மரியாதை இழந்து ஆதரவு கொடுத்து பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட அவமானம் போதாது என்று அடுத்த பிரதமர் விஜய் தான் என்று அமைச்சர் ஒருவர் சட்டமன்றத்தில் பேசியபோது சட்டமன்ற மேஜையைத் தட்டி வரவேற்கும் காங்கிரஸ் உறுப்பினர்களின் நிலையைப் பார்த்து இந்த நாடே வெட்கித் தலைகுனிகிறது.

அமைச்சர் பதவி ஒன்றை வாங்கியதால் 100 நாட்களில் 12 ஆணவக் கொலைகள் நடந்த பின்பும் மூச்சு விடாமல் கைகட்டி வாய் பொத்தி நிற்கும் விசிக, ஆட்சிக்கு ஆதரவு கொடுத்த ஒரே காரணத்திற்காக அத்தனை கம்யூனிஸ்ட் மாணவர்கள், இளைஞர்களின் விலாசத்தையும் கண்டறிந்து அரசியல் வாழ்வை முடிப்பதற்கு தலைமைச் செயலாளர் மூலம் நடவடிக்கை எடுத்த தவெக ஆட்சியைத் தூக்கிச் சுமக்கும் இடதுசாரிகளைப் பார்க்கும்போது வேதனைப்படாமல் இருக்க முடியவில்லை.

இந்தியத் துணைக்கண்டத்தில் எல்லாக் காலத்திலும் இஸ்லாமியர்களுக்குத் துணை நின்ற திமுகவை விட்டு விலகி திடீர் தலைவர் ஆட்சிக்கு ஆதரவு கொடுத்ததால் பக்ரீத் அன்று ஆடு, மாடு, ஒட்டகம் கூட வெட்ட முடியாமல் வெட்கித் தவித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிலைமை இன்னும் பரிதாபம்.

தற்போது காக்ரோச் ஜனதா பார்ட்டி ஜென்சி இளைஞர்களிடம் ஒரு கேபினட் அமைச்சரை இழந்த பாரதப் பிரதமர் அச்சத்தில் காக்ரோச் ஜனதாவுக்கு எதிராக விஜய்யோடு இணைந்து வட இந்தியா முழுவதும் விஜய் தளபதி என்ற போலி ரீல்களைப் பல நூறு கோடி ரூபாய் செலவில் இந்தி மொழியில் தயாரித்து காக்ரோச்சுக்கும் ராகுல் காந்திக்கும் எதிராக இந்தியா முழுவதும் பரப்புவதோடு அடுத்த பிரதமர் யார் என்ற போலியான சர்வே மூலம் விஜய் மூன்றாவது இடத்திலும் காக்ரோச் நான்காவது இடத்திலும் இருப்பதைப் போன்ற பிம்பத்தை உருவாக்கி மக்களை ஏமாற்றி வருவது நாடறிந்ததே. இந்த நிலையில் விஜய் ஆட்சியைத் தூக்கிச் சுமக்கும் பெயரில்லாக் கூட்டணிக் கட்சியினர் இந்தக் கொடுமையை அறிவார்களா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+